

புது தில்லி: 72 சதவிகித நோயாளிகள் மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சையை பின்பற்றுவதில்லை என்கிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று. அதிலும் குறிப்பாக சிறுநீரக பாதிப்படைந்தவர்கள் வாரம் மூன்று முறை டயாலிசிஸ் செய்துகொள்ள வேண்டும். ஆனால் பல நோயாளிகள் இதனைத் தவிர்க்கிறார்கள். வாரம் இரண்டு முறை அல்லது ஒரு தடவை மட்டும் இருந்தால் பரவாயில்லை என்கிறார்கள். ஆனால் இதனால் பிரச்னைகள் ஏற்பட்டு அவர்கள் வாழ்க்கைத் தரத்தையும் ஆயுளையும் குறைக்கலாம் என்பதை உணர மறுக்கிறார்கள் என்கிறது நெஃப்ரோ ப்ளஸ் என்ற டயாலிசிஸ் சிகிச்சை வழங்கும் நிறுவனம்.
ஒரு முறை டயாலிசிஸ் செய்து கொள்ளவே அதிக செலவாகிறது. தவிர பக்கவிளைவாக சிலருக்கு மாரடைப்பு ஏற்படுவதுண்டு என்ற காரணங்களால் டயாலிசிஸ் செய்வதைத் தவிர்க்கிறார்கள். தமிழ் நாடு, ஆந்திரா, கர்னாடகா, மஹாராஷ்ட்ரா, கேரளா, தில்லி, தெலுங்கானா,ஜார்கண்ட், உத்தர்கண்ட் மற்றும் உத்தர்பிரதேசம் ஆகிய பத்து மாநிலங்களில் சுமார் 1300 நோயாளிகளைப் பரிசோத்தித்து இந்த ஆய்வினை ஜனவரி 2013 ஆரம்பித்து ஜூலை 2014 முடித்தனர். வருடம்தோறும் இரண்டு லட்சம் பேருக்கு சிறுநீர் செயலிழப்பு ஏற்படும் நிலையில், இது உடனடியாக கவனிக்க வேண்டிய முக்கியமான பிரச்னை.
சில மாநிலங்களில் டயாலிசிஸ் செய்ய சலுகைக் கட்டணங்கள் இருந்தாலும், மேலும் இதற்கான விலையைக் குறைக்க மத்திய மற்றும் மாநில அரசு தலையிட்டு தீர்வு காணவேண்டும் என்று கூறினார் நெஃப்ரோ ப்ளஸ் நிறுவனர் கமல் ஷா. இவருக்கும் சிறுநீரகம் செயலிழந்து கடந்து பதினெட்டு வருடங்களாக டயாலிசிஸ் செய்து கொண்டிருக்கிறார்.
இது குறித்து மும்பை கிட்னி பவுண்டேஷனின் சேர்மன் டாக்டர் உமேஷ் கன்னா கூறுகையில், ‘டயாலிசிஸ் கட்டணங்கள் எல்லா நோயாளிகளும் செய்துக்கொள்ளும் விதமாக குறைக்கப்படவேண்டும். இதற்கு தனியார் மற்றும் பொது நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.’ என்றார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.