ஐஏஎஸ், ஐபிஎஸ்.,களுக்கு பயிற்சிகள் இருக்கிறதே? எம்எல்ஏ, அமைச்சர்களுக்கென பயிற்சிகள் இருக்கிறதா?

இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் அரசுப் பணியோ தனியார் பணியோ உரிய கல்வித் தகுதி, அனுபவங்கள் மற்றும் நேர்க்காணலுக்குப் பின் பயிற்சி எடுத்தாலும் அதற்குப் பின் பணிக்குத் தேவையான குறிப்பிட்ட கால அளவுக்கு
தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவை

இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் அரசுப் பணியோ தனியார் பணியோ உரிய கல்வித் தகுதி, அனுபவங்கள் மற்றும் நேர்க்காணலுக்குப் பின் பயிற்சி எடுத்தாலும் அதற்குப் பின் பணிக்குத் தேவையான குறிப்பிட்ட கால அளவுக்கு பயிற்சி கொடுப்பதும், பணியில் நடத்தை விதிகளைப் பின்பற்றுவதும் நாம் அறிவோம். அதன் படி, அரசு ஊழியர்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிவரை பயிற்சிகள் கட்டாயம்.

குடிமைப் பணிகளுக்கான பயிற்சி (Civil Services Training)

ஐஏஎஸ் தேர்வானவருக்கு பயிற்சி (IAS Training)
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் லால் பகதூர் சாஸ்திரி ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் கடந்த 1959 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. குடிமைப் பணி தேர்வில் ஐ.ஏ.எஸ். தேர்வானவர்களுக்கு இங்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.

குடிமைப் பணித் தேர்வில் ஐஏஎஸ் அதிகாரிகளாகத் தேர்வானோருக்கு. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டம் முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி நிர்வாக தேசிய அகாடமியில்(Lal Bahadur Shastri National Academy of Administration (LBSNAA) ஏப்ரல் 15, 1958  முதல் பயிற்சி கொடுக்கப்படுகிறது.

ஐபிஎஸ் தேர்வானவருக்கு பயிற்சி (IPS Training)
குடிமைப் பணித் தேர்வில் ஐபிஎஸ் அதிகாரிகளாகத் தேர்வானோருக்கு ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய காவல் பயிற்சி மையத்தில் ( Sardar Vallabhbhai Patel National Police Academy (SVPNPA),)பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  மௌண்ட் அபுவில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான பயிற்சிப் பள்ளி செப்டம்பர், 15,1948 ஆரம்பிக்கப்பட்டு பின்னர் 1975 இல் ஹதராபாத்துக்கு மாற்றப்பட்டது.

பாதுகாப்பு அலுவலர்களுக்கு பயிற்சி (Defence training)
டேராடூனிலுள்ள இந்தியன் மிலிடரி அகாடமியில்  மிலிடரிகளுக்கும்,எழிமலாவிலுள்ள இந்தியன் நேவல் அகாடமியில் கடற்படையினருக்கும், ஐதராபாத்தில் உள்ள ஏர் போர்ஸ் அகாடமியில் வான்படையினருக்கும், சென்னையிலுள்ள ஆபிசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில்  அலுவலர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்படுகிறது.

வங்கிப் பணியாளர்களுக்குப் பயிற்சி
வங்கிப் பணிக்கு தேர்தெடுக்கப்பட்ட பணியாளர்கள் தகுதிகாண் அலுவலராக (Probation)குறிப்பிட்ட காலம் பணியாற்றி பின் பணி வழங்கப்படுவார்.
அதேப்போல் மாநில அரசுப் பணியாளர்களுக்கு உரிய தேர்வுக்குப் பின் உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி, புதிய விஏஓக்களுக்கு பயிற்சி அளிக்க 118 மையங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவிதார்.

மருத்துவர்களுக்குப் பயிற்சி (Internship)
மருத்துவ கல்லுாரி மாணவர்களுக்கான பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ள நிலையில், அதற்காக வழங்கப்பட்ட பயிற்சி குறித்து அறிக்கை அளிக்க, இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை மாற்றி, இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவிட்டது.

பொறியாளர்களுக்குப் பயிற்சி
பொறியியல் மற்றும் டெக்னிகல் மாணவர்களுக்கு உள் பயிற்சி (inplant training) பின் இணைப்பு (Appendix) எனவும் பயிற்சி கொடுக்கப்படுகிறது

தலைமைச் செயலகப் பயிற்சி நிலையம்
இப்பயிற்சி நிலையத்தில், தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் உதவிப் பிரிவு அலுவலர்கள் (நேரடி நியமனம்) / உதவியாளர்கள் / தட்டச்சர்கள் / நேர்முக எழுத்தர்கள் ஆகியோர்களுக்கு பொது நிருவாக நடைமுறைகள் குறித்த அடிப்படைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் தலைமைச் செயலகப் பணியாளர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை மற்றும் நீதிமன்ற / நடுவர் மன்ற நடவடிக்கைகள் தொடர்புடைய சட்ட சார்பான பயிற்சிகளும் இப்பயிற்சி நிலையத்தில் அளிக்கப்படுகின்றன. இதுவரை, 55 அணிகளுக்கு அடிப்படைப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

அண்ணா மேலாண்மை நிலையம்
தமிழ்நாட்டின் முதன்மை பயிற்சி நிலையமாக விளங்கும் அண்ணா மேலாண்மை நிலையம், இயக்குநர் மற்றும் பயிற்சித் துறைத் தலைவரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது. அனைத்து நவீன அடிப்படைக் கட்டுமான வசதிகளுடன் கூடிய 'மகிழம்பூ' என்ற புதிய கட்டிட வளாகத்தில் இந்நிலையம் இயங்கி வருகிறது. இப்பயிற்சி நிலையத்தில் மேலாண்மை வளர்ச்சித் திட்டங்கள், நிறுவன மேம்பாட்டு அடிப்படைக் கோட்பாடுகளுடன் கூடிய பயிற்சி திட்டங்கள் ஆகியன பொது மற்றும் தனியார் நிறுவனங்களைச் சார்ந்தவர்களுக்கான பயிற்சியும் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பயிற்சித் திட்டங்களும் நடத்தப்படுகின்றன. தேசிய இயற்கைப் பேரழிவு மேலாண்மை குறித்த பயிற்சி அளிப்பதில், அண்ணா மேலாண்மை நிலையம் மிகவும் தேர்ந்த நிறுவனமாகும். இதற்கென இந்நிறுவனத்தில் பேரிடர் மேலாண்மைப் பிரிவு ஒன்று மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் உதவியோடு இயங்கி வருகிறது.

2005-2006 ஆம் ஆண்டில் இப்பயிற்சி நிறுவனம் பேரிடர் மேலாண்மை பற்றியும் பல்வகை இயற்கை பேரழிவுகளை சமாளிப்பது பற்றியும் 19 பயிற்சி வகுப்புகளை நடத்தி உள்ளது. 2005 ஆம் ஆண்டு மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டம் தொடர்பாக அண்ணா மேலாண்மை நிலையம் அனைத்துத் துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு இச்சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த நான்கு பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளது. நிருவாக மேம்பாட்டில் மாறிவரும் சூழ்நிலைகளை சமாளிப்பதற்கு ஏற்ற வகையில் அரசுப்பணியாளர்களுக்கு மின் ஆளுகை மற்றும் பல்வேறு தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகளையும் நடத்தி வருகிறது. தனது 25 ஆண்டு கால வரலாற்றில் அண்ணா மேலாண்மை நிலையம் பல்வேறு துறைகளிலும் 3000-க்கும் மேற்பட்ட பயிற்சித் திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. இதுவரை 71,000 பேர் இதன்மூலம் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர்.

2005-2006 ஆம் ஆண்டில், அண்ணா மேலாண்மை நிலையமானது பொது நிர்வாகம், தகவல் தொழில்நுட்பம், நிதி மற்றும் தனிநபர் ஆளுமை மேம்பாடு ஆகியவற்றில் இதுவரை 343 பயிற்சித் திட்டங்களை நடத்தியுள்ளது. இதன் மூலம் இதுவரை, 9,158 நபர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

அனைத்திந்திய குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையம், சென்னை 
அனைத்திந்திய குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் ஏனைய மாணவர்களுக்கு உணவு, இருப்பிடம், நூலகம் மற்றும் கணினி வசதிகள் அளிப்பதுடன், தீவிர பயிற்சியும் இந்நிலையத்திலேயே அளித்து, அவர்கள் இந்தியாவின் மிகவும் உயர்ந்த குடிமைப் பணிகளில் நுழைய உதவுவதே இப்பயிற்சி மையத்தின் முக்கிய நோக்கமாகும். ஆண்டு தோறும் 300 தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அகில இந்திய பணிகளுக்கான முதல் நிலை மற்றும் மூலத் தேர்வு எழுத உதவுவதுடன், நேர்காணலை எதிர்கொள்ளும் வகையில் அவர்களுக்கு மாதிரி நேர்காணல் நடத்தியும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அரசு அலுவலர் பயிற்சி நிலையம், பவானிசாகர்
பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் 1974ல் துவங்கப்பட்டது. ஆண்டு தோறும், இப்பயிற்சி மையத்தில் தமிழ்நாடு அமைச்சுப் பணியாளர்களுக்கு 60 நாட்கள் கொண்ட அடிப்படைப் பயிற்சி 6 அணிகளாகப் பிரித்து நடத்தப்படுகிறது . இப்பயிற்சியானது, இப்பயிற்சியாளர்களுக்கு தகுதிகாண்பருவம் நிறைவு செய்வதற்கு முன் தகுதியாக அமைகிறது. துணை வட்டாட்சியர்களுக்கான பணியிடைப் பயிற்சி இந்நிலையத்தில் அளிக்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும், சுமார் 2100 இளநிலை உதவியாளர்கள் மற்றும் 180 துணை வட்டாட்சியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரையில்,43283 இளநிலை உதவியாளர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். 2082 இளநிலை உதவியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுவரை பயிற்சி பெற்ற துணை வட்டாட்சியர்களின் எண்ணிக்கை 2906 மற்றும் பயிற்சி பெற வேண்டிய துணை வட்டாட்சியர்களின் எண்ணிக்கை 150 ஆகும். 

'அ’ மற்றும் ‘ஆ’ தொகுதி அலுவலர்களின் பயிற்சி நிலையம், சென்னை
அண்ணா மேலாண்மை நிலையத்தின் கீழ் இயங்கிவரும் ‘அ’ மற்றும் ‘ஆ’ தொகுதி அலுவலர்கள் பயிற்சி நிலையத்தில் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த பதவி உயர்வு மூலம் பணி அமர்த்தப்படும் ‘அ’ மற்றும் ‘ஆ’ தொகுதி அலுவலர்களுக்கு அடிப்படைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு சிறந்த ஒலி மற்றும் ஒளி வசதிகளுடன் பயிற்சிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் மக்கள் சாசனம், பாலின பிரச்னைகள், தகவல் பெறும் உரிமை , குழந்தை தொழிலாளர் ஒழிப்பு போன்ற பயிற்சித் திட்டங்கள் மற்றும் நிர்வாக மேம்பாட்டிற்காக அரசால் எடுக்கப்படும்

ஆய்வுப் பிரிவு
மாவட்ட அளவிலான அலுவலகங்களில் திறமையை மேம்படுத்தவும், சார்நிலை அலுவலகங்களின் பணியைத் துரிதப்படுத்தவும், அலுவலகப் பணியாளர்களின் பணியைச் சரியாக கட்டுப்படுத்தவும் 11 மாவட்ட ஆய்வுக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள், பணியாளர் மற்றும் நிருவாகச்

சீர்திருத்த (ஆய்வு ) துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த ஆய்வுக் குழுக்கள் விரிவான ஆய்வுகளை செய்வதோடு மாவட்ட அளவிலான அலுவலகங்களை திடீர் தணிக்கையையும் செய்து வருகின்றன. மாநிலத்திலுள்ள அனைத்துப் பகுதியிலுமுள்ள அலுவலகங்களில் அலுவலக நடைமுறை குறித்தான திறமையை மேம்படுத்தும் பொருட்டும், தற்போது நடைமுறையிலுள்ள விதிகள் மற்றும் வரைமுறைகள் குறித்த தெளிந்த அறிவைப் பெறுவதற்கும் இந்த ஆய்வுக் குழுக்கள் வழிவகுக்கின்றன. ஒவ்வொரு ஆய்வுக் குழுவும் ஏழு அலுவலர்களைக் கொண்டுள்ளது.

மாவட்ட ஆய்வுக் குழுக்கள் மாவட்ட அளவிலான அலுவலகங்களை ஆண்டு தோறும் ஆய்வு மற்றும் திடீர் ஆய்வு செய்வதோடு மாவட்ட ஆட்சித் தலைவரின் வழிகாட்டுதலின் பேரில், பொதுமக்களின் புகார்களுக்குள்ளான அலுவலகங்களை திடீர் தணிக்கை செய்ய மாவட்ட விழிப்புக்குழு.

இது மட்டுமின்றி, கடந்த 17, ஆகஸ்ட், 2012, சேலம், திருச்சி, மதுரையில் அரசு அலுவலர் மண்டல பயிற்சி மையம்  அமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

காவலர் பயிற்சிக் கல்லூரி (Police training college)
காவலர்களுக்குப் பயிற்சி அளிக்க காவலர் பயிற்சிக் கல்லூரி சென்னை அசோக்நகரில் அமைந்துள்ளது. இங்கு காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பயிற்சியில் அமர்த்தப்படுவார்கள். மேலும் காவல்துறை அதிகாரிகளுக்கான பயிற்சியும் இங்கு நடத்தப்படுகிறது.

காவல் துறையினருக்கான பயிற்சி மையங்கள் ரூ.38 கோடியில் மேம்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். காவல்துறை மானியக்கோரிக்கைக்குப்பிறகு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவலர் பயிற்சிப் பிரிவின் கீழ் காவலர் உயர் பயிற்சியகம், காவலர் பயிற்சிக் கல்லுாரி, காவலர் தேர்வு பள்ளிகள் மற்றும் பணியிடைப் பயிற்சி மையங்கள் ஆகியவை இயங்கி வருகின்றன.  இரண்டாம் நிலை காவலர்களுக்கு காவல் பயிற்சிப் பள்ளியில் 22 வாரங்களுக்கு மட்டுமே அடிப்படைப் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.  விரிவான பயிற்சி திட்டத்திற்கு குறைந்தது 7 மாத கால அளவு அடிப்படை பயிற்சியும், 1 மாத கால செயல்முறை பயிற்சியும் தேவைப்படுவதால் பயிற்சிக் காலத்தை நீட்டித்து 7.3.2012-ல் அரசாணை வெளியிடப்பட்டது.

இதனை கருத்திற்கொண்டு, சென்னை, அசோக் நகரில் உள்ள காவலர் பயிற்சி கல்லூரி மற்றும் தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, வேலூர், கோயம்புத்தூர்,  ஆவடி, விழுப்புரம், சேலம் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளிகள் மற்றும் பரங்கிமலை, புதுப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள காவலர் பயிற்சி மையங்களின் கட்டுமான வசதிகள் 38 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

நீதிபதிகளுக்கு பயிற்சி
வழக்கறிஞர்கள் மூத்த வழக்கறிஞர்களிடம் பயிற்சி பெறுகின்றனர். சிவில் நீதிபதிகளாக மற்றும் குற்றவியல் நடுவர்களாக தேர்வாகியுள்ளவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது.

எம்.எல்.ஏ., அமைச்சர்களுக்கு பயிற்சி உண்டா..?

எப்படிப் பேசுவது? எம்.எல்.ஏ.,க்களுக்கு பாடம்
கடந்த நவம்பர் 15, 2018  இல் கர்நாடகாவை சேர்ந்த புதிய எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.எல்.சி.,க்களுக்கு சட்டசபை மற்றும் மேல்சபையில் எப்படி பேச வேண்டும், எந்தெந்த வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்பது தொடர்பான இரண்டு நாள் பயிற்சி வகுப்பு நடத்த சட்டசபை செயலகம் ஏற்பாடு செய்தது. 

அதேபோல், ஆகஸ்ட் 3, இல் பாரதிய ஜனதா சார்பில் நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் டெல்லியில் இன்று தொடங்கியது. இதில் பிரதமர் மோடி, தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதில், நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியேவும் பாஜக எம்.பி.க்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனவும் பயிற்சி தரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை மட்டுமல்லாமல் பாஜக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பேசும்போது தங்கள் தொகுதி மக்களின் பிரச்னைகளை எப்படி அவையில் முன்வைப்பது என்பது குறித்தும் பயிற்றுவிக்கப்படுகிறது.

எம்.எல்.ஏ.,க்களுக்கான நடத்தை விதிகள் வகுக்கக் குழு
ஆகஸ்ட், 28, 2019 இல்  ''சட்டசபையில், எம்.எல்.ஏ.,க்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான, நடத்தை விதிகளை உருவாக்க, சபாநாயகர்கள் குழு அமைக்கப்படுகிறது,'' என, லோக்சபா சபாநாயகர், ஓம் பிர்லா தெரிவித்தார். சட்டசபை கூட்டங்கள் சிறப்பாக செயல்படவும், ஒத்திவைப்புகளை தவிர்க்கவும், நடவடிக்கை தேவை என, அனைவரும் ஒருமனதாக கூறினர்.

'லோக்சபா மற்றும் ராஜ்யசபா, எம்.பி.,க் களுக்கான நடத்தை விதிகளை உருவாக்க வேண்டும்' என, ஓம் பிர்லா ஏற்கனவே கூறியிருப்பது நல்ல விசயமே?.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கோ, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ எந்த கல்வித் தகுதியோ, பயிற்சியோ அரசியலமைப்பு வகுக்கவில்லை. அதனால் யார் வேண்டுமாலும், எந்த வயதிலும் அரசியலில் நுழைவதும், தேர்தலில் ஜெயித்து அதிகம் படித்த அதிகாரிகளை மிரட்டுவதும் சகஜமாகிப் போனது. அதுமட்டுமின்றி பேட்டிகளில் அவர்கள் பேசுவது, அறிக்கை கொடுப்பது இதெல்லாம் பார்த்து இளைஞர்கள் அரசியலை சாக்கடை என்று விலகும் நிலை உள்ளது.

விரைவில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி, சட்டம் மற்றும் விதிமுறைகளை பாடம் எடுப்பது அவசியமாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com