
டிவிட்டர் செயலிக்கு மாற்றாக அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜேக் டார்சே புதிய சமூக வலைத்தள செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
டிவிட்டர் நிறுவனத்தை உலகின் முன்னணி பெரும்பணக்காரரான எலான் மஸ்க் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் பல்வேறு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இதில் டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஜேக் டார்ச் அந்நிறுவனத்திலிருந்து வெளியேறினார். எனினும் அவர் விரைவில் டிவிட்டர் நிறுவனத்தில் மீண்டும் இணைவார் என தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக டிவிட்டர் போன்ற புதிய சமூக வலைதளத்தை ஜேக் டார்சே அறிமுகப்படுத்தியுள்ளார். டிவிட்டரை ஒத்த வகையில் பயன்படுத்தும் இந்த சமூக வலைதளத்திற்கு ப்ளூஸ்கை எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஆப்பிள் இயங்குதளத்தில் சோதனை முயற்சியாக வெளியிடப்பட்டுள்ள இந்த செயலியானது விரைவில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பாண்டு மே மாதத்திற்கு இதன் மேம்படுத்தப்பட்ட பதிப்பு தயாராகிவிடும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ள ஜேக் டார்சே பயனர்களின் வசதிக்கேற்ப இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.