கலசலிங்கம் பல்கலையில் 3 நாள் தேசிய கலை விழா தொடக்கம்: நாடு முழுவதும் இருந்து 3 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் ஸ்பார்க்ஸ்


விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் ஸ்பார்க்ஸ் 15 என்ற தேசிய மூன்று நாள் கலை விழா செவ்வாய்கிழமை கோலாகலமாக தொடங்கியது. இதில் நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் மாணவ மாணவியர் கலந்து கொண்டுள்ளனர்.
தொடக்க விழா வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. பல்கலைக்கழக இயக்குநர்கள் டாக்டர் எஸ்.சசிஆனந்த், எஸ்.அர்ஜூன் கலசலிங்கம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர். துணை வேந்தர் ச.சரவணசங்கர் வரவேற்றார். கலை விழா ஒருங்கிணைப்பாளரும், பதிவாளருமான டாக்டர் வெ.வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார்.
காக்கா முட்டை பட நடிகை கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஸ், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார்.
மாயா பட இயக்குநர் அஸ்வின் சரவணன், மாயா பட நடிகர் அம்ஜத்கான் ஆகியோர் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். கதாநாயகி ஐஸ்வர்யா சில பாடல்களுக்கு நடனம் ஆடி மாணவ மாணவியரை மகிழ்வித்தார்.
முதல் நிகழ்ச்சியாக ஆடை அலங்காரப் போட்டி நடைபெற்றது. இதில் 17 கல்லூரிகள் மற்றும் கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதும் இருந்தும் 40-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 3 ஆயிரம் மாணவ மாணவியர் விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
கலை விழா போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், மற்ற வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளாக மொத்தம் ரூ.3.50 லட்சம் வழங்கப்படுகிறது.
கலை விழாவிற்கான ஏற்பாடுகளை பதிவாளர் வெ.வாசுதேவன் தலைமையில் பேராசிரியர்கள் யவனாராணி, கவிதா, தவபாலன் மற்றும் கலைக்குழு மாணவர்கள் செய்துள்ளனர்.
தொடக்க விழாவில் அனைத்துக் கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள், ஏராளமான மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பேராசிரியை யவனராணி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...