மைசூரு கல்வெட்டியல் துறைக்கு நன்றி

தினமணி இணையதளத்தில் 27.08.2019 அன்று வெளியான “மைசூரில் அழிக்கப்படும் தமிழ் கல்வெட்டுகள்-உதயசந்திரன் நடவடிக்கை எடுப்பாரா? என்ற கட்டுரையில் உள்ள பொருள்கள் அனைத்தும் வழக்கறிஞர் சி.பி.சரவணன் சேகரித்த தகவல்களே.
மைசூரு கல்வெட்டியல் துறைக்கு நன்றி

தினமணி இணையதளத்தில் 27.08.2019 அன்று வெளியான “மைசூரில் அழிக்கப்படும் தமிழ் கல்வெட்டுகள் - உதயசந்திரன் நடவடிக்கை எடுப்பாரா? என்ற கட்டுரையில் உள்ள பொருள்கள் அனைத்தும் வழக்கறிஞர் சி.பி.சரவணன் சேகரித்த தகவல்களே. இந்த கோரிக்கை முழுக்க தமிழக தொல்லியல் துறை இயக்குனரின் கவனத்திற்கானது. 

கட்டுரைக்கு இந்திய தொல்லியல் துறையின் கல்வெட்டியல் துறை இயக்குனர் டாக்டர் கே முனிரத்தினம் அவர்கள் மறுப்பு பின்வருமாறு

எல்லா கல்வெட்டுகளும் உண்மையான வரலாற்றுத் தகவல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதால், எல்லா கல்வெட்டுகளுக்குள்  புதையல் இருப்பதால், அவை எந்த மொழிகள் / பகுதிகள் என்பதைப் பொருட்படுத்தாமல், கிடைக்கக்கூடிய அனைத்து இடங்களையும் பாதுகாக்க  கவனமும் எடுக்கப்படுகின்றன.

சமீபத்தில், நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் வித்யா டெஹெஜியா பார்வையிட்டுள்ளார்.  மார்க்சிய காந்தி, ஒரு தமிழ் கல்வெட்டு நிபுணர், தனது ஆராய்ச்சி தொடர்பாக தமிழ் கல்வெட்டுகளைக் கலந்தாலோசித்தார், மேலும் இந்த அலுவலகத்தில் கல்வெட்டுகளைப் பாதுகாப்பது குறித்து பாராட்டுக்களையும் தெரிவித்தார். தமிழ் அறிஞர்கள் தங்கள் ஆராய்ச்சி பணிகளுக்காக இந்த அலுவலகத்திற்கு தவறாமல் வருகை தருகிறார்கள் என்பதையும், இந்த அலுவலகம் நூலகம் மற்றும் வெளியிடப்படாத கல்வெட்டுகளை அணுக அனுமதிப்பதன் மூலம் அனைத்து ஒத்துழைப்பையும் நல்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் 6 தமிழ் S.I.I. 1910, 1912, 1914, 1916 மற்றும் 1918 ஆம் ஆண்டுகளில் நகலெடுக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுகள் தொடர்பான தொகுதிகள். அனைத்து வெளியீடுகளும் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் வெளியீட்டு பிரிவுகளில் கிடைக்கின்றன.

மேலும், எங்கள் இயக்குநர் ஜெனரலின் வழிகாட்டுதலின்படி புதிய கல்வெட்டுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் நோக்கத்துடன், தமிழ் மொழியின் 8 மூத்த அறிஞர்கள் தென்னிந்திய கல்வெட்டுகள் (தமிழ்) தொகுதிகளையும், வெவ்வேறு மொழிகளில் உள்ள 7 அறிஞர்களையும், பொருத்தமான ஊதியத்துடன், பதிப்பிப்பதில் ஈடுபட்டுள்ளனர் என்று உங்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இயக்குனர் டாக்டர் கே முனிரத்தினம் சொன்ன செய்திகள் சமீபத்தியதாக இருக்கலாம், இது சம்மந்தமான அரசிதழ் அறிவிப்போ அல்லது பத்திரிக்கை செய்தியோ இந்திய தொல்லியல் துறை வெளியிடாதது துரதிஷ்டமானது.

கட்டுரைச் செய்தியின் நோக்கம், தகவலைத் தெரிவிக்கவும் தகவலைப் பரிமாறவுமே ஒழிய துறை நடவடிக்கைகளை தடுப்பதோ அல்லது துறை நடவடிக்கைகளை தவறாகச் சித்தரிப்பதோ அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாடு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 

கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் வாழும் பகுதியில் நடந்த கோவில் திருவிழாவுக்காக பொது இடத்தில் இசை கச்சேரி நடத்தப்பட்டது. அப்போது நடிகர் அஜித்தின் “ஆலூமா டோலுமா...” பாடல் பாடப்பட்டது. திடீரென்று கோஷம் எழுப்பிய கன்னட ரட்சன வேதிகா அமைப்பினர், தமிழ் பாடல்கள் பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அட்டகாசம் செய்ததோடு, மேடை ஏறி இசைக்கருவிகளை உடைத்தனர். அப்போது அங்கு பாதுகாப்பிற்கு இருந்த காவல்துறை கண்டுக்கொள்ளாமல் வேடிக்கை பார்க்க, அவர்கள் முன்னிலையிலேயே கன்னட அமைப்பினர் கலாட்டாவில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக அவ்வபோது கலவரங்கள் நடைபெற்று வருகிறது. பொதுவாக அரசியல் ரீதியிலான பிரச்னைகள் தொடர்பாக இதுபோன்ற கலவரங்கள் நடைபெற்றாலும், சில நேரங்களில் தமிழர்கள் மீது கன்னடர்களின் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாகவும் நடக்கின்றது. 

இது தமிழர்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது. அதன் வெளிப்பாடே ஒழிய கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கமல்ல.

இயக்குனர் டாக்டர் கே முனிரத்தினம் அவர்கள் கல்வெட்டுப் பிரதிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும், புதிய கல்வெட்டுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் நடவடிக்கையும், படிகள் டிஜிட்டல்  செய்து வரும் செய்திகள் மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com