ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஸ்ரீவிலி. லயன்ஸ் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி

ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 145 மாணவ மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

News image
Updated On :17 மே 2016, 9:54 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 145 மாணவ மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இப் பள்ளி மாணவி க.ஸ்வாதிபாலா 1172 மதிப்பெண்கள் பெற்று பள்ளி மற்றும் வட்டார அளவில் முதலிடம் பெற்றுள்ளார். எஸ்.கார்த்திகாதேவி 1169 மதிப்பெண்களும், எம்.அபிதா ரத்தினம் 1167 மதிப்பெண்களும் பெற்று முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளனர்.இப் பள்ளியின் எஸ்.கார்த்திகாதேவி, எஸ்.எஸ்.தாரணி, எஸ்.சாரோன் பிரசாத் ஆகியோர் கணித்ததில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

எம்.அபிதா ரத்தினம், சதுஸ்கா, சந்திரவதனா, நர்மதாஸ்ரீ ஆகிய நால்வரும் வேதியியல் பாடத்தில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சி அளித்து 100 சதவீதம் தேர்ச்சியைத் தொடர்ந்து காட்டி வரும் முதல்வர் சுதாகர், ஆசிரியர்கள் மற்றும் சிறப்பிடம் பெற்று வெற்றி பெற்ற மாணவ மாணவியர் அனைவரையும் பள்ளியின் தாளாளர் எம்.கே.முகமது மைதீன், பள்ளிக் குழுத் தலைவர் கே.குமாரவேல் மற்றும் அரிமா சங்கத்தினர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.