கம்பம் குழம்பு வகைகள்

உலக உணவு நாளையொட்டி, கம்பம் குழம்பு வகைகள் குறித்துப் பார்க்கலாம். 
கம்பம் குழம்பு வகைகள்

1) கட்டு - ரசம்

தேவையான பொருள்கள்:

கானம் - 50, கிராம், மிளகாய் வத்தல் - 10, கருவேப்பிலை - 15  இலை,  வெள்ளைப்பூண்டு -10 பல்,  புளி - எலுமிச்சம்பழம் அளவு, தக்காளி - 2 பழம், 250 மில்லி தண்ணீர், தேவையான அளவு உப்பு.

செய்முறை: முதலில் கானத்தை வாணலியில் வைத்து, கருக விடாமல், நறுமணம் வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர், மிளகாய் வத்தலையும் கருக விடாமல் வறுத்து தனியாக எடுத்து வைக்க வேண்டும், வறுத்த கானம், மிளகாய் வத்தலுடன், கருவேப்பிலை, வெள்ளைப்பூண்டு அனைத்தையும் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். புளியை நன்றாகக் கரைத்து, அந்தக் கரைசலுடன் தக்காளி பழத்தையும் சேர்த்து கரைக்க வேண்டும். புளி, தக்காளி கரைசலுடன், அரைத்த பொருட்களுடன் நன்றாக கலந்து தண்ணீரை கலந்து, தேவையான அளவு உப்பு கலந்து, அடுப்பில் வைத்து முரை கட்டியவுடன் இறக்கி விடவேண்டும். தாளிக்க தேவையில்லை.

கட்டு ரசம் சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்

தொடர் இருமலை குறைக்கும், உடல் மெலிவை தரும், உணவு பொருட்கள் நன்றாக ஜீரணமாகும்.

2) கானத் துவையல்

தேவையான பொருட்கள்

கானம் - 50, கிராம், மிளகாய் வத்தல் - 10, கருவேப்பிலை - 15 இலை, வெள்ளைப்பூண்டு 10 பல், புளி -(சுண்ட வத்தல் அளவு), உப்பு தேவையான அளவு.

செய்முறை

மேற்கூறிய தேவையான பொருட்களான கானம்,  மிளகாய் வத்தலை  தனித்தனியாக வறுத்து, பின்னர் கருவேப்பிலை, புளி, பூண்டுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து துவையலாக எடுத்துக்கொள்ளலாம்.

தயிர், புளி, லெமன் சாதங்களுக்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும். 

3) கீரை கூட்டு குழம்பு

தேவையான பொருட்கள்

அரைக்கீரை ஒரு கட்டு - (சுத்தம் செய்து கொள்ளவும்), துவரம் பருப்பு - 200 கிராம். பச்சரி - 2 அல்லது 3 டேபிள் ஸ்பூன், தக்காளிப்பழம் - 2 அல்லது 3, புளி - பெரிய எலுமிச்சம்பழம் அளவு, மிளகாய் வத்தல் - 15 ( காரம் தேவைப்படுபவர்கள் வத்தல் எண்ணிக்கையை கூட்டிக்கொள்ளலாம்), சின்ன வெங்காயம் - 150  கிராம்

செய்முறை விளக்கம்

25 கிராம் அளவுள்ள துவரம் பருப்பு, பச்சரிசி, மிளகாய் வத்தல்  ஆகியவற்றை  30 நிமிடங்கள் ஊறவைத்து, மீதம் உள்ள துவரம் பருப்புை முக்கால் பாகம் வெந்தவுடன், கீரையை நன்றாக கழுவி  வெந்த பருப்புடன் தேவையான அளவு உப்பு போட்டு வேகவைக்க வேண்டும்.

ஏற்கனவே ஊறவைத்த துவரம் பருப்பு, பச்சரிசி, மிளகாய் வத்தல் ஆகியவற்றை நன்றாக மைபோல் அரைத்ததுடன், அதனுடன் சேர்த்து, உறித்த சின்ன வெங்காயத்தை அரை குறையாக வருமாறு அரைத்துக் கொள்ள வேண்டும், புளியை ஊறவைத்து, நன்றாக கரைத்து, அந்த கரைசலுடன் தக்காளி பழத்தை கரைத்து சேர்த்து வெந்து கொண்டிருக்கும்,

பருப்பு, கீரையுடன் அரைத்த மற்றும் கரைத்த பொருட்களை கலந்து தேவையானஅளவு  தண்ணீர் (கெட்டித்தன்மை வருமளவு), உப்பு சேர்த்து, 15 நிமிடம் கொதிக்க வைத்து, தாளித்து கடுகு, உளுந்தம் பருப்பு,  பொடியாக நறுக்கிய  சின்ன வெங்காயம் சேர்த்து தாளித்து கொண்டால்  கீரை கூட்டு குழம்பு ரெடி.

இந்த குழம்பை சாதம், இட்லி, கேப்பைக்களி ஆகிய வற்றிற்கு சேர்த்து சாப்பிடலாம்.

குறிப்பு

மேற்கண்ட கீரைக்குழம்பில் துவரம் பருப்பிற்கு பதில் கானத்தை வறுத்து சேர்த்துக்கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com