மோஹாலியில் உள்ள நார்த்தன் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜியில், இளநிலை மற்றும் முதுகலை படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பி.எஸ்சி., படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகாரம் பெற்ற பள்ளியில் +2வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எம்.எஸ்சி., படிப்புக்கு பி.இ, பி.டெக்., பி.எஸ்சி., ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை www.niiftindia.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.1750 வரைவோலை எடுக்க வேண்டும். கல்வி நிறுவனம் நடத்தும் நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 17 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 6ம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு www.niiftindia.com என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










