

மும்பையைக் குறி வைத்து வேலை தேடி வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காரணம் இந்தியாவிலேயே மிகவும் முக்கியமான நகரம். சந்தேகத்துக்கு இடமின்றி அது வாய்ப்புக்கள் கொட்டிக் கிடக்கும் கனவுப் பிரதேசம் தான். நட்சத்திரங்கள் ஜொலிக்கும் பாலிவுட் இங்கு தான் உள்ளது. சினிமா வாய்ப்புக்களாக மட்டுமின்றி வேறு பல தொழில்களும் செழிக்கும் பெரும் நகரம் மும்பை. நீங்கள் மும்பையை வாழ்விடமாகத் தேர்ந்தெடுத்து அங்கு குடிபெயர முடிவு செய்துவிட்டால், நீங்கள் முதலில் செய்ய வேண்டியது find Mumbai Job openings at www.jobtonic.in/mumbai/jobs/ என்ற இந்த லின்க்கை திறந்து பார்க்க வேண்டியது தான். இவ்வளவு பெரிய ஊரில் எப்படி வேலை தேடுவது என்ற கவலையே உங்களுக்கு இருக்காது. இந்த 2015 –ம் வருடத்தைப் பொருத்த வரையில், தற்சமயம் இங்கு பல நல்ல வேலைகள் காலியாக உள்ளன. வரும் ஆண்டுகளிலும் இதே நிலை தொடரும். அவை தற்போதைய நிலவரத்தின்படி மிகச் சிறந்த வேலைகள் என்பதில் சிறிதும் மாற்று கருத்து இருக்க முடியாது.
2015 – ல் என்ன மாதிரியான வேலைகளை தேடலாம்?
இதுவரை, மும்பையில் இல்லை என்று சொல்ல முடியாத அளவிற்கு வாய்ப்புக்கள் இல்லாமல் இல்லை. ஆனாலும், தகுதியின் அடிப்படையில் வேலை கிடைப்பது கடினம் தான். மிகவும் பிரபலமான வேலை பற்றிய விபரங்கள் பின்வருமாறு -
1. தொழில்நுட்ப ஆலோசகர் டெக்னிகல் கன்சல்டென்ட்ஸ்
ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வாடிக்கையாளர்களின் திருப்தி தான் முதன்மையான விஷயம். அதிலும் நேரடியாக வாடிக்கையாளர் தொடர்புடைய நிறுவனங்களுக்கு அது வேதவாக்கு. தொழில்நுட்ப ஆலோசகர் (டெக்னிகல் கன்சல்டென்ட்) என்ற பணியும் இதைச் சார்ந்ததுதான். வாடிக்கையாளர்களுக்கும் நிறுவனத்துக்கும் பாலமாக இவர்கள் செயல்படுவார்கள். இந்த வேலைக்கான சம்பளம் ஒரு வருடத்திற்கு 2.4 லிருந்து 4.8 லட்சம் வரை எதிர்ப்பார்க்கலாம்.
2. அணித் தலைவர் (டீம் லீடர்)
கால் செண்டர் மற்றும் பிபிஓ ஆகிய பணிகள் சமீப காலத்தில் பெரிதும் வளர்ந்து வரவேற்கக் கூடிய நிலையில் உள்ளன. நிறுவனம் தனது நோக்கங்களை நிறைவேற்ற பணியில் அமர்த்தியிருக்கும் ஒருவரே டீம் லீடர். டெலி காலர்களின் அன்றான வேலையை நெறிப்படுத்தி அவர்களையும் நிறுவனத்தையும் ஒருங்கிணைக்கும் பணியை டீம் லீடர்கள் சிறப்பாக செய்ய முடியும். ஒரு நிறுவனத்தின் விலை உயர்ந்த சொத்துக்களாக கருதப்படுகிறார்கள். இவர்களுக்கான வருடாந்திரச் சம்பளம் ரூபாய் 3.6 லட்சத்திலிருந்து 6 லட்சம் வரையில் இருக்கும்.
3. வர்த்தக அபிவிருத்தி ஆலோசகர்கள் (பிஸினெஸ் டெவலப்மெண்ட் கன்சல்டென்ட்ஸ்)
தொடர்ந்து வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் மும்பை வேலை சந்தையில்,எல்லா தொழிற் துறையிலும் போட்டி அதிகம் உள்ளது. தங்களைத் தக்க வைத்துக் கொள்ள கடும் போராட்டத்தை தினமும் சந்திக்க வேண்டியுள்ளது.
ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிப் பாதையை தெளிவாக திட்டமிட்டு அதைச் செயல்படுத்த வழிகாட்ட வேண்டியதன் அவசியம் வணிக வளர்ச்சி நிபுணர்களுக்கு உண்டு. வேலை மற்றும் தங்கள் இலக்குகளை அடைவதற்கான செயல்பாட்டில், அவர்கள் பலவித உத்திகளைப் பயன்படுத்தி பணி செய்யவேண்டியிருக்கும். வர்த்தக அபிவிருத்தி ஆலோசகர்களுக்கு தகுதிக்குத் தகுந்தவாறு வருடாந்திரம் 2.4 லட்சத்திலிருந்து 6 லட்சம் வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும்.
மும்பை வேலை சந்தையில் இந்த வருடத்திற்கான 2015 இல் காலியாக உள்ள பிற வேலைகள் - நிர்வாக உதவியாளர்கள், மென்பொருள் பொறியாளர்கள், கட்டட, பங்கு நிபுணர்கள், உறவு மேலாளர்கள், போன்றன.
நன்றி: Jobtonic.in
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.