பல் மருத்துவம் என்பது பழமையான மருத்துவத் தொழில்களில் ஒன்றாகும். இது பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே உருவானது. கி.மு 7000களில் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்துடன்கூட காணப்படுகிறது. இருப்பினும்கூட கி.மு 5000 வரை இது ஒன்றும் பெரிதாகப் பேசப்படவில்லை. அதன் பின்னரே பல் மற்றும் பற்சிதைவு தொடர்பான தகவல்கள்/பதிவுகள் கிடைத்தன. சமீப காலமாகத்தான், பல்லின் ஆரோக்கியம், உடலின் ஆரோக்கியத்துடன் நேரடியாகத் தொடர்புடையவை என்பது பல ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.
பல்மருத்துவத் துறையே வேறு. இது பொதுவாக மருத்துவத்தின் கீழ் முன்பெல்லாம் கொண்டுவரப்படுவதில்லை. பல் மருத்துவர் மற்றும் மருத்துவர் இருவரும் வேறு வேறு படிப்பை மேற்கொள்ளுகின்றனர். பெரும்பாலும் எக்ஸ் கதிர்கள் மற்றும் பல் பராமரிப்பு போன்றவை மருத்துவ திட்டங்களின் கீழ் இல்லை.
உலகின் முதல் பல் மருத்துவர்
கிமு 2686களில் எகிப்தில் வாழ்ந்த டாக்டர் ஹெஸி-ரா(Dr Hesy-Ra) என்பவரே 2017, ஜூன் 18ல் பதிவிட்ட தகவலின்படி உலகின் முதல் ஆவணப்படுத்தப்பட்ட மருத்துவர் ஆவார்.
பல் மருத்துவத்தின் தந்தை
வால்ஷ் ஜே. ஃபசார்ட்(Walsh J . Fauchard)
இந்தியாவில் பல் மருத்துவத்தின் தந்தை
ரபியுதீன் அகமது. இவரே இந்தியாவில் நவீன பல் மருத்துவத்தின் தந்தை என்று நினைவுகூரப்படுகிறார்.
பழங்கால பல் மருத்துவம் பற்றிய வினோத உண்மைகள்
கி.மு. 7000 முதல் பல் மருத்துவம் நடைமுறையில் உள்ளது என்பதற்கான சான்றுகள் உள்ளன.