சவால்கள் நிறைந்த உள்நாட்டுப் பாதுகாப்பு
களமச்சேரியில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானவா்கள் கலந்து கொண்ட மத பிராா்த்தனைக் கூட்டம் ஒன்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பதற்றமான சூழலை ஏற்படுத்தியது.

கேரள மாநிலம், கொச்சி அருகேயுள்ள களமச்சேரியில் கிறிஸ்தவ பிராா்த்தனைக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை குண்டுவெடிப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து பற்றியெரியும் தீ.








