Enable Javscript for better performance
indian cow breeds brazil- Dinamani

சுடச்சுட

  

  இந்திய பசுக்களை இனவிருத்தி செய்ய பிரேசில் உதவி தேவையா?

  By C.P.சரவணன், வழக்குரைஞர்  |   Published on : 06th September 2019 12:33 PM  |   அ+அ அ-   |    |  

  cow-calf


  அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் இந்திய இன மாடுகள் 
  ப்ரமன் ( Brahman)


  பாஸ் இண்டிகஸ் (Bos indicus) எனும் உயிரியல் பெயர் கொண்ட மாடு இனங்கள் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட மாட்டினங்களின் கலப்பே என அமெரிக்காவிலுள்ள ஒக்லஹோமா ஸ்டேட் பல்கலைக்கழக ஆய்வு(Oklahoma State University) குறிப்பு தெரிவிக்கிறது. இந்தியாவிலுள்ள புனிதமான மாட்டினங்களில் இதுவும் ஒன்று. இந்தியாவில் இம்மாட்டினங்களை வெட்டவோ விற்கவோ மாட்டார்கள்.

  இம்மாட்டினத்தின் சிறப்பு முதுகிலுள்ள பெரிய திமில் (hump) ஆகும். மற்றவை அதன் உயர்ந்த கொம்புகளாகும். இம்மாட்டினங்கள் சுரக்கும் ஒருவித எண்ணையில் வரும் வாடை பூச்சிகளை அண்டவிடாமல் தடுக்கும்.

  இனம் வளர்ந்தவிதம் குஜராத், நெல்லூர், கிர் மற்றும் கிருஷ்ணா நதிக்கரைகளிலிருந்து  30 வகையான மாடுகள் 1854-ஆம் ஆண்டு முதல் 1926 வரை சுமார் 266 காளைகளையும், 22 பசுக்களும் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டன. அமெரிக்க கால்நடை பராமரிப்பாளர்களால் மிகவும் தேர்வு செய்யப்பட்ட இனமாகும்.

  அமெரிக்காவில் அறிமுகம்
  இந்திய மாட்டினம் அமெரிக்காவுக்கு வந்ததைப் பற்றி பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருப்பினும் டாக்டர். ஹில்டன் பிரிக்ஸ் (Dr. Hilton Briggs) தன்னுடைய Modern Breeds of Livestock,  நூலில் ப்ரமன் மாடு வளர்ப்போர் சங்கத்துக்கென சில முக்கிய அம்சங்களை தொகுத்துள்ளார்.

  இந்திய இன மாடுகளைப்பற்றி நன்கு அறிந்த  ஃபேர்ஃபீல்டைச் சேர்ந்த டாக்டர் ஜேம்ஸ் போல்டன் டேவிஸ் (Dr. James Bolton Davis) துருக்கி சூல்தானிடம் பணியாற்றிய பொழுது தென் கலிபோர்னியாவில் 1849-இல் இறக்குமதி செய்தார் என குறிப்பிடுகின்றார். 

  செயிண்ட் பிரான்சிவில்லி பகுதியிலிருக்கும் பருத்தி மற்றும் கரும்பு பயிரிடும் ரிச்சர்ட் பாரோவிடம்(Richard Barrow) இரண்டு காளைகளை 1854-ஆம் வருடம் கொடுத்தார். இது பருத்தி மற்றும் கரும்பு பயிரிடுதலை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியதற்கு பிரிட்டீஷ் அரசின் கௌரவப்படுத்தலாகும். அந்த காளையின் குட்டிகள் வளைகுடா பகுதியில் பாரோ இனம்(Barrow Grade) என்றழைக்கப்பட்டன.

  இந்த வெற்றியின் விளைவாக, டெக்ஸாஸ் மாகாணத்தைச் சார்ந்த J.M. ப்ராஸ்ட்(J.M. Frost) மற்றும் ஆல்பர்ட் மாண்டகோமரியை (Albert Montgomery)  மேலும் இரண்டு இனங்களை 1885-ஆம் வருடம் இறக்குமதி செய்தனர். இந்த மாடுகளை பாரோ மாடுகளுடன் இணைத்து பாஸ் இண்டிகஸ் இனம் உறுவாக முனைந்தனர்.

  சில மாடுகள் சர்க்கஸுக்காகவும், விவசாயத்திற்காகவும் வாங்கப்பட்டன. 1904-ஆம் வருடம் டெக்ஸாஸ் மாகாணம் விக்டோரியாவைச் சேர்ந்த A.M. மெக்பாடின் (A.M. McFaddin) என்பவர் ஹக்கென்பக் விலங்கு காட்சிக்கு (Haggenbach Animal Show) பிரின்ஸ் என்றழைக்கப்படும் செங்காளைகளை வாங்கியது அப்பகுதியில் பெரிய செய்தியாக பரவியது. அப்பொழுது ஹூஸ்டனை சேர்ந்த டாக்டர் வில்லியம் ஸ்டேட்ஸ் ஜேகப்(Dr. William States Jacobs) 12 மாடுகளை வாங்கினார்.

  1905-ஆம் ஆண்டு டெக்சாஸ் பகுதியை சார்ந்த பியர்ஸ் ராங்க்(Pierce Ranch) என்பவர் விக்டோரியாவைச் சார்ந்த தாமஸ் ஒகொனர் (Thomas M. O'Connor) என்பவர் துணையுடன் இந்திய இன 30 காளையும் 3 பசுக்களையும் வாங்கிச் சென்றார். இவையாவும் பியர்ஸின் மேலாளர் எபிள் பொர்டன்(Able P. Borden) தேர்வு செய்தவைகளாகும்.

  1923-24 வரை பிரேசிலிலிருந்து குஜராத், கிர் நெல்லூர் இன காளைகள் 90, அதன்பின் 1925-இல் 120 காளைகளும், 18 பசுக்களும் இறக்குமதி செய்யப்பட்டன. இவையாவும் மெக்ஸிகோவுக்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்டு அதன் பின் அமெரிக்காவுக்கு சென்றன.

  இனப்பெருக்கம்
  1920 ஆண்டு வாக்கில் டெக்சாஸின் தென்மேற்கு பகுதியில் மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் இவ்வகை மாடுகள் இனப்பெருக்கம் செய்யப்பட்டன. அவற்றில் சில கலப்பற்ற இனமாகவும், சில கலப்பினமாகவும் உற்பத்தியாயின.

  300-க்கும் குறைவான காளைகளே இறக்குமதி செய்யப்பட்டதற்கான பதிவுகளே உள்ளன. 5-வது தலைமுறையில் (31/32) குட்டிகள் சரியான இன ஒற்றுமையில் பிறந்தன. அவையாவும் இறைச்சிக்காகவே பயன்படுத்தப்பட்டன.

  தோற்ற குணநலன்கள்
  உருவம்(Size) அமெரிக்காவில் காணப்படும் ப்ரமன்ஸ் இடைத்தரமான அளவுடையது. காளைகள் 700 முதல் 900 கிலோகிராம் வரையும், பசுக்கள் 450 முதல்  700 கிலோகிராம் வரையும் எடையுள்ளன. கன்றுகள் 25 முதல்  30 கிலோகிராம் வரை பிறந்து வேகமாக வளர்கின்றன. மற்ற இனத்தை விட சீக்கிரம் தாய்ப்பாலை மறந்துவிடுகின்றன.

  குணநலன் (Disposition)
  ப்ரமன்ஸ் மிக அறிவுத்திறன் கொண்டது. மிக சிக்கனமானது. தீவனத்திற்கும் சீதோசனத்திற்கும் உடனே தகவமைத்துக் கொள்ளும் திறனுடன், நம்மை பற்றி அறிந்துகொள்ளும் திறன் படத்தவை. மேலும் வெட்கமும் உண்டு. ஜாக்கிரதையான அதே நேரத்தில் பயிற்றுவிக்கும் விசயங்களை உடனே கற்றுக் கொள்ளுமறிவு கொண்டுள்ளவை. நாம் செய்யும் காரியங்களுக்கு உடனே பதில் கொடுக்கும். சுலபமாக கையாளக்கூடிய ஒரு இனம்.

  நிறம்
  ப்ரமன்ஸ் சாம்பல் அல்லது செந்நிறத்துடன் கருப்பாகவும் இருக்கும். வளர்ந்த காளைகள், பசுக்களைவிட அடர்த்தி நிறத்தில் இருக்கும். கழுத்து, தோள், கீழ் தொடைகளில் அடர்நிறத்தில் இருக்கும்.

  வெப்பம் தாங்கும் தன்மை
  மிசௌரி பல்கலைகழகத்தில் செய்த் ஆய்வில்ப்ரமன்ஸ் மற்றும் ஐரொப்பிய இன காளைகள் 8° F முதல் 70° F வரை தாங்கும் சக்தி படைத்துள்ளது. 105° F. வெப்பத்திற்கு மேல் சில பாதிப்புகளை காட்டியுள்ளது.

  இவ்வளவு சிறப்புகளைக் கொண்டிருக்கும் இந்திய இன மாடுகளுக்கு அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் ப்ரமன்ஸ் இன மாடுகள் வளர்ப்போர் சங்கமே உள்ளது. 

  ஜெர்ஸி
  இங்கிலாந்தில் ஜெர்ஸி தீவில் தோன்றிய இனம் இது. செந்நிறம் அல்லது கருஞ் செந்நிறத்தை உடையதாகும். பெரும்பாலும் உடல் முழுவதும் ஒரே நிறத்தினையே பெற்றிருக்கும். சில மாடுகளில் வெண்மையான புள்ளிகள் காணப்படும். இவைகள் நல்ல மடியினையும், பால் உற்பத்தி திறனையும் பெற்றவை. ஆண்டுக்கு 4 ஆயிரத்து 500 லிட்டர் பால் தரும். பாலில் 4.5 சதவீதம் கொழுப்பு சத்து இருக்கிறது. இவை முதல் கன்றுக்குட்டியை 26 முதல் 30 மாதங்களில் ஈனும். பசுவின் எடை 300 முதல் 450 கிலோவும், காளையின் எடை 350 முதல் 500 கிலோ எடையும் கொண்டிருக்கும்.

  ஹால்ஸ்டீன் பிரிசீயன்
  ஹாலந்து நாட்டில் தோன்றியது. இவை கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் திட்டு திட்டாக கொண்டு அமைய பெற்றிருக்கும். ஒரு சில மாடுகள் முழுவதும் வெள்ளை அல்லது கருப்பாகவும் காணப்படும். வெளிநாட்டு இனங்களிலே இவை தான் பெரிய இனமாகும். அதிக பால் உற்பத்தி திறன் கொண்டது, பெரிய உடலும், மடியும், தடித்த பெரிய காம்புகளும் கொண்டது. அமைதியான தன்மை கொண்டது. அதிகமான வெப்பம் உள்ள இடத்தில் இதன் உற்பத்தி திறன் குறையும். பால் உற்பத்தியை பொறுத்தவரையில் ஆண்டுக்கு 6 ஆயிரம் லிட்டர் முதல் 7 ஆயிரம் லிட்டர் வரையில் தரும். பாலில் 3.5 சதவீதம் கொழுப்பு சத்து உள்ளது. முதல் கன்றை 28 முதல் 32 மாதங்களுக்குள்ளும், அதை தொடர்ந்து 14 மாதங்கள் இடைவெளியில் அடுத்த கன்றையும் ஈனும். பசுவின் எடை 550 முதல் 650 கிலோவும், காளையின் எடை 800 முதல் 900 கிலோ வரைக்கும் இருக்கும்.

  ஜெர்ஸி, ஹால்ஸ்டீன் மாட்டினங்களே இன்று இந்தியாவில் பெருகி வளர்ந்துள்ளது. நம் நாட்டின் மாட்டினங்களை விட வெளிநாட்டு மாட்டின வளர்ப்பில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

  பிரேசிலில் இந்திய மாடுகள்

  பிரேசிலின் பரானாவைச் சேர்ந்த விவசாயி செல்சோ கார்சியா , தன் உதவியாளர் இல்டெபோன்சோ டோஸ் சோர்சோவை 1958இல் மாடுகள் வாங்க இந்தியாவுக்கு அனுப்பியிருந்தார். 1960இல் பிரேசிலுக்கு கொண்டுவரப்பட்ட அந்தக் காளை, கிருஷ்ணா என பெயரிடப்பட்டு, கலப்பின இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டது. கிருஷ்ணாவின் வழித்தோன்றல்கள் தற்போது பிரேசிலின் பால் உற்பத்தியில் 80% பங்கு வகிக்கின்றன.

  கொஞ்ச காலம் மட்டுமே பிரேசில் மண்ணில் வாழ்ந்த கிருஷ்ணா ஒரே ஒரு வாரிசைத்தான் விட்டுச் சென்றது. செயற்கை கருவூட்டல் முறை கிருஷ்ணாவின் மகனான சகினா ஆயிரக்கணக்கான வழித்தோன்றல்களை உருவாக்க உதவியது. சகினா மூலம் கிருஷ்ணாவின் மரபணு பிரேசில் முழுதும் பரவியது.

  மாடுகளின் மரபணுவில் முன்னேற்றம் உண்டாகியுள்ளதால் கடந்த 20 ஆண்டுகளில் பிரேசிலின் பால் உற்பத்தி நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார், முன்னணி வேளாண்மை மற்றும் கால்நடை ஆய்வு நிறுவனமான எம்ப்ரபாவில் உள்ள உயிரியல் ஆய்வாளரான மார்கோஸ் டா சில்வா.

  இந்தியாவுக்குத் தங்கள் குடும்பம் மிகுந்த நன்றிக்கடன்பட்டுள்ளதாகக் கூறும் அவர், இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் மற்றும் பசுக்களைத் தங்கள் எப்போதுமே அரசன் மற்றும் அரசிகளைப் போலவே நடத்தியதாகக் கூறுகிறார்.

  மீண்டும், 1 லட்சம் அளவுள்ள விந்தணுக்களைப்  பெற பிரேசிலுடன் இந்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. எப்பொழுதும் பாரம்பரியங்களை வெளிநாட்டிற்கு விற்று பின் அங்கிருந்து மீண்டும் அதே பாரம்பரியத்தை ஒப்பந்தங்கள் மூலம் பெறுவது வேடிக்கையான ஒன்று.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai