திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

பிளஸ் 2: மாற்றுத் திறனாளிகள், சிறைக் கைதிகளின் தேர்ச்சி விவரம்!

மாற்றுத் திறனாளிகள், சிறைக் கைதிகளின் தேர்ச்சி விவரம்..

News image

பிளஸ் 2 - DPS

Updated On :8 மே 2026, 0:36 pm IST

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில், மாற்றுத் திறனாளிகள், சிறைக் கைதிகளின் தேர்ச்சி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 2-ஆம் தேதி முதல் மாா்ச் 26-ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 3,412 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 27,475 மாணவ, மாணவிகள் எழுதினா்.

பொதுத்தோ்வு முடிவுகளைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இதுவரை புதிய ஆட்சி பொறுப்பேற்காததால் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பி. சந்தரமோகன் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் தேர்வு எழுதியவர்களில் 7.53 லட்சம் (95.2%) மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.19% பேரும், மாணவிகள் 97% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 தேர்வெழுதிய 8,855 மாற்றுத்திறனாளிகள் மாணவர்களில் 6,811 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 76.92 தேர்ச்சி சதவீதம் ஆகும்

​தேர்வு எழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 250 அதில் தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 238 பேர் 95.20 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இரண்டாம் ஆண்டு தனித்தேர்வர்கள் 24.18% பேரும், முதலாம் ஆண்டு தனித்தேர்வர்கள் 41.53% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்தாண்டு வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகளே கூடுதலாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகளின் தேர்ச்சியும் அதிகரித்துள்ளது.

Summary

With the results of the Plus 2 public examinations in Tamil Nadu released this morning, the pass details for differently-abled students and prison inmates have been published.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.