அமெரிக்க  நடிகை கிம் கர்தாஷியனுக்கு என்ன நேர்ந்தது?

அமெரிக்க தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோவில் இவரை நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.
அமெரிக்க  நடிகை கிம் கர்தாஷியனுக்கு என்ன நேர்ந்தது?
Published on
Updated on
2 min read

அமெரிக்க தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோவில் இவரை நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.  மாடல் அழகியும் தொலைக்காட்சி நட்சத்திரமுமான கிம் கர்தாஷியன் (Kim Kardashian) தான் அவர்.

கிம் கர்தாஷியன் பன்முகத் திறமை கொண்டவர். அடிக்கடி கடும் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்பவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமல்ல, திரைப்படங்களில் நடித்தவர், தொழில் அதிபர். அமெரிக்க செலிப்ரிட்டியான இவர் பல பத்திரிகைகளின் அட்டைப்படத்தில் தன் கவர்ச்சியால் அலங்கரித்தவர். கிம்மின் வயது 36 என்றால் நம்ப முடியாது. இளமை, அழகு, புகழ், பத்திரிகை, பரபரப்பு என்று இவர் வாழ்க்கை நேர்க்கோட்டில் சென்று கொண்டிருந்தவரையில் எவ்வித பிரச்னையும் இல்லை. ஆனால் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதிக்கு பிறகு கிம்மின் மனநிலை பெரும் பாதிப்புக்கு உள்ளாகிவிட்டது. காரணம் அப்போது ஒரு நிகழ்சிக்காக பாரிஸ் சென்றிருந்த கிம்மிடம் துப்பாக்கி முனையில் ஐந்து பேர் அடங்கிய கொள்ளையர் அவர் அணிந்திருந்த நகைகளைப் பறித்துவிட்டனர். கிம் கார்தஷியனின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என்றாலும் பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள நகைகள் பறிபோனதாலும், துப்பாக்கி முனை மிரட்டலின் காரணமாக கடும் மன அழுத்தத்துக்கும் உள்ளானார் அவர்.

சமீபத்தில் கிம் தன்னுடைய வீட்டில் ‘பானிக் ரூம்’ என்ற அறையை தன்னுடைய மனநல ஆலோசகரின் பரிந்துரைப்படி அமைத்துள்ளார். வீட்டினுள் உள்ள அவ்வறை மிகவும் பாதுகாப்பானது. ஆபத்து வரலாம் என்று தெரிந்தவுடன் அந்த அறைக்குள் சென்று பதுங்கிவிடலாம். திருடர்களால் மட்டுமின்றி இயற்கை பேரிடர்களிலிருந்தும் தப்பிக்கும் வகையில் பானிக் அறை உருவாக்கப்பட்டுள்ளது. இனிமேல் தன்னுடைய உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதிப்பு ஏற்படவே கூடாது என்ற முன் எச்சரிக்கையில் தான் இந்த பீதி அறையை உருவாக்கியிருக்கிறேன். இந்த அறைக்குள் இருந்தால் நில நடுக்க பாதிப்புக்கள் ஏற்படாது, தவிர நெருப்பிலிருந்தும் பாதுகாக்கும்’ என்கிறார் கிம்.

கிம்மின் மனநல ஆலோசகர் கூறும் போது தற்போது கிம்முக்குத் தேவை மன நிம்மதிதான். ஒரு நிமிடம் கூட தனியாக இருக்க பயப்படுகிறார். அவர் எந்த நேரத்தில் அழைத்தாலும் நான் உடனடியாக வந்துவிடுவேன். பழைய நினைவுகள் அவருக்கு பீதி உணர்வையும், நரம்புத் தளர்ச்சியும் ஏற்படுத்துகின்றன. இரவு வந்தாலே அவருக்கு அதிக பயம் ஏற்பட்டுவிடுகிறது. காரணம் அந்த சம்பவம் அதிகாலை 3 மணிக்கு நடந்ததால். கிம் அதிலிருந்து மீண்டு வருவதற்கு அவருடைய கணவர் கான்யே, ரசிகர்கள் மற்றும் நாங்கள் அனைவரும் உடன் இருக்கிறோம்’ என்றார் அவர்.

கிம் பயம் நீங்கி மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி வருவார் என்கிறார்கள் அவருடைய தீவிர ரசிகர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com