வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதெமி விருது!

‘ஒரு சிறு இசை’ எனும் சிறுகதை நூலுக்காக எழுத்தாளர் வண்ணதாசனுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப் பட்டிருக்கிறது. வண்ணதாசன் ‘கல்யாண்ஜி’ என்ற பெயரில் கவிதைகளும் எழுதி வருகிறார்.
வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதெமி விருது!
Published on
Updated on
1 min read

‘ஒரு சிறு இசை’ எனும் சிறுகதை நூலுக்காக எழுத்தாளர் வண்ணதாசனுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப் பட்டிருக்கிறது. வண்ணதாசன் ‘கல்யாண்ஜி’ என்ற பெயரில் கவிதைகளும் எழுதி வருகிறார். இவர் நெல்லையைச் சேர்ந்தவர். சுதந்திரப் போராட்ட வீரரும், பழம் பெரும் படைப்பாளியுமான தி.க.சி அவர்களின் புதல்வருமான வண்ணதாசனுக்கு இந்தியப் படைப்புலகின் உன்னதமான விருது வழங்கப்பட்டிருப்பது அவரது வாசகர்களையும், தமிழ் படைப்புலகத்தையும் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழில் இவரை வாசிக்காத இளம் படைப்பாளிகளே இருக்க வாய்ப்பில்லை எனும்படியாக அனைவரையும் வசீகரிக்கும் விதமான எழுத்துக்குச் சொந்தக்காரர் இவர். 

வண்ணதாசனின் வலைத்தள முகப்பில் காணக்கூடிய செய்தி ஒன்று போதும் அவரது ஒட்டுமொத்த படைப்புகளையும் வரையறுக்க. 

‘இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிருத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும். . நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது.’

தமிழ் தெரிந்த அனைவருமே வண்ணதாசனை நிச்சயம் வாசிக்க வேண்டும். இந்த வாழ்வின் மென்மையான உன்னதங்களை அறிய. வாழ்வின் மீதான எல்லையற்ற பிரியங்களை தொகுத்துக் கொள்ளவாவது வாசித்துப் பாருங்கள் இளையோரே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com