யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பேட்டரி மூலம் மின் உற்பத்தி: கலசலிங்கம் மாணவர் வடிவமைப்பு: மத்திய அரசு  காப்புரிமை வழங்கியுள்ளது

சுற்றுப்புறம் மாசடையாமல், பேட்டரியில் மின்சார உற்பத்தி செய்யும் கருவியை கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர் வடிவமைத்துள்ளார். இந்த வடிமைப்பிற்கு மத்திய அரசு காப்புரிமை வழங்கியுள்ளது. விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலை

News image
Updated On :9 மார்ச் 2013, 5:12 am

கோ.ஜெயக்குமார்

சுற்றுப்புறம் மாசடையாமல், பேட்டரியில் மின்சார உற்பத்தி செய்யும் கருவியை கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர் வடிவமைத்துள்ளார். இந்த வடிமைப்பிற்கு மத்திய அரசு காப்புரிமை வழங்கியுள்ளது. 
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு இயந்திரவியல் துறையில் படித்து வருபவர் அ.விஜயராஜ். இவரது தந்தை அர்சசுனன் தனியார் நிறுவனத்தில் ஓசூரில் வேலை செய்து வருகிறார்.
ரசாயன தொழிற்சாலை, சிமெண்ட் தொழிற்சாலை, ஆல்கஹால் தொழிற்சாலை, மரத் தொழிற்சாலை போன்றவற்றிலிருந்து வெளிவரும் புகையை, தண்ணீரில் கலந்து அதனை மின்சாரம் தயாரிக்கும் பேட்டரியில் ஊற்றி, மின்சாரம் தயாரித்து வெற்றி கண்டுள்ளார்.
இயந்திரவியல் துறை பேராசிரியர் ஜெயக்குமார் ஆலோசனையின் பேரில், துறைத் தலைவர் டாக்டர் ராஜககருணாகரன் வழிகாட்டுதலின் படி இந்த வடிவமைப்பு, மத்திய அரசின் காப்புரிமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அறிவுசார் காப்புரிமைத் திட்டத்தின் கீழ் இந்த வடிவமைப்பிற்கு காப்புரிமை அளித்து மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை உத்தரவு வழங்கியுள்ளது. 
வேலை செய்யும் விதம்: தொழிற்சாலைகளில் வெளிவரும் புகையை நீரில் செலுத்தியவுடன், குடுவையில் ஒரு ரோட்டர் மூலம் புகையையும் நீரையும் கலக்கி பின்பு அதனை பேட்டரியில் ஊற்ற வேண்டும். கார்பன் நீருடன் சேர்ந்து கார்போனிக் அமிலத்தை உற்பத்தி செய்யும். இந்த கார்போனிக் அமிலம், பேட்டரியில் உள்ள எதிர் நேர்த்தகடுகளில் இணைந்து, மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இதுபோல் எந்த தொழிற்சாலைப் புகையானாலும், நீருடன் கலந்து வரும் அமிலம் மின்சாரம் உற்பத்திக்கு பயன்படுத்த முடியும் என்பதையும் இந்த மாணவர் கண்டுள்ளார். முதல் தடவையாக சுற்றும் ரோட்டாருக்கு தேவையான மின்சாரம் இந்த பேட்டரியிலேயே எடுத்துக் கொள்ளலாம்.
புதிய மின் உற்பத்தி கருவியை வடிவமைத்து, மத்திய அரசின் காப்புரிமையை பெற்ற மாணவர் விஜயராஜை, கல்வி நிறுவனத் தலைவர் தி.கலசலிங்கம், வேந்தர் க.ஸ்ரீதரன், துணை வேந்தர் பி.கன்னியப்பன், பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன், டீன் டாக்டர் சரவணசங்கர், துணைப் பதிவாளர் பி.ஜி.குருசாமி பாண்டியன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.