பசுமை பட்டாசுகளுடன் வண்ணமய தீபாவளி!

தீபாவளி என்றாலே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது புத்தாடைகளும், பட்டாசுகளும்தான். "டமால் டுமீல்' என வெடிக்கும் பட்டாசுகளை வெடிப்பதில் இளசுகளுக்கு விருப்பம் அதிகம்
பசுமை பட்டாசுகளுடன் வண்ணமய தீபாவளி!

தீபாவளி என்றாலே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது புத்தாடைகளும், பட்டாசுகளும்தான். "டமால் டுமீல்' என வெடிக்கும் பட்டாசுகளை வெடிப்பதில் இளசுகளுக்கு விருப்பம் அதிகம். கண்ணைக் கவரும் வண்ண மத்தாப்புக்களை கொளுத்துவதில் மகளிருக்கும், குழந்தைகளுக்கும் ஆர்வம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விதவிதமாக பட்டாசு வெடித்து காலங்காலமாக தீபாவளியை கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர் மக்கள். தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் வெவ்வேறு பெயர்களில் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர். ஆனால், அனைத்து பகுதி கொண்டாட்டங்களிலும் பட்டாசுகளின் ஆதிக்கம் மட்டும் தவிர்க்க இயலாததாகவே உள்ளது. பண்டிகை மட்டுமன்றி, திருமண விழாக்கள், வெற்றிக் கொண்டாட்டங்கள், பேரணிகள் என பட்டாசுகள் மக்களின் வாழ்வின் முக்கிய அங்கமாக மாறிவிட்டன என்றே கூறலாம்.
 இந்த ஆண்டு நாடு முழுவதும் வரும் அக்.27-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வணிக நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கும், உறவினர்கள், நண்பர்களுக்கும் அன்பளிப்பாக பட்டாசு "கிஃப்ட் பாக்ஸ்கள்' வழங்குவது வழக்கம்.
 கிஃப்ட் பாக்ஸ்கள் விற்பனை: மக்கள் விரும்பும் அனைத்து பட்டாசுகளும் அடங்கிய கிஃப்ட் பாக்ஸ்களுக்கு கடந்த ஆண்டுகளைப் போன்றே இந்த ஆண்டும் வரவேற்பு அதிகரித்துள்ளது. பெரிய மற்றும் சிறிய பட்டாசு தயாரிப்பு நிறுவனங்களில் 33 வகையான கிஃப்ட் பாக்ஸ்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கிஃப்ட் பாக்ஸ்களில் குழந்தைகளை கவரும் வகையில் தீப்பெட்டி மத்தாப்பு, கம்பி மத்தாப்பு, பாம்பு மாத்திரை, தரை சக்கரம், புஸ்வாணம், கார்ட்டூன் வெடிகள் என 20க்கு மேற்பட்ட பட்டாசுகள், பெண்களை கவரும்விதமாக தரை சக்கரம், கலர் புஸ்வாணம், வாண வெடிகள், இளைஞர்களை கவரும் விதமாக புல்லட் பாம், ஆட்டம் பாம், அணுகுண்டு, லட்சுமி, சரவெடிகள், ராக்கெட் போன்ற வெடிகள் போன்றவைகள் இடம் பெற்றுள்ளன.
 கிப்ட் பாக்ஸ்கள் ரூ.350 முதல் ரூ.3 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சில பட்டாசு நிறுவனங்கள் மக்களை கவர புதிய ரக பட்டாசுகளை தயாரித்து சந்தைக்கு அனுப்பி உள்ளன. இதுகுறித்து பட்டாசு வியாபாரிகள் கூறுகையில், கிப்ட் பாக்ஸ்கள் (17 முதல் 21 ரகங்கள்) ரூ.350 முதல் ரூ.450 வரையும், 23 முதல் 33 ரகங்கள் அடங்கிய கிப்ட் பாக்ஸ் ரூ.600 முதல் ரூ.1,000 வரையும், 33 முதல் 37 ரகங்கள் அடங்கிய கிப்ட் பாக்ஸ் ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும், 33 முதல் 37 ரகங்கள் அடங்கிய விஐபி கிப்ட் பாக்ஸ் ரூ.1,500 முதல் ரூ.3 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.
 புதிய வகைப் பட்டாசுகள்: நிகழாண்டு தீபாவளிக்கு 50-க்கும் மேற்பட்ட புதிய ரக பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், ஸ்டார் பிளாஸ்டர்ஸ், ரெட்போர்ட், கிராக்கிங் கிங், சியர்ஸ், பாம்போ ராக்கெட், ரெயின்போ ராக்கெட், மேஜிக் ட்ரீ, ஸ்வஸ்திக் வீல்ஸ், கான்செட், கிரேட் கிரீட், ட்ரùயின் பட்டாசு, கிரீன் ஆப்ஸ் மற்றும் புஸ்வாணம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. பட்டாசுகளில் 25 சாட், செவன் சாட், சரவெடி, அணுகுண்டு, புஸ்வானம், ராக்கெட் வகைகள் மற்றும் கலர் பட்டாசுகள் போன்றவை இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 பசுமைப் பட்டாசு...: சுற்றுச்சூழலுக்கு பெரும்பாலும் மாசு ஏற்படுத்தாத வகையில், நீதிமன்ற உத்தரவுப்படி நிகழாண்டு பசுமைப் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டாசுகளை மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கடந்த அக்டோபர் 5- ஆம் தேதி அறிமுகம் செய்து வைத்தார். சாதாரண பட்டாசுகளுடன் ஒப்பிடுகையில் பசுமைப் பட்டாசுகளால் 30 சதவீதம் காற்று மாசு குறையும் என்பதால் வாடிக்கையாளர்கள் இவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
 பசுமை பாட்டாசுகளும், சாதாரண பட்டாசுகளைப் போலவே இருக்கும். வெடிக்கும்போது சப்தம் எழுப்பும், ஆனால் வெளியிடும் மாசு குறைவாக இருக்கும். சாதாரணமான பட்டாசுகளுடன் ஒப்பிடும்போது பசுமை பட்டாசுகள், 40 முதல் 50 சதவீதம் வரை குறைவான நச்சு வாயுவை வெளியிடும். குறிப்பாக பேரியம் நைட்ரúட் மூலப்பொருள் பயன்பாடு 40 சதவீதம் வரை குறையும். உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள், பசுமை பட்டாசுகளை தயாரித்து தீபாவளியையொட்டி விற்பனைக்கு அனுப்பி வருகின்றன.
 விபத்தில்லாத தீபாவளி...: சந்தையில் கிடைக்கும் பட்டாசுகளைச் சரியான, முறையான உற்பத்தியாளரிடம் இருந்து பெறுகிறோமோ என்பதை உறுதி செய்துகொண்டு வாங்குவது நல்லது. பட்டாசுகளைத் திறந்தவெளியில் வைத்துக் கொளுத்துவதே பாதுகாப்பானது. சிறிய வெடிகள், மத்தாப்புகளாக இருந்தாலும், அருகில் இரண்டு வாளிகளில் நீர் நிரப்பி பாதுகாப்புக்கு வைத்துக்கொள்ள வேண்டும்.
 பட்டாசு வெடிக்கும்போது நைலான் அல்லது வேறு செயற்கை இழைகளால் ஆன துணிகளைத் தவிர்க்கலாம். செருப்பு அணிந்துகொண்டு பட்டாசுகளைப் பற்றவைப்பது நல்லது. பட்டாசுகளைச் சட்டைப் பையில் வைக்கவே கூடாது.
 வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் வெடிக்க வைக்க முயற்சிக்கக் கூடாது. அதன்மேல், தூரத்தில் இருந்து நீர் ஊற்றி அணைப்பது நல்லது. கைகளில் வைத்துப் பட்டாசுகளைக் கொளுத்தக் கூடாது. மத்தாப்பு கொளுத்தினாலும், எரிந்த பிறகு பத்திரமாக அப்புறப்படுத்திவிட வேண்டும். குடிசைப் பகுதிகள் இருக்கும் இடத்தில் ராக்கெட்டுகளைக் கொளுத்தக் கூடாது. திறந்தவெளியில் காலியான பாட்டில்களில் வைத்து ராக்கெட் விடலாம். வீட்டில் உள்ள அனைவருக்கும், தீயை எப்படி அணைக்க வேண்டும் எனச் சொல்லித் தருவது அவசியம். இது விபத்து இல்லாத தீபாவளிக்கு வழிவகுக்கும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com