மழைக்காலத்தில் உங்கள் வீட்டில் ஏற்படக்கூடிய மின் விபத்தை தடுப்பது எப்படி?

மழைக்காலத்தில் ஏற்படும் முக்கிய பிரச்னை மின்சார விபத்துகள்தான்.
rainy season
rainy season

மழைக்காலத்தில் ஏற்படும் முக்கிய பிரச்னை மின்சார விபத்துகள்தான். அதனால்தான் மழை அதிகம் இருக்கும் போது சில பகுதிகளில் மின்சாரத்தை நிறுத்தி வைத்து விடுவார்கள். மின் விபத்துக்களில் இருந்து காத்துக் கொள்ள, முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறு மக்களுக்கு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை வடக்கு மின் ஆய்வாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மின்சார ஒயரிங் வேலைகளை, அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் வழியாக மேற்கொள்ள வேண்டும். ஐ.எஸ்.ஐ., முத்திரை பெற்ற, தரமான மின் சாதனங்களை மட்டுமே, பயன்படுத்த வேண்டும். மின் விளக்குகளை பொருத்துவதற்கும், எடுப்பதற்கும் முன், ஸ்விட்சுகளை அணைக்க வேண்டும். 'பிரிஜ், கிரைண்டர்' உள்ளிட்ட வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு, நில இணைப்புடன் கூடிய, மூன்று சாக்கெட் உள்ள, பிளக்குகள் வழியாக மட்டுமே, மின் இணைப்பு வழங்க வேண்டும்.ஆய்வு அவசியம் உடைந்த ஸ்விட்ச், பிளக்குகளை, உடனே மாற்ற வேண்டும். பழுதுபட்ட மின் சாதனங்களை உபயோகிக்க வேண்டாம். 'கேபிள் டிவி' ஒயர்களை, மின் வினியோக மேல்நிலை கம்பிகளுக்கு அருகில், எடுத்துச் செல்ல வேண்டாம். ஒவ்வொரு வீட்டிலும், நில இணைப்பு கம்பிகள் கொடுப்பதுடன், அவற்றை, விலங்குகள், குழந்தைகள் தொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை, மின் ஒயர்களை ஆய்வு செய்து, தேவைப்பட்டால் ஒயர்களை மாற்ற வேண்டும்.

மின் கம்பத்துக்காக போடப்பட்ட, 'ஸ்டே' ஒயரின் மீது, கயிறு கட்டி துணி காய வைக்கும் சம்பவங்களை தடுக்க வேண்டும். விளம்பர பலகைகள் குளியலறை, கழிப்பறை போன்ற ஈரமான இடங்களில், ஸ்விட்சுகள் வைக்க கூடாது. சுவரின் உள்பகுதியில், மின்சாரம் எடுத்துச் செல்லும், பி.வி.சி., குழாய்கள் இருந்தால், அப்பகுதிகளில் ஆணி அடிப்பதை தவிர்க்க வேண்டும்.மின் கம்பங்களை பந்தல்களாக மாற்றக் கூடாது. அவற்றின் மீது விளம்பர பலகைகள் கட்டக் கூடாது. மின்மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகில் செல்ல வேண்டாம். எச்சரிக்கைமழையாலும், காற்றாலும், அறுந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பிகளின் அருகில் செல்ல வேண்டாம். மின் வாரிய அலுவலகத்துக்கு, உடனே தகவல் அளிக்க வேண்டும்.

மேல்நிலை மின் கம்பிகளுக்கு அருகில், கட்டடங்களை போதுமான இடைவெளி விட்டு கட்ட வேண்டும். விபரங்களுக்கு, மின் வாரியம் மற்றும் மின் ஆய்வு துறை அலுவலர்களை அணுகவும். பாதுகாப்புஇடி, மின்னலின் போது, திறந்த
வெளியில் நிற்க வேண்டாம். கான்கிரீட் கட்டடம், பஸ், கார், வேன் போன்ற வாகனங்களில், தஞ்சமடைய வேண்டும். குடிசை வீடு, பஸ் நிறுத்த நிழற்குடை, மரத்தடியில் நிற்க வேண்டாம். இடி, மின்னலின் போது, மிக்சி, கிரைண்டர், கணினி, 'டிவி' மற்றும் போன் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். கட்டடங்களில் திறந்த நிலை பகுதி, ஜன்னல், வாயிற்கதவு அருகில் நிற்க வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மின்வாரியம் வெளியிட்டுள்ள ஒரு 'ஆடியோ'வில் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் கூறப்பட்டவை:

  • மின் பாதைக்கு அருகில் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை வெட்டும் போது அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து, அந்த மின்பாதையில் மின்தடை செய்த பின் வெட்ட வேண்டும்.
  • மழைக்காலத்தில் மின் மாற்றிகள், மின் பெட்டிகள், மின் இழுவை கம்பிகள் அருகில் செல்லக் கூடாது.
  • வீட்டில் மின் சாதனத்தில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால், உடனேயே உலர்ந்த ரப்பர் காலணியை அணிந்து, மின் மெயின் சுவிட்ச்சை அணைக்க வேண்டும்.
  • மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
  • தண்ணீர் தேங்கிய இடங்களில் நிற்பதையும் நடப்பதையும் தவிர்க்க வேண்டும்.
  • மின்கம்பத்தின் அருகில் உள்ள இழுவைகம்பியிலோ, மின் கம்பத்திலோ கயிறுகட்டி துணிகளை உலர்த்தக் கூடாது. வீடுகளில் ஈரமான இடத்தில் மின் சுவிட்ச்களை பொருத்தக் கூடாது.
  • இடி, மின்னலின் போது தஞ்சமடைய மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மரங்கள், உலோக கம்பிவேலைகள் இல்லாத தாழ்வான பகுதியை தேர்வு செய்ய வேண்டும்.
  • இடி, மின்னலின் போது டிவி, மிக்சி, கிரைண்டர், கம்ப்யூட்டர் போன்ற பொருடு்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் மிதிக்காமலும், தொடாமலும் இருக்க வேண்டும். அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
  • கட்டிடங்களுக்கும் மின் பாதைக்கும் இடையில் போதிய இடைவேளி இருக்குமாறு கட்டிடங்களை அமைக்க வேண்டும். ஐந்து கிலோ வாட்ஸ்க்கு மிகையான மின் இணைப்பு பெறும்போது, எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர் பொருத்தப்பட வேண்டும்.
  • மின் கம்பங்களை பந்தல் அமைக்க நிலைக்காலாக பயன்படுத்துவதோ, விளம்பர பதாகைகளை அதில் பொருத்துவதோ கூடாது.
  • கனரக வாகனங்களை மின்கம்பங்கள், மின் மாற்றிகள் அருகில் நிறுத்தி பொருட்களை ஏற்றவோ, இறக்கவோ கூடாது.
  • திறந்த நிலையில் உள்ள ஜன்னல்,கதவு ஆகியவற்றின் அருகில் இருக்க வேண்டாம்.
  • ஈரமான கைகளால் சுவிட்ச்களை இயக்கக் கூடாது.
  • மின் கம்பத்திலோ, கம்பிகளிலோ கால்நடைகளை கட்ட வேண்டாம்.
  • வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய மூன்று பின் பிளக்கள் மூலம் மின் இணைப்பு கொடுங்கள்.
  • மின்சாரத்தில் ஏற்படும் தீயை தண்ணீரை கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com