மாஃபியாக்களும், சட்ட விரோதக் கும்பல்களும் அதிகரிக்கும்போது தங்களைக் காப்பாற்றிக் கொள்ள சாமானிய மக்கள் சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்துக் கொள்கிறார்கள். அரசியல்வாதிகள் தங்களுக்கு இசட் பிரிவு, ஒய் பிரிவு என்று பாதுகாப்புக் கோருவது கௌரவம் என்று கருதுகிறார்கள். வசதி படைத்தவர்கள் எல்லோருமே முன்பெல்லாம் பண்ணையார்களும், ஜமீன்தார்களும் அடியாள்களை வைத்திருப்பதுபோல, உத்தரப் பிரதேசத்திலும், பிகாரிலும் துப்பாக்கி ஏந்திய தனியார் காவலர்கள் வைத்துக் கொள்வதை கௌரவ அடையாளமாகக் கருதுகிறார்கள். விளைவு? சட்ட விரோத ஆயுதத் தயாரிப்பு குடிசைத் தொழிலாக மாறியிருக்கிறது.