100 ஆண்டுகளுக்கும் மேல் பராமரிக்கப்பட்டு வரும் குடிநீர் ஊரணி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கானாடுகாத்தான் பேரூராட்சி பழையூர் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் ஊரணியைப் பொதுமக்கள் கண்ணின் இமைபோல் பராமரித்து பாதுகாத்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கானாடுகாத்தான் பகுதியில் உள்ள பழையூர் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேல் பராமரித்து பாதுகாக்கப்படும் குடிநீர் ஊரணி.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கானாடுகாத்தான் பகுதியில் உள்ள பழையூர் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேல் பராமரித்து பாதுகாக்கப்படும் குடிநீர் ஊரணி.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கானாடுகாத்தான் பேரூராட்சி பழையூர் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் ஊரணியைப் பொதுமக்கள் கண்ணின் இமைபோல் பராமரித்து பாதுகாத்து வருகின்றனர்.

செட்டிநாடு என்றாலே பல வகை சிறப்பு உண்டு. இப்பகுதியில் கோயில்கள் அதிகம். கோயில்களின் முன்பாக குளங்களும் நிறைந்து காணப்படுகின்றன. கானாடுகாத்தான் செட்டிநாடு பாரம்பரிய சுற்றுலா நகரமாக திகழ்கிறது. இந்த ஊர் வாஸ்து சாஸ்திர அமைப்பின்படி குடிநீர் குளங்கள், குடிநீர் ஊரணிகளை அன்றைய நகரத்தார்கள் ஏற்படுத்தியிருப்பதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். அப்படி அமைந்திருப்பதுதான் அவ்வூரின் வடகிழக்குப் பகுதியான பழையூர் கிராமத்தில் உள்ள செட்டியார் ஊரணி. இந்த ஊரணி சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலானவை. ஊரணியை அமைத்து பொதுமக்கள் குடிநீருக்கும், கால்நடைகளுக்கான தண்ணீர் தேவையையும் பயன்படுத்திக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டனர்.

குடிநீர் ஊரணியை பொதுமக்களும், பேரூராட்சி நிர்வாகத்தினரும் இணைந்தே பராமரிக்கின்றனர் என்கிறார் அவ்வூரைச் சேர்ந்த முக்கியப் பிரமுகரான சொ. துரைசிங்கம். 

அவர் மேலும் கூறுகையில், 

"இன்றைக்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் பழையூரில் உள்ளன. இந்தப் பகுதியினர் மட்டுமல்லாமல் அருகே நேமத்தான்பட்டி மற்றும் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த கிராமங்களிலிருந்தும் இந்த குடிநீர் ஊரணியில் தண்ணீர் எடுத்துச் சென்று பயன்படுத்தி வருகின்றனர். சுமார் 1,500-க்கும் மேற்பட்டவர்களுக்கு பயனளிக்கின்ற இந்த ஊரணியை பொதுமக்களும், கானாடுகாத்தான் பேரூராட்சி நிர்வாகமும் இணைந்து பராமரித்து வருகின்றனர். சுற்றிலும் வேலி அமைத்து, கரையோரங்களில் கற்கள் பதித்துள்ளனர். இரண்டு பகுதியிலும் படிக்கற்கள் அமைத்து பொது மக்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனை பாதுகாக்க காவலாளி நியமித்து பராமரிக்க வேண்டும்" என்றார்.

பழையூரைச் சேர்ந்தவரும், கானாடுகாத்தான் பேரூராட்சி முன்னாள் தலைவருமான சிதம்பரம் கூறுகையில், 

"இந்த ஊரணியை இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். கோடைகாலத்தில் தண்ணீர் வற்றிவிட்டால் முற்றிலுமாக தூர்வாரி சுத்தப்படுத்திவிடுவோம். மழை காலம் தொடங்கிவிட்டால் வடிகால் நீரை முதலில் இந்த ஊரணியில் நிரப்பும் நடவடிக்கை தொடங்கி இது நிரம்பிய பிறகே கண்மாய்க்கு தண்ணீரை திருப்பிவிடுவோம். இந்த ஊரணியைச் சுற்றிலும் வேலி அமைத்தும், நடைபாதை கற்கள் அமைத்தும் கானாடுகாத்தான் பேரூராட்சி நிர்வாகம் பணியை செய்துகொடுத்தது. தொடர்ந்து நல்ல முறையில் பொதுமக்களும் இணைந்து பராமரித்து தண்ணீரை பயன்படுத்தி வருகிறோம்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com