தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பள்ளியிலேயே வேலைவாய்ப்புக்கு பதியலாம்

கடந்த ஆண்டுகளை போலவே நிகழாண்டும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தங்களது கல்வித் தகுதிகளை அவர்கள் பயின்ற

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:19 pm

DIN

சென்னை: கடந்த ஆண்டுகளை போலவே நிகழாண்டும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தங்களது கல்வித் தகுதிகளை அவர்கள் பயின்ற பள்ளியின் மூலமாகவே நேரடியாக வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இணையதளத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெறலாம் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் நிரந்தரச் சான்றிதழ் வழங்கும் நாளிலிருந்து 15 நாள்களுக்கு, மாணவர்கள் தங்களது கல்வித் தகுதியை தாங்களின் பள்ளிகளிலேயே பதிவு செய்து கொள்ளலாம். அந்தந்தத் தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்பட்ட நாளே பதிவு மூப்பு நாளாக வழங்கப்படுகிறது.
இணையதளம் மூலம் பதிவு செய்வதற்கு ஏதுவாக, கடந்த ஆண்டு வழங்கிய அதே படிவங்களில் மாணவர்களின் விவரங்களைப் பூர்த்தி செய்து தயார் நிலையில் வைத்திருக்க தலைமையாசிரியர்களுக்குத் அறிவுரை வழங்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.