சென்னையில் ஆட்டோ மீட்டர்கள் ஓடும்...ஆனால் ஓடாது!

சென்னை: ஆட்டோவில் பயணம் செய்ய வேண்டும் எனில் நீங்கள் கணக்கில் சூரப்புலியாக இருக்க வேண்டும். அதுவும் குறிப்பாக தி.நகர், வடபழனி மற்றும் ராயப்பேட்டை போன்ற இடங்களில் ஆட்டோக்களில் மீட்டர் எப்போது போடப்படும் எப்போதும் அணைக்கப்படும் என்பது ஆட்டோ
சென்னையில் ஆட்டோ மீட்டர்கள் ஓடும்...ஆனால் ஓடாது!
Updated on
1 min read

சென்னை: ஆட்டோவில் பயணம் செய்ய வேண்டும் எனில் நீங்கள் கணக்கில் சூரப்புலியாக இருக்க வேண்டும். அதுவும்  குறிப்பாக தி.நகர், வடபழனி மற்றும் ராயப்பேட்டை போன்ற இடங்களில் ஆட்டோக்களில் மீட்டர் எப்போது போடப்படும் எப்போதும் அணைக்கப்படும் என்றே சொல்லமுடியாது.  காரணம் கண்காணிப்பு நடவடிக்கைகள!  ஆறு மாதங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் ஆட்டோ மீட்டர் கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டது. ஆட்டோவில் ஏறினால் குறைந்தபட்ச கட்டணமாக 25 ரூபாய் அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் 12 ரூபாய் நிர்ணயம் செய்யப்படது. ஆட்டோவைக் காத்திருக்கச் செய்தால் ஐந்து நிமிடத்திற்கு 3.5 ரூபாய் மற்றும்  இரவு நேர பயணங்களுக்கு பகல் நேரக் கட்டணத்திலிருந்து 50 சதவிகிதம் அதிகமாக வசூலிக்கலாம் என்பதுதான் செயல்பாட்டில் சில மாதங்கள் வரை இருந்தது.

ஆரம்பத்தில் இதைப் பின்பற்றிய ஆட்டோ ட்ரைவர்கள, சில நாட்களிலேயே பழையபடி தங்கள் இஷ்டப்படி கட்டணத்தை நிர்ணயிக்கத் தொடங்கிவிட்டார்கள்.  வாடிக்கையாளர்களிடம் மீட்டரைப் போடுவதைப் போலப் போட்டவிட்டு கண்காணிப்பு அதிகாரிகள் கண்களை விட்டு மறைந்த பின்பு மறுபடியும் அணைத்து விடுவதும் வாடிக்கையாகிவிட்டது. வாடிக்கையாளர்கள் வண்டியில் ஏறும்போதே மீட்டர் போட்டால் 50 ரூபாய் ஆகும், கூட இருபது ரூபாய் தந்துவிடுங்கள் என்பார்கள். ஆனால் மீட்டர் போடமாட்டார்கள். போக்குவரத்து காவல்துறை கண்காணிப்பாளர் இருப்பதைத் தூரத்திலிருந்துப் பார்த்துவிட்டு உடனே மீட்டரை போட்டுவிடுவார்கள். அந்த இடம் கடந்ததும் அதை அணைக்க மாட்டார்கள். இறங்கும்போது 30 ரூபாய் தான் வந்திருக்கும் ஆனால் நாம் 70 ரூபாய் தரவேண்டியிருக்கும்.

திருத்தப்பட்ட இந்த மீட்டர் கட்டணப்படியே சில ஆட்டோ டிரைவர்கள் கடைபிடித்துவிருகிறார்கள். ஆனால் மேற்சொன்னதுபோல் சில ஏரியாக்களில் ஆட்டோ டிரைவர்கள் தந்திரமாக செயல்படுகின்றனர். அவர்களைப் பொருத்தவரை கட்டணத்தை ஆரம்பத்திலேயே நிர்ணயித்துவிட்டு மீட்டரையும் போட்டுவிட்டு தாங்கள் நினைத்த கட்டணத்தை கறந்துவிடுகிறார்கள்.

 ‘முன்பு வாடிக்கையாளர்களிடம் ஆட்டோவில் மீட்டர் போட்டிருக்கிறாரா என்று விசாரித்துவந்தார்கள். ஆனால் இப்போது நெரிசல் சமயங்களில் மீட்டர் போடப்பட்டுள்ளதா என்பதை மட்டுமே பார்த்துவிட்டு விரைவாக அனுப்பிவிடுகிறார்கள். இது எங்களுக்கு நல்லதாக போய்விட்டது. அப்படியே மீட்டரில் குளறுபடி செய்து போக்குவரத்து அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டாலும் பிரச்னையில்லை, எங்களின் மூன்று நாள் வசூலை அபராதமாகக் கொடுக்கவேண்டியிருக்கும் அவ்வளவுதானே’ என்கிறார் ஒரு ஆட்டோ ட்ரைவர்.

ஓலோ போன்ற தனியார் ஆட்டோக்களிலும் தற்போது மீட்டரில் சில்லறையாக விழும் கட்டணத்தை முழுமையாக்குகிறார்கள். தவிர பத்து ரூபாய் அதிகமாகக் கேட்டு வாங்குகிறார்கள்.

இப்படி கூடுதல் கட்டண வசூலைத் தடுக்க, போக்குவரத்தி வாகனங்களைச் சோதனைக்கு உட்படுத்தி சந்தேகம் ஏற்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும். ஆனால் அவர்கள் எவ்வளவு கண்காணித்து சோதனை செய்து அபராதம் போட்டாலும் சில ஆட்டோக்கள் சிக்குவதே இல்லை என்பது உண்மைதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com