தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பி.எட். கலந்தாய்வு: கணிதத்தில் 42 இடங்கள் காலி

பி.எட். கணிதப் பிரிவில் மொத்தமுள்ள இடங்களில் 42 இடங்கள் மட்டும் காலியாக உள்ளன.

News image
Updated On :2 செப்டம்பர் 2013, 5:12 am

பி.எட். கணிதப் பிரிவில் மொத்தமுள்ள இடங்களில் 42 இடங்கள் மட்டும் காலியாக உள்ளன. மீதமுள்ள இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் 21 கல்லூரிகளில் 13 பாடப் பிரிவுகளின் கீழ் உள்ள 2,118 பி.எட். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி வெலிங்டன் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி வெள்ளிக்கிழமை முதல் நடத்தி வருகிறது.

கலந்தாய்வின் மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை கணிதம் மற்றும் புவியியல் பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது.

கணிதத்தில் மொத்தமுள்ள 438 இடங்களுக்கு, 520 மாணவ, மாணவிகள் அழைக்கப்பட்டனர். இதில் அரசுக் கல்லூரிகளில் உள்ள கணிதப் பிரிவு இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. அரசு உதவிப் பெறும் கல்லூரிகளில் 42 இடங்கள் மட்டும் காலியாக உள்ளன.

இதுபோல் புவியியல் பிரிவில் மொத்தமுள்ள 38 இடங்களில், 35 இடங்கள் நிரம்பிவிட்டன. மூன்று இடங்கள் மட்டும் காலியாக உள்ளன. திங்கள்கிழமை (செப்டம்பர் 2) விலங்கியல் மற்றும் தமிழ் பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. விலங்கியல் பிரிவில் உள்ள 200 இடங்களுக்கு 250 மாணவ, மாணவிகளும், தமிழ்ப் பிரிவில் மொத்தமுள்ள 114 இடங்களுக்கு 200 பேரும் அழைக்கப்பட்டுள்ளனர் என தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கைச் செயலர் ஜி. பரமேஸ்வரி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.