சொர்க்கம் வேண்டாம் இந்த இனிய தமிழ் பாட்டு போதும்! ரசிகரின் பாராட்டைப் பெற்ற பாடகர் யார்?

முந்தைய காலங்களில் ஒரு பாடல் மிகவும் பிடித்துவிட்டால், வகுப்பில் ஃப்ரீ பிரியட் வரும் போது பாட்டுப் புத்தகத்தைப் பார்த்து அழகிய குரல் வளம் உள்ள சக தோழியரைப் பாட வைத்து ரசிப்போம்.
சொர்க்கம் வேண்டாம் இந்த இனிய தமிழ் பாட்டு போதும்! ரசிகரின் பாராட்டைப் பெற்ற பாடகர் யார்?

முந்தைய காலங்களில் ஒரு பாடல் மிகவும் பிடித்துவிட்டால், வகுப்பில் ஃப்ரீ பிரியட் வரும் போது பாட்டுப் புத்தகத்தைப் பார்த்து அழகிய குரல் வளம் உள்ள சக தோழியரைப் பாட வைத்து ரசிப்போம். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் சொந்த பந்தம் கூடியிருக்கையில், வட்டமாக அமர்ந்து அந்தாக்‌ஷரி பாடி மகிழ்வோம். அ வரிசைப் பாடல்களிலிருந்து ஜெ வரை நம் இசைப் புலமையை மேடையேற்றி மகிழ்வோம். ஒரு தடவை க-வில் முடியும் பாடலை பாட்ட வேண்டிய முறை எனக்கு வந்த போது, ‘கபூத்தர் ஜா ஜா என்று ஹிந்திப் பாடலை பாடத் தொடங்க, என்னுடைய கசின்ஸ் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியது நினைவுக்கு வருகிறது. வேறு வழியில்லாமல் கண்ணே, கலைமானே என்று சிறப்பாக பாடி முடித்தேன்.

அடுத்து வந்த தலைமுறை பிறக்கும் போதே மைக்குடன் பிறந்துவிட்டார்களோ என்று நினைக்கும் அளவுக்கு, நர்சரி ரைம்ஸ் முதல் சினிமா பாடல்கள் வரை அசத்தலாம பாடத் தொடங்கிவிட்டார்கள். இன்றளவும் கூட நமக்கு கூட்டத்தில் பாட சற்று கூச்சம் இருக்கும், ஆனால் சின்னஞ் சிறு வாண்டுகள் மேடையேறியும், தொலைக்காட்சி சானல்களிலும் வெளித்து வாங்குவதைப் பார்க்க ஆச்சரியம். திரை இசை என்பது நம் வாழ்வியலுடன் கலந்துவிட்ட ஒன்று என்பதற்கு இது ஒன்றே போதும்.

இந்தப் பழக்கம் தான் இன்று ‘cover songs’ வரை வந்துள்ளது. அதென்ன கவர் சாங்க்ஸ் என்பவர்கள் யூட்யூப் பக்கம் ஒதுங்கி இந்தப் பாடலை கேட்டுப் பாருங்கள். இவ்வளவு உருக்கமாக, இத்தனை தெளிவாக மயங்க வைக்கும் குரல்வளத்துடன் பாடிக் கொண்டிருக்கும் இவர் எந்த அளவுக்கு அந்தப் பாடலை உள்வாங்கியிருந்தால் இப்படி பாடியிருக்க முடியும்.

இப்படி தங்களுக்குப் பிடித்த பாடல்களை இளம் தலைமுறையினர் கவர் சாங்க்ஸ் தங்கள் யூட்யூப் சானலில் வெளியிடுகிறார்கள். வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலை மாறி, அவர்களைத் தேடி நல்வாய்ப்புகள் வரும் வரையில் இணையத்தில் காத்திருக்கிறார்கள். திறமைகள் எங்கோ ஒளிந்து கிடந்து, காலத்தால் காணாமல் ஆன காலம் மாறி, திறமைகள் மதிக்கப்பட்டும், கொண்டாடப்பட்டும் வரும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம் என்பது மகிழ்ச்சிதானே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com