கம்யூனிஸத்திலிருந்து சர்வாதிகாரத்தைப் பிரிக்க முடியாது. அந்தத் தத்துவத்தின் அடிப்படையே சர்வாதிகார, எதேச்சதிகார கோட்பாடுதான். விளாதிமீர் லெனின் தலைமையில் ரஷியாவிலும், மாசேதுங் தலைமையில் சீனாவிலும், ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையில் கியூபாவிலும் மட்டுமல்ல, உலகின் ஏனைய எல்லா நாடுகளிலும் அமைந்த கம்யூனிஸ ஆட்சிகளும் சர்வாதிகார ஆட்சிகளாகத்தான் இருந்திருக்கின்றன. சர்வாதிகாரிகள் தங்களை நிரந்தரமானவர்கள் என்று கருதிக் கொள்வதும், கடைசியில் அவர்களது உற்ற தோழர்களாலேயே வஞ்சிக்கப்படுவதும் வரலாறு பலமுறை மீண்டும் மீண்டும் பதிவு செய்திருக்கும் உண்மை.