13-வது சர்வதேச திரைப்பட விழா!

13-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 6-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை சென்னையில் சிறப்பாக நடைபெற உள்ளதது. கடந்த 12 ஆண்டுகளாக CIFF அமைப்பு தொடர்ந்து சென்னையில்
13-வது சர்வதேச திரைப்பட விழா!
Updated on
2 min read

13-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 6-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை சென்னையில் சிறப்பாக நடைபெற உள்ளது. கடந்த 12 வருடங்களாக CIFF அமைப்பு தொடர்ந்து சென்னையில் வெற்றிகரமாக நடத்தி வரும் உலகத் திரைப்பட விழாவின் தொடர்ச்சியாக இந்த ஆண்டு 13-வது ஆண்டாக நடக்கிறது. உலக அளவில் மிகச்சிறந்த 120 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 16 படங்களும், கேன்ஸ் திரைப்பட விழாவில் விருதுகளைப் பெற்ற படங்களும் திரையிடப்பட உள்ளன.

இந்த வருடம் தமிழ் சினிமாவுக்கான போட்டிகள் பிரிவில் 12 திரைப்படங்கள் பங்கேற்கின்றன. அவை '36 வயதினிலே', 'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது', 'சார்லஸ் ஷபிக் கார்த்திகா', 'கிருமி', 'கோடைமழை', 'மாயா', 'ஆரஞ்சுமிட்டாய்', 'ஓட்டதூதுவன் - 1854', 'பிசாசு', 'ரேடியோபெட்டி', 'தாக்க தாக்க', மற்றும் 'தனிஒருவன்'. இந்தியன் பனோரமா எனும் பிரிவில் 10 படங்கள் திரையிடப்படவுள்ளன. மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர் மற்றும் நடிகை மனோரமா இருவருக்கும் நினைவாஞ்சலியாக 'அச்சமில்லை அச்சமில்லை', 'அக்னி சாட்சி', 'ஒரு வீடு இரு வாசல்', 'உன்னால் முடியும் தம்பி', 'சிந்து பைரவி', 'மேஜர் சந்திரகாந்த்', 'அவள் ஒரு தொடர்கதை' ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளன. ஜெர்மன் இயக்குநர் ஃபாஸ்பைன்டரின் நினைவு அஞ்சலியாக அவர் இயக்கிய ஆறு படங்கள், டென்மார்க் இயக்குநர் நில்ஸ் மால்ம்ரோஸ் நினைவாக 5 படங்கள், வெனின்சுலா, சீனா ஆகிய நாட்டிலிருந்து 10 படங்கள் மற்றும் இயக்குநர் பஸ்டர் கீட்டனின் 120 வருடத்தை நினைவு கூறும் வகையில் ஆறு படங்கள் என இவ்வாண்டு சென்னை சர்வதேச விழா கோலகலாமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

சென்னை சர்வதேச திரைப்பட விழா தலைவர் தங்கராஜ், நடிகர் மனோபாலா ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியது. ‘உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படங்கள் 13 வது சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்படுகின்றன. இவற்றில் ‘ஆஸ்கார்’ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 16 படங்களும், ‘கேன்ஸ்’, 65வது பெர்லின்’ சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற டாக்ஸி உள்ளிட்ட பல விருது பெற்ற படங்களும் திரையிடப்படுகிறது. 57 நாடுககளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 120 படங்கள் இவ்விழாவில் திரையிடப்படும். இந்த திரைப்பட விழாவில் தமிழ் சினிமாவுக்கான போட்டிகள் பிரிவில், ‘36 வயதினிலே, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, சார்லஸ் சப்ஜிக் கார்த்திகா, கிருமி, கதிரவனின் கோடை மழை, மாயா, ஆரஞ்சு மிட்டாய், ஒட்ட தூதுவன், பிசாசு, ரேடியோ பெட்டி, தாக்க தாக்க, தனி ஒருவன் ஆகிய 12 படங்கள் திரையிடப்படுகின்றன.

தமிழக அரசின் ஆதரவோடு சென்னை திரைப்பட விழா நடத்தப்படுகிறது. இந்த முறை தென்னிந்திய நடிகர் சங்கமும் விழாவில் இணைந்து செயல்பட உள்ளது. நடிகர் சங்கம் சார்பில் ஒவ்வொரு நாள் பட விழாவிலும் திரை ஆளுமைகள் நிகழ்வை தொடக்கி வைப்பார்கள். நடிகர் நடிகைகள் சிறப்பு அழைப்பாளர்களாக நிகழ்வில் கலந்துகொள்வார்கள்.’ என்றார்.

நடிகைகள் பூர்ணிமா பாக்கியராஜ், லிசி, சோனியா மற்றும் நடிகர்கள் மோகன், ரமணா, ஹேமச்சந்திரன், ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினார்கள்.

திரையரங்குகள் உட்லண்ட்ஸ், நியூ உட்லண்ட்ஸ், சிட்டி செண்டர் ஐநாக்ஸ், கேசினோ ஆர்.கே.வி.ஸ்டூடியோ, ரஷ்ய கலாசார மையம் ஆகியவற்றில் சென்னை சர்வதேச விழாவுக்கான திரைப்படங்கள் திரையிடப்படும். ஜனவரி 6-ம் உட்லண்ட்ஸ் திரையரங்கில் விக்டோரியா என்ற ஜெர்மானியப் படத்துடன் விழா துவங்கவிருக்கிறது.

ரசிகர்கள், திரைப்பட ஆர்வலர்கள், திரைத்துறை வல்லுநர்கள் அனைவரும் பங்கேற்று இந்நிகழ்வை வெற்றியடையச் செய்து அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று விழாக் குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com