விருதுநகர் அருகே ரயிலில் பயணம் செய்த இளம்பெண் கை துண்டானது

விருதுநகர் அருகே ரயிலில் பயணம் செய்த இளம்பெண்ணின் கை சிக்னல் கம்பத்தில் மோதியதில் கை துண்டானது.
Updated on
1 min read

விருதுநகர் அருகே ரயிலில் பயணம் செய்த இளம்பெண்ணின் கை சிக்னல் கம்பத்தில் மோதியதில் கை துண்டானது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ரத்தினசாமியின் மகள்  மகாலட்சுமி(22). இவர் நெல்லை அருகே தனது சகோதரரியின் ஊரான  அம்பசமுத்திரத்திற்கு செல்வதற்காக சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லும் அனந்தபுரி விரைவு ரயிலில் வெள்ளிக்கிழமை இரவு ஏறி பயண் செய்தாராம்.

அப்போது, ரயில் சனிக்கிழமை காலையில் 7 மணிக்கு விருதுநகர் அருகே சத்திரப்பட்டியை கடந்த போது தண்டவாளம் ஓரத்தில் மழையால் சாயந்த நிலையில் இருந்த சிக்னல் கம்பத்தின் மீது இளம்பெண் கை மோதியதில் துண்டாகி தண்டவாள ஓரத்தில் விழந்தது. தனது கை துண்டானதை அறி்ந்த மகாலட்சுமி வேதனையில் அலறி மயங்கினார்.

   பின்னர் விருதுநகர் ரயில் நிலையத்தில் நின்றதும் கை துண்டான இளம்பெண்ணிற்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதைத் தொடர்ந்து பணியாளர்கள் விரைந்து சென்று சத்திரப்பட்டி அருகே தண்டவாள ஓரத்தில் கிடந்த துண்டான நிலையில் கிடந்த கையை பாதுகாப்புடன் எடுத்து வந்தனர்.

பின்னர் ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு கை செயலிழந்த நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறியதால் இணைக்க முடியாத நிலையேற்பட்டது. தற்போது, அந்த இளம்பெண்ணிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com