தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பட்டம் விட்டதுபோல...

ஏர் இந்தியா நஷ்டத்தில் இயங்குகிறது, அதன் சேவை திருப்திகரமாக இல்லை என்பதால்தான், போட்டிக்குத் தனியார் விமான சேவை நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டன. இப்போது இயங்கும் எட்டு விமான சேவைகளில்

Updated On :4 ஆகஸ்ட் 2014, 9:31 pm

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆறு புதிய நிறுவனங்களுக்கு உள்நாட்டு விமான சேவையில் ஈடுபட உரிமம் அளித்திருப்பது, விமானத் துறையினரை மட்டுமல்ல, எல்லோரையுமே புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. உரிமம் வழங்கப்பட்டுள்ள ஏர் ஒன்,

பிரிமியர் ஏர், ஜெக்சஸ் ஏர் ஆகிய நிறுவனங்கள் அகில இந்திய அளவில் விமான சேவையில் ஈடுபட இருக்கின்றன. டர்போ மெகா, ஏர் கார்னிவல், ஜாவ் ஏர்லைன்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களும் பிராந்திய அளவிலான சேவைக்காக உரிமம் பெற்றிருக்கின்றன. இந்த ஆறு நிறுவனங்கள் மட்டும் அல்லாமல், கடந்த மாதம் தனது சேவையைத் தொடங்கியிருக்கும் மலேசியாவைச் சேர்ந்த ஏர் ஏசியாவும், இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படத் தொடங்கும் டாடா -

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் சேர்ந்தால் புதிதாக எட்டு விமான நிறுவனங்கள் இந்திய வானில் வட்டமிடப் போகின்றன.

கடந்த ஆட்சியில் இருந்த செல்வாக்கு இப்போது இல்லாததாலோ என்னவோ, ஏற்கெனவே இருக்கும் ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட் உள்ளிட்ட எட்டு விமான சேவை நிறுவனங்களால், புதிய விமான நிறுவனங்கள் தங்களுக்குப் போட்டியாக வருவதைத் தடுக்க முடியவில்லை. அதே நேரத்தில், ஏற்கெனவே உள்ள விமான நிறுவனங்களே மிகப்பெரும் இழப்பை எதிர்கொள்ளும் நிலையில் புதிய நிறுவனங்கள் எப்படி வெற்றிகரமாக இயங்கப் போகின்றன என்கிற ஐயப்பாடும் எழுகிறது.

பிராந்திய சேவைக்கான உரிமம் பெற்றுள்ள மூன்று நிறுவனங்

களும், மிகவும் பயனுடையதாக இருக்கும். குறிப்பாக, தென்னிந்

தியாவின் மாநிலத் தலைநகரங்களல்லாத நகரங்களை இணைக்கும் எண்ணத்துடன் செயல்பட இருக்கும் டர்போ மெகா ஏர்லைன்ஸ், இதுவரை சேவை இல்லாத நகரங்களை இணைக்கப் போவதாகக் கூறுகிறது. ஆனால், விமான நிலையமே இல்லாத நகரங்களில்

எப்படி இந்த நிறுவனத்தின் சேவை செயல்பட முடியும் என்கிற கேள்விக்கு பதில் தெரியவில்லை.

உரிமம் வழங்கப்பட்டிருக்கும் ஆறு நிறுவனங்களின் பொருளாதார வலிமை எப்படிப்பட்டது என்பது தெளிவாக இல்லை. சில நிறுவனங்களுக்கு இணையதள முகவரிகூட இல்லாத நிலையில் அவை பற்றிய விவரங்கள் எதுவுமே தெரியவில்லை. ஏர் ஒன் நிறுவனம் சஹாரா குழுமத்தின் பினாமி நிறுவனமாக இருக்கலாம் என்கிற

சந்தேகம் இருக்கிறது. சஹாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை ஜெட்

ஏர்வேஸ் வாங்கிவிட்ட நிலையில், இப்போது புதிய பெயரில்

உரிமம் பெற்றிருக்கக்கூடும் என்கிறார்கள்.

அரசு நிறுவனமான ஏர் இந்தியாவில் நஷ்டத்திற்கு மேல் நஷ்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. போதுமான விமானங்கள் இல்லை. அளவுக்கு அதிகமான ஊழியர்களும், அவர்களது ஊதியமும் பெரும் சுமை. போதாக்குறைக்கு, அரசியல் தலையீடும், தொட்ட இடத்தில் எல்லாம் முறைகேடும் என்று வெற்றிகரமாக நடத்தப்பட வேண்டிய ஏர் இந்தியா விமான சேவை, வேண்டுமென்றே நஷ்டத்தில் இயக்கப்படுகிறது. மாற்றங்கள் கொண்டு வர அரசு நினைத்தாலும், தொழிற்சங்கங்கள் அனுமதிப்பதில்லை.

ஏர் இந்தியா நஷ்டத்தில் இயங்குகிறது, அதன் சேவை திருப்திகரமாக இல்லை என்பதால்தான், போட்டிக்குத் தனியார் விமான சேவை நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டன. இப்போது இயங்கும் எட்டு விமான சேவைகளில் இண்டிகோ தவிர, ஏனைய நிறுவனங்கள் அனைத்தும் ஆண்டுதோறும் இழப்பை மட்டுமே எதிர்கொள்கின்றன. விமானத்திற்கான பெட்ரோல் செலவும், ஊழியர்களின் ஊதியமும்தான் விமான சேவையில் மிகப் பெரிய நடைமுறைச் செலவு. முதலீடும் மிகமிக அதிகம். இவற்றைப் புதிய நிறுவனங்கள் எப்படி சமாளிக்கப் போகின்றன?

கடந்த நிதியாண்டில் இந்திய விமான சேவை நிறுவனங்களில் மொத்த இழப்பு சுமார் 9,000 கோடி ரூபாய். கடந்த ஏழு ஆண்டுகளில் இந்திய விமான நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள இழப்பு ரூ.50,300 கோடி. இந்த நிலையில் புதிய நிறுவனங்களும் சேவையைத் தொடங்கினால், எப்படி வெற்றிகரமாகப் பறக்க முடியும்?

அதிக விமான சேவை நிறுவனங்களால், பயணிகளுக்கு லாபம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் கடைசி நேரப் பயணிகளுக்குக் குறைந்த கட்டணச் சலுகை கிடைக்கும் என்றால், இங்கே விமானம் காலியாக இருந்தாலும், இடம் இல்லை என்று கூறி அதிகக் கட்டணம் வசூலிக்கும் அவலம்தான் நடக்கிறது. கேள்வி கேட்பாரில்லை.

ஏற்கெனவே, விமான விபத்துகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அதிகரித்த விமான சேவைகள் வானத்திலும் அல்லவா போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும். எப்படி இந்திய விமான நிலைய ஆணையமும், விமானப் போக்குவரத்து அமைச்சகமும் சமாளிக்கப் போகின்றன?

பட்டம் பறப்பதுபோல, வானத்தில் விமானங்கள் பறக்கப் போகின்றன. மோதிக்கொள்ளாமல் இருந்தால் சரி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.