
செப்டம்பர் 30-க்குள் பான் எண்ணுடன், ஆதார் எண்ணை சேர்க்காவிட்டால் அக்டோபர் 1 முதல் உங்கள் பான் எண் காலாவதி ஆகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் பான் எண் அவசியமாகியிருப்பதால், அந்த எண்ணையும், கார்டையும் பராமரித்து வருவது தேவையாகியிருக்கிறது.
எனவே, கால தாமதம் செய்யாமல் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைத்துக்கொள்ளுங்கள்.
எப்படி இணைப்பது?
1. incometaxindiaefiling.gov.in என்ற தளத்திற்கு செல்லவும்
2. Quick Links என்பதன்கீழ் Link Aadhaar கிளிக் செய்யவும்
3. திரையில், பான் எண், ஆதார் எண் உள்ளிட்டவற்றை பதிவிட்டு இணைத்துக்கொள்ளலாம்.
வேலை முடிந்தது.
4. ஒரு வேளை ஏற்கெனவே இணைக்கப்பட்டிருந்தால், அது குறித்த தகவல் காண்பிக்கும்.
ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் கவலை வேண்டாம். வழக்கமான உங்கள் பணிகளை மேற்கொள்ளலாம். அவ்வளவுதான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.