சுடச்சுட

  

  அதிகபட்ச, குறைந்தபட்ச வாக்கு வித்தியாசங்களில் வெற்றிபெற்று பாஜக வேட்பாளர்கள் புது சாதனை!

  Published on : 25th May 2019 05:44 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  C_R_Patil

   

  நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வாக்கு வித்தியாசங்களில் வெற்றிபெற்று பாஜக வேட்பாளர்கள் புதிய சாதனைப் படைத்துள்ளனர்.

  2019 மக்களவைத் தேர்தலில் தனிப்பட்ட முறையில் 303 தொகுதிகளில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று மத்தியில் ஆட்சியை தக்க வைத்துள்ளது. வாராணசியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி 4.79 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். முதன்முறையாக தேர்தலைச் சந்தித்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, 5.57 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

  இந்நிலைியல், மக்களவைத் தேர்தல் வரலாற்றில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச ஆகிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று பாஜக உறுப்பினர்கள் புது சாதனைப் படைத்துள்ளனர். 

  குஜராத் மாநிலத்தின் நவ்சாரி தொகுதியில் போட்டியிட்ட சி.ஆர்.பாடீல் 6.89 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தார். மக்களவைத் தேர்தலில் அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற 2-ஆவது வேட்பாளர் என்ற சாதனையையும் படைத்தார். 

  முன்னதாக, மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மறைவையடுத்து அவரது மகள் ப்ரீத்தம் முண்டே 2014 அக்டோபரில் நடந்த இடைத்தேர்தலில் 6.96 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதே தற்போது வரை சாதனையாக உள்ளது.

  அதுமட்டுமல்லாமல் பாஜகவைச் சேர்ந்த 3 வேட்பாளர்கள் 6 லட்சத்துக்கும் மேலான வாக்கு வித்தியாசத்திலும், 12 வேட்பாளர்கள் 5 லட்சத்துக்கும் மேலான வாக்கு வித்தியாசத்திலும் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

  அதேபோன்று உத்தரப் பிரதேசத்தின் மச்ஸிஹாஷர் தொகுதியில் 181 வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் போலநாத் வெற்றிபெற்றார். இதன்மூலம் குறைந்தபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற வேட்பாளர் என்ற சாதனையைப் படைத்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai