செல்ஃபோன் பயன்படுத்துவது ஒரு ஜென் கலையா? எப்படி?

தொலைத் தொடர்பு சாதனங்களில் தற்போது பலவித வசதிகளுடன்கூடிய ஸ்மார்ட் ஃபோன் உலகை
செல்ஃபோன் பயன்படுத்துவது ஒரு ஜென் கலையா? எப்படி?
Published on
Updated on
2 min read

தொலைத் தொடர்பு சாதனங்களில் தற்போது பலவித வசதிகளுடன்கூடிய ஸ்மார்ட் ஃபோன் உலகை நம் கைக்குள் அடக்கிவிடுகிறது.  கையில் போனுடன் இருப்பவர்களைப் பார்த்தீர்கள் ஆனால் அவர்கள் ஒரு லயிப்பில் இருப்பார்கள். இந்த உலகத்தையே மறந்து வேறொரு உலக ஜீவியாகியிருப்பார். அதுஒரு ஜென் தியான நிலைக்கு ஒப்பானது என்று வேடிக்கையாக வேண்டுமானால் நாம் கூறலாம் ஆனால், பலருக்கும் அதுவே சிக்கலாகியும் விடுகிறது! 

வெளி உலகை மறந்து மொபலை ஃபோனுக்குள் மாட்டித் தவிப்பவர்கள் மிக விரைவில் பல பிரச்னைகளை சந்திப்பார்கள். சமீப காலங்களில் அது குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பதின் வயதினருக்கு பெரும் உளச் சிக்கலையும், மிகப் பெரிய கவனச்சிதறலை உருவாக்கக்கூடிய ஒரு சாதனமாக மாறிவிட்டது.

தொலைதொடர்பு சாதனங்கள் என்பவை நம்முடைய வசதிக்காக உருவாக்கியிருக்கிறோம். ஒருகாலத்தில் வெளியூர் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் நம் சொந்த பந்தங்களிடம் பேசுவதற்கு எஸ்டிடி பூத்துக்குச் சென்று மணிக்கணிக்காக நின்று பேசி மகிழ்ந்தது ஒரு பழைய நினைவாகிவிட்டது. 

ஐஃபோன் ஆப் அல்லது கூகிள் வாய்ஸ் மூலம் ஒருவர் பெயரை நாம் சொன்னால் போதும்,  மொபைல் ஃபோனே அவரை அழைத்து விடுகிறது. இந்த மாற்றத்தை சரியாக அணுகத் தெரியாமல் ஒரு கருவியின் வசதியை பயன்படுத்தத் தெரியாமல் அதை அழிவிற்கான பாதைக்கு திசை திருப்புவது புத்திசாலித்தனமல்ல. 

நம் வாழ்வை மேம்படுத்துவதற்காக வருகிற வசதிகளை நாமே சிக்கலாக்கிக் கொண்டால் அதைவிட நமக்கு நாமே செய்து கொள்ளும் தீங்கு வேறெதுவும் இருக்க முடியாது. செல்போனில் குடியிருந்து 24 மணி நேரமும் நெட்டில் உலவி, கண்கள் எரியும் வரை ஃபேஸ்புக்கினுள் ஒருவர் வாழத் தொடங்கினால் அவரது நிலை என்னவாகும்? கடுமையான மனப் பிறழ்வு தான் இதனால் ஏற்படும்.

உலகம் மிகப் பெரியது. வாழ்க்கை நமக்காக காத்துக் கிடக்கிறது. முகநூலில் ஒரு பதிவோ, வாட்ஸ் அப்பில் ஒரு ஃபோர்வேர்டோ அனுப்பாவிட்டால் இந்த உலகம் ஸ்தம்பித்துவிடாது. உங்களுடைய பங்களிப்பு இல்லாமல் உலகம் நல்லபடியாகவே இயங்கும். கவலை வேண்டாம். 

உங்கள் செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு கண்மூடி நிதானமாக ரிலாக்ஸ் செய்யுங்கள். உங்களுடைய வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள். இதைவிட ஒரு ஜென் நிலை வேறு எதுவும் இருக்க முடியுமா என்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com