மாமியார்களின் வகைகளும் அவர்களைக் கையாள்வதும்

ஆடையை அணிவது எப்படி? தலைமுடி வாருவது எப்படி? காய்கறிகளை வெட்டுவது எப்படி? என அனைத்திலும் உங்களுக்கு பாடம் எடுக்கலாம். அவரின் அழுத்ததால் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பெண்களே, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாமியாரிடமிருந்து உங்களால் தப்பிக்கவே முடியாது! ஆனால், அவர்களை எதிர்கொள்வதற்கு சில வழிமுறைகள் உள்ளன. மாமியார்கள் குறித்து மருமகள்கள் என்ன நினைக்கிறார்கள், இருவரிடையேயான உறவை வலுப்படுத்துவது எப்படி என்பது குறித்து இக்கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

பல நூற்றாண்டுகளாக, ஒடுக்குமுறைக்கு உள்ளான பெண்களுக்கு இப்போதுதான் தங்களின் இணையர்களை தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமை கிடைத்துள்ளது. இருப்பினும், இந்த உரிமை அனைவருக்கும் கிடைத்துவிடவில்லை. ஆனாலும், நம்மால் ஒன்றை புரிந்துகொள்ள முடியவில்லை. நமது அன்புக்குரிய கணவர், அவர்களின் அன்புக்குரிய தாயால்தான் வளர்க்கப்படுகிறார். 

அந்த அன்புக்குரிய தாய்க்கு என இருக்கும் தனித்துவமான பண்புகள், தனித்திறன்கள், மனநிலை ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள தேவை இல்லை. ஆனால், குறைந்தபட்சம் மதிப்பளிக்கலாம். கவலைப்பட வேண்டாம். அவர்களுடனான உங்கள் உறவை எப்படி எல்லாம் வலுப்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.

பொதுவாக இல்லாமல், இந்திய சமூகத்தில் எப்படிப்பட்ட மாமியார்கள் இருக்கிறார்கள் என்பதை முதலில் பார்ப்போம். 

வானளவு எதிர்ப்பார்ப்புகள் கொண்ட மாமியார்கள்

தங்களின் மகனுக்கு, நீங்கள் சரியான இணையர் அல்ல என சில மாமியார்கள் நினைக்கலாம். அதை உங்களிடம் மறைக்க அவர் எந்த விதமான முயற்சியும் மேற்கொள்ளாமலும் இருக்கலாம். "ம்ம்ம், என் பையனுக்கு வசதி படைச்சவங்களாம் கூட பொண்ணு கொடுக்கு தயாரா இருந்தாங்க" என சலித்துக்கொள்ளலாம். ஒரு படிக்கு மேலே சென்று, விருந்தினர் முன்பும், மற்ற குடும்ப உறுப்பினர்கள் முன்பும்கூட இதைப் பற்றி பேசலாம்.

இப்படிப்பட்டவர்களை சமாளிப்பது எப்படி?

உங்களின் மகனுக்கு நான் ஏன் பொருத்தமற்றவர் என கருதுகீறீர்கள் என பொறுமையுடன் கேளுங்கள். அவருடைய மகன் உங்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார் எனக் கூறி பாருங்கள். வாழ்க்கை முழுவதும் ஒன்றாக பயணிக்க பரஸ்பர விருப்பத்தின் பேரில் முடிவெடுத்திருக்கிறோம் என சொல்லுங்கள். மகன் மீது அவ்வளவு அன்பு வைத்திருக்கும் போது, அவரின் இணையரையும் சமமாக நடத்துவதுதான் சரி. நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஏன் முக்கியம் என்பதை வெளிகாட்டி கொள்ளும் வகையில் மாமியார் முன்பு நடந்து கொள்ளலாம். 

அனைத்தையும் முறையாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மாமியார்கள்

அனைத்தையும் சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மாமியார்களை சமாளிப்பதில் நீங்கள் அவருக்கு நேர்மாறாக உள்ளபோது அது சவாலாக மாறிவிடுகிறது. நீங்கள் கவலையற்று இருப்பது அவருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆடையை அணிவது எப்படி? தலைமுடி வாருவது எப்படி? காய்கறிகளை வெட்டுவது எப்படி? என அனைத்திலும் உங்களுக்கு பாடம் எடுக்கலாம். அவரின் அழுத்ததால் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம். அவரை தவிர்ப்பதற்கே, நீங்கள் அறையை விட்டு வெளியேற முற்படலாம்.

இம்மாதிரியான மாமியார்களை சமாளிப்பது எப்படி?

முடிந்த அளவுக்கு, அவர் முன்பு நீங்கள் நீங்களாகவே இருங்கள். உங்களை பற்றி அவர் தெரிந்து கொள்ளட்டும். காலம் செல்ல செல்ல அவர் உங்களை ஏற்றுக்கொள்வார். அவரின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் நிறைவேற்றுவது குறித்து கவலை அடைய வேண்டாம். ஆனால், அவரின் ஆலோசனைகளை கேட்டுக் கொள்ளலாம். சொல்லப்போனால், உங்கள் இணையரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது எப்படி என அவருக்கு தெரிந்திருக்கக் கூடும். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை அவரிடம் சொல்லுங்கள். அவரிடமிருந்து சிலவற்றை கற்க விரும்புவதாகவும் சிலவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை வெளிப்படையாக சொல்லுங்கள். கவலையற்று இருப்பது எப்படி என அவருக்கு சொல்லிக் கொடுங்கள். யாருக்கு தெரியும், எதிர்காலத்தில் அவர் உங்களுடன் அழகு நிலையத்திற்குக்கூட வரலாம்.

பொறாமை குணம் கொண்ட மாமியார்கள்

இணையரின் அன்புக்கு சொந்தம் கொண்டாடி மருமகன், மருமகள் ஆகியோருக்கிடையே அடிக்கடி சண்டை வரலாம். அதில், மாட்டிக்கொள்பவர் என்னவோ, பெரும்பாலும் உங்களின் இணையராகத்தான் இருப்பார்.

இவர்களை சமாளிப்பது எப்படி?

உங்களின் மாமியார் இப்படி நடந்து கொள்வதற்கு தன்னுடைய மகனை உங்களிடம் இழந்ததாக அவர் நினைக்கலாம். மகன்களை விட்டுத்தருவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. மகனை நன்றாக வளர்த்திருப்பதாக அவரை பாராட்டலாம். நீங்கள் கற்றுக்கொடுத்த நல்ல விஷயங்களே அவரைப் பிடிப்பதற்கு காரணம் என சொல்லலாம். இதே விழுமியங்களை அவருடைய பேரன், பேத்திகளுக்கு சொல்லித்தர நீங்கள் விரும்புவதாகக் கூறுங்கள். அவரின், முகத்தில் தெரியும் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது.

அனைத்திலும் மூக்கை நுழைக்கும் மாமியார்கள்

அனைத்திற்கும் சில வரம்புகள் உள்ளது என்பதற்குக்கூட அவருக்கு அர்த்தம் தெரியாமல் இருக்கலாம். குழந்தையைப் பெற்றெடுப்பது உள்பட நீங்களும், உங்களின் இணையரும் சேர்ந்து செய்யும் அனைத்திலும் அவர் மூக்கை நுழைக்கலாம். அனைத்து விவகாரங்கள் குறித்தும் உங்களிடம் நோண்டி நோண்டி கேள்வி எழுப்பலாம். வாழ்க்கையை மேம்படுத்துவது எப்படி என உங்களுக்கு பாடம் எடுக்கலாம். உங்களின் அந்தரங்க வாழ்க்கை வரை கூட அவர் செல்லலாம்.

இவ்வகை மாமியார்களை எதிர்கொள்வது எப்படி?

உங்களின் இணையரிடம் இதுகுறித்து தெரியப்படுத்துங்கள். அவரின் தாயாரின் கேள்விகள் அசெளகரியமாக  இருப்பதாக அவரும் ஒப்புக்கொண்டால், எதைப் பற்றி பேச வேண்டும் எதைப் பற்றி பேசக் கூடாது என்ற வரம்புகள் குறித்து அவரை விட்டு மாமியாரிடம் சொல்லச் சொல்லுங்கள். இப்பிரச்னையை முன் கூட்டியே, சரிப்படுத்தப்படவில்லை எனில், இது பெரிதாக மாற வாய்ப்புள்ளது.

அதிகாரம் செலுத்தும் மாமியார்கள்

ஒத்துழைப்புக்கு இடம் அளிக்காமல் தனக்கு என தனி பாதையை வகுத்துக் கொண்டவராக உங்கள் மாமியார் இருக்கலாம். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்ற விதிகளை பின்பற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிப்பவராக இருக்கலாம். நீங்கள் ராணுவத்தில் இருப்பது போல உணரலாம். உங்களின் தினசரி வாழ்க்கையே அழுத்தம் நிறைந்ததாக மாறலாம்.

இவர்களை எதிர்கொள்வது எப்படி?

சில சமயங்களில், அவர்களின் வழிமுறை சரிதான் என நீங்கள் எண்ணலாம். உங்களின் மாமியார் குறிப்பிட்ட விவகாரங்களை தனித்துவமாக எதிர்கொள்வது உங்களுக்குப் பிடித்திருக்கலாம். ஆனால், வயது வந்த நீங்கள், விருப்பம் போல் செயல்படுவது உங்களின் உரிமை. நீங்கள் செய்வது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என கூறிப் பாருங்கள். அவருடன் உடன்பட்டு நீங்கள் சிலவற்றை செய்யும்போது அது மேலும் மிகழ்ச்சியை தர வாய்ப்புள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com