சிறு தொழில் வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சி

இந்தியாவில் பெரிய தொழில் கூடங்களின் உற்பத்தி நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 60% மட்டுமே. மீதம் 40% உற்பத்தி சிறு, குறு தொழில்களின் மூலிலமே கிடைக்கிறது.
Published on
Updated on
4 min read

இந்தியாவில் பெரிய தொழில் கூடங்களின் உற்பத்தி நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 60% மட்டுமே. மீதம் 40% உற்பத்தி சிறு, குறு தொழில்களின் மூலிலமே கிடைக்கிறது. அதேபோல், ஏற்றுமதியில் 40% பொருள்கள் சிறுதொழில்களின் உற்பத்திதான். அதுமட்டும் அல்ல; புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கத்தில் சிறுதொழில்களின் பங்கு 45 சதவீதமாக உள்ளது. புதிய தொழில்நுட்பமும் நவீனமயமாக்கலும் பெரு நிறுவனங்களின் மனிதவளத் தேவையை குறைக்கிறதே தவிர, அதிகரிப்பதாக இல்லை.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளின் அரசு சார்ந்த வரைமுறைதான் என்ன? குறுந்தொழில் என்பது, உற்பத்தி இயந்திரங்களில் செய்யப்பட்ட முதலீடு ரூ.25 லட்சத்துக்கு குறைவாக இருத்தல் வேண்டும்.
சிறுதொழில் என்பது இயந்திரங்களில் செய்யப்பட்டுள்ள முதலீடு ரூ.5 கோடிக்குள் இருத்தல் வேண்டும். நடுத்தர தொழிற்கூடங்கள் எனப்படுவனவற்றில் இயந்திரங்களில் செய்துள்ள முதலீடு ரூ.10 கோடிக்குள் இருக்க வேண்டும். இந்த வரைமுறை பல ஆண்டுகளுக்கு ஒருமுறையே மாறுகிறது.
இந்நிலையில், பொருளாதாரத்துக்கு உயிர்நாடியாகத் திகழும் சிறு, குறு தொழில்களை ஊக்குவிப்பதற்குப் புதிய, புதிய சிந்தனைகள் தேவை. சிறுதொழில் துறையை சிறிய, சிறிய சலுகைகள், வரிகுறைப்பு, எளிய நடைமுறைகள், தாமதமில்லாத வங்கிக் கடன் ஆகியவை வாயிலாக சிறப்பாக முடுக்கிவிட முடியும். இதன் லிமூலம் இந்தியப் பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை கணிசமாக அதிகரிக்க முடியும்.
ஏற்றுமதி அதிகரித்தால் பிற நாடுகளுடனான நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறையும். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடையும்; அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிக்கும். இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த முயற்சியில் வங்கிகள் பெரும்பங்கு வகிக்க வேண்டும்.
வங்கிகள் செய்ய வேண்டியது என்ன? முதலாவதாக, சிறுதொழிலுக்குத் தரப்படும் கடன், வாராக் கடனாகிவிடுமோ என்ற அச்சம் எழுந்தால், அதை திருத்திக்கொள்ள வேண்டும். வங்கிகளின் வாராக் கடனில் மிகப் பெரும் பகுதி பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட கடன்கள்தான் என்று ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெள்ளத் தெளிவாக காட்டுகின்றன.
இன்னொரு பக்கம், 'கிரிஸில்' தர நிர்ணய அமைப்பு தனது ஆய்வறிக்கையில் கூறியிருப்பது, வங்கிகளின் கண்களைத் திறக்க உதவும் என்று நம்பலாம். அதாவது, இந்தியாவில் இயங்கும் சிறு தொழில்களுக்கு வங்கிகள் நியாயமாக கொடுக்க வேண்டிய கடனுதவியைவிட மிகவும் குறைவாகவே கொடுக்கின்றன. துல்லியமாகச் சொல்லுவதென்றால், தேவையைவிட குறைவாக, ரூ.50,000 கோடி அளவுக்கே வங்கிகள் கடன் கொடுக்கின்றன.
எனவே, தொழிலுக்குத் தேவைப்படும் மீதத் தொகையை சம்பந்தப்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வெளியாரிடம் அதீத வட்டிக்கு கடனாக வாங்குகின்றன. ஆக, சிறு தொழில்கள் சீரழிவதற்கு இதுதான் ஆரம்பப் புள்ளியாக அமைகிறது. இதுவே, ஆரோக்கியமான சிறுதொழில்கள் கூட நலிவடைவதற்கு முக்கிய காரணமாகிவிடுகிறது.
எனவே, வங்கிகள் சிறுதொழில்களுக்கு பெயரளவில் கடன் கொடுக்காமல், உரிய நேரத்தில், உரிய தொகையை கணக்கிட்டு, கடன் வழங்குவதுதான் முறை. தாமதங்கள் தவிர்க்கப்பட வேண்டும். சாலை விபத்தில் சிக்கிய நிபரை தாமதமின்றி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தால்தானே அவர் உயிர் பிழைப்பார்? அதுபோலத்தான், சிறு, குறு தொழில்களுக்கு கடன் கொடுப்பதும்.
சிறுதொழில்கள் பெரிய நறுவனங்களுக்கு சப்ளை செய்த உதிரி பாகங்களுக்கான பில் தொகையை பெரிய நறுவனங்கள் பல மாதங்களுக்கு நிலுவையில் வைத்திருப்பதும் சிறு தொழில்களை வெகுவாக பாதிக்கிறது. இதனை தவிர்ப்பதற்காக, ''எலக்ட்ரானிக் பில் ஃபேக்டரிங்'' நடைமுறை மூலிலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முன்கூட்டியே பணம் கிடைப்பதற்கு வழிவகுக்கும் புதிய திட்டம் ரிசர்வ் வங்கியின் பரிசீலனையில் இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வந்துள்ளன. ரிசர்வ் வங்கி இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
வங்கித் துறை சிறு தொழில்களுக்கு பலவகையில் உதவ வேண்டும் என்பது ஒருபுறம் இருக்க, மத்திய மாநில அரசுகள் இந்த விஷயத்தில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும். சிறுதொழில்கள் உற்பத்தி செய்யும் பொருள்கள் மத்திய -மாநில அரசுகளுக்குத் தேவைப்படும்போது, அந்த பொருள்களை பெரும் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யாமல், சிறுதொழில் நிறுவனங்களிடம் மட்டுமே கொள்முதல் செய்திட வேண்டும். இந்த நியதி பல ஆண்டுகளுக்கு முன் நடைமுறையில் இருந்தது. ஆனால், நாளடைவில் இந்த நியதி நீர்த்துப் போய்விட்டது வருந்தத்தக்கது. மீண்டும் அதை உயிர்ப்பிக்க வேண்டும். உதாரணமாக, அரசு ஊழியர்களுக்கு சீருடை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துகையில், அதற்கான ஆடைகளை சிறுதொழில் நிறுவனங்களில் கொள்முதல் செய்யலாம். இது போல எத்தனையோ வகை பொருள்கள் மத்திய -மாநல அரசுத்துறை அலுவலகங்களுக்குத் தேவைப்படுகின்றன.
அடுத்து, ஏற்றுமதி செய்திடும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள் தரப்படுகின்றன. இதற்கான விதிமுறை மற்றும் நடைமுறை அவ்வப்போது மாறுகின்றன. வரிச்சலுகை தொடர்பான நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்.
தற்போது ஏற்றுமதியில் கடும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுதொழில்கள் மட்டுமல்லாமல் பெரும் தொழில்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்றுமதி சுணக்கம் சர்வதேச பொருளாதார மந்த நிலையினால் மட்டும் ஏற்படுவதில்லை. உள்நாட்டில் ஏற்படும் மாற்றங்களாலும் ஏற்றுமதி சுணக்கம் ஏற்படுவது கண்கூடு.
இந்தியாவில் பண மதிப்பு நீக்கம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து சிறு, குறு தொழில்கள் விடுபடுவதற்குள், ஜி.எஸ்.டி. புதிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. அதிலிருந்து பல சிறு தொழில்கள் இன்னமும் மீளவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து 2018-ஆம் ஆண்டு மார்ச் வரையிலான காலகட்டத்தில், பல சிறு, குறு தொழில்கள் நலிவடைந்தன. இதற்கு புள்ளி விவரங்கள் தேவை இல்லை. கண்முன் தெரிகிறது.
தமிழ்நாட்டின் தொழில் நகரங்களான கோவை, திருப்பூர் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலிலம் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
மேற்கூறிய பகுதிகளில் இயங்கும் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான லிமூலப்பொருள்கள் யாவும் வட மாநிலங்களிலிருந்துதான் தருவிக்கப்பட வேண்டி உள்ளது. மூலிலப்பொருள்களின் விலையில் ஏற்படக் கூடிய சிறிய அளவிலான மாற்றம் கூட, சிறு தொழில்களைப் பாதித்துவிடுகிறது.
உதாரணமாக கிரைண்டர் தொழில் முனைவோரின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு முன்னதாக விதிக்கப்பட்டிருந்த 28 சதவீத வரி 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரிய நிறுவனங்களிடம் ''ஆர்டர்கள்'' வாங்கி வேலை செய்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் 5 சதவீத வரிவிதிப்பு இதுவரை அமல்படுத்தப்படவில்லை.
ஸ்டீல், ஃபவுண்டரிகளுக்குத் தேவையான எஃகு, தாமிரம், அலுமினியம் போன்ற பல்வேறு உலோக உற்பத்திப் பொருள் விலை 30 % முதல் 35% வரை உயர்ந்திருப்பதாக கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா) தெரிவிக்கிறது. வார்ப்படத் தொழிலை (ஃபவுண்டரி) பொருத்தவரை சிறு, குறு ஃபவுண்டரிகளுக்கும் பெரிய அளவிலான ஃபவுண்டரிகளுக்கும் ஒரே சமமான வரி (18%) விதிக்கப்பட்டிருப்பது வினோதத்திலும் வினோதம்! காலம் காலமாக வரிவிதிப்பில் சிறு, குறு தொழில்களுக்கு சிறிய வரிச்சலுகைகள் இருக்கும். அந்த நியதி ஃபவுண்டரிகளைப் பொருத்தவரை ஜி.எஸ்.டி.யில் அடிபட்டுவிட்டது. இதனால், பெரிய ஃபவுண்டரிகளுடன் போட்டியிட இயலாத சிறு, குறு ஃபவுண்டரிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு இதுபோன்ற நியாயமான குறைபாடுகளை விரைந்து களைய வேண்டும்.
உலோகப் பொருள்களின் நிலைமைதான் சிரமம் என்றால், பின்னலாடைகளின் நிலைமை அதைவிட மோசமாக உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் முதல் முறையாக திருப்பூர் பின்னல் ஆடைகளின் ஏற்றுமதி 7% வீழ்ச்சி அடைந்துள்ளது. திருப்பூரைப் பொருத்தவரை 90 சதவீத உற்பத்தியாளர்கள் குறுந்தொழிலைச் சேர்ந்தவர்கள். 9 சதவீத உற்பத்தியாளர்கள் சிறு தொழிலைச் சேர்ந்தவர்கள். ஒரு சதவீதம் பேர் மட்டுமே நடுத்தர நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள்.
இதில் சோகம் என்னவெனில், அரசு அதிகாரிகள் கொள்கை ரிடிவுகள் மேற்கொள்கையில் பெரும் நறுவனங்களின் கூட்டமைப்புகளின் கூற்றுக்கு தரும் ரிக்கியத்துவம் சிறு, குறு தொழில்களின் சங்கங்களின் பிரதிநிதிகளின் விண்ணப்பங்களுக்குத் தருவதில்லை. மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பொதுநலன் கருதி இதை மனத்தில் கொள்ள வேண்டும்.
திருப்பூர் போன்ற பகுதிகளில் சுமார் 10 அண்டுகள் முன்புவரை பின்னலாடைத்தொழில் கொடிகட்டிப் பறந்தது. ஏற்றுமதி வெற்றிகரமாக இருந்தது. இவர்கள் சந்தித்த முதல் பின்னடைவு 2008-ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோதுதான். பிறகு, ''பட்ட காலிலே படும்'' என்பதுபோல், அடுத்தடுத்து, பருத்தி இழை விலை கடும் ஏற்றம், சாயப் பட்டறைகள் லிமூடல் உள்ளிட்ட பிரச்னைகள் தலைதூக்கின. இதனால் பின்னலாடை உற்பத்தி பாதிப்புக்கு உள்ளானது.
சமீப காலங்களில் பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. ஆகியவை இந்த தொழிலை நிலைகுலையச் செய்துவிட்டன என்கிறார்கள் இந்த துறை சார்ந்த வல்லுநர்கள்.
தற்சமயம், சர்வதேச சந்தையில் வங்கதேசம் மற்றும் வியத்நாம் போன்ற நாடுகளின் கடும் போட்டியை நமது ஏற்றுமதியாளர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சியை மேம்படுத்தும் ÷நோக்கில் சிறு, குறு தொழில்களுக்கு புத்துயிர் ஊட்டும் வகையில், சரியான நேரத்தில், சரியான அளவிலான வங்கிக் கடன் வழங்குதல், நியாயமான வரிச்சலுகைகள், ஜி.எஸ்.டி.யால் நேர்ந்துள்ள சிக்கல்களை விரைந்து களைதல், உள்ளிட்ட பணிகளை வங்கிகள் மற்றும் மத்திய மாநில அரசுகள் முனைப்புடன் மேற்கொள்ள வேண்டியது அவசர அவசியம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com