நாம் ஏன் கோவிலுக்குப் போக வேண்டும்?

கோவிலுக்குச் செல்வதை கடமையாகச் செய்யாமல் பக்தியுடனும் உணர்வுபூர்வமாகச் சென்றால்
நாம் ஏன் கோவிலுக்குப் போக வேண்டும்?
Published on
Updated on
2 min read

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்..இறை என்று சொன்னால் கேட்கவில்லை என்றால் அறிவியலை கூறுங்கள் : 

பூமியின் காந்த அலைகள் அதிகமாக வீசும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும். சக்தி அதிகம் காணப்படும் இடம் கர்ப்பக்கிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலைதான் இந்த மையப்பகுதியில் உள்ளது. அதில் காந்த சக்தி அதிகம் இருக்கும். இந்த பிரதான கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்புத் தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அந்த சக்தியை பன்மடங்காக்கி வெளிக் கொண்டுவரும்.

இது தவிர அனைத்து மூலஸ்தானமும் மூன்று பக்கமும் மூடியிருக்க, வாசல் மட்டும்மே திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த காந்த சக்தியை கசியவிடாமல்ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த சக்தி கிடைக்க செய்யப்பட்டது ஆகும்.

கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றி வரக் காரணம் சக்தியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே அந்த சக்தியின் சுற்றுபாதையுடன் நாமும் சேர்ந்து சுற்ற அச்சக்தி அப்படியே உடம்பில் பட்டு. நேர்மறை எண்ணங்களை உருவாக்கும். மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு இருக்கும். அதைச் சுற்றி கண்ணாடி ஒன்று இருக்கும். அது அந்த சக்தியை அப்படியே திருப்பி அனுப்பச் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான். இவைத் தவிர மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யப்படும் அபிஷேகம் அந்த காந்தசக்தியை மென்மேலும் அதிகரிக்கச் செய்து ஒரு கட்டத்தில் பன்மடங்காகிவிடும்.

பூக்கள், கற்பூரம், துளசி, குங்குமப்பூ ஆகியவற்றைச் சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு சிறந்த கிருமி நாசினி. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க. இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் ரத்த சுத்திகரிப்பு ஆகியவற்றை செய்துவிடும். ஆலயம் சென்று தொழுவதால் நோய் நொடிகளிலிருந்து ஆண்டவன் காப்பான் என்பார்கள் முன்னோர்கள். அதன் பின்னணியில் உள்ள அறிவியல் விஷயமும் இதுதான்.

கோயிலுக்கு சட்டை அணிந்து வர வேண்டாம் என சில கோயில்களில் வரையறுத்து வைத்திருப்பதன் காரணம் அந்த சக்திநிலை, அப்படியே மார்பு கூட்டின் வழியே நுழைந்து உடம்பில் சேரும் என்பதால்தான்.  பல காத தூரத்தில் பயணம் செய்திருப்பினும், மூலவரின் தரிசனம் கிடைக்கையில், அந்த சில நொடிகளில் அந்த உடம்பில் ஏற்படும் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒருவித நிம்மதியும் ஏற்படுகிறது என்றால் அதற்குக் காரணம், கோயிலின் மூலஸ்தானம் மற்றும் அதில் உள்ள காந்தசக்திதான்.

கோயிலின் கொடி மரத்திற்க்கும் மூலஸ்தானதிர்க்கும் ஒரு நேரடித் தொலைத் தொடர்பு உண்டு. கோயிலின் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இதுவே காரணம். கீழிருந்து கிளம்பும் மின்காந்த அலைகள் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது. 

கோவிலுக்குச் செல்வதை கடமையாகச் செய்யாமல் பக்தியுடனும் உணர்வுபூர்வமாகச் சென்றால் அந்தச் சூழல் நம்மை மனப் பிரச்னை உடல் பிரச்னை என எல்லாவற்றிலிருந்தும் காக்கும் என்பது உண்மை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com