ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

சென்னை ஐஐடி கோடைக்கால பயிற்சித் திட்டம் - 2026

சென்னை ஐஐடி கோடைக்கால பயிற்சித் திட்டம் 2026க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image

சென்னை ஐஐடி

Updated On :10 பிப்ரவரி 2026, 4:54 pm IST

பொறியியல், மேலாண்மை, அறிவியல் மற்றும் மனிதவளத் துறைகளில் பட்டப்படிப்பு படித்து வரும் மாணவர்களுக்கான கோடைக்கால பயிற்சி திட்டத்துக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது சென்னை ஐஐடி.

இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்களும், ஒருங்கிணைந்த முதுநிலை பயிலும் 3ஆம் அல்லது 4ஆம் ஆண்டு மாணவர்களும் எம்எஸ்சி, எம்சு, எம்பிஏ முதலாமாண்டு மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த கோடைக்கால பயிற்சி 2026, மே 18ஆம் தேதி முதல் ஜூலை 17ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.

கோடைக்கால பயிற்சித் திட்டத்துக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்படும்.

கீழ்கண்ட துறைகளில் பயில்வோர் விண்ணப்பிக்கலாம்.

1. பொறியியல் துறைகள்:

விண்வெளி பொறியியல்

பயன்பாட்டு இயக்கவியல் மற்றும் உயிரி மருத்துவ பொறியியல்.

பயோ டெக்னாலஜி

வேதியியல் பொறியியல்.

சிவில் பொறியியல்.

கணினி அறிவியல் மற்றும் பொறியியல்.

டேட்டா சயின்ஸ் மற்றும் AI

பொறியியல் வடிவமைப்பு

மின் பொறியியல்.

மெக்கானிக்கல் பொறியியல்.

மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

உலோகவியல் மற்றும் பொருட்கள் பொறியியல்.

கடல் பொறியியல்.

அறிவியல் துறையில்

இயற்பியல்

வேதியியல்

கணிதவியல்

மனிதவளம் மற்றும் மேலாண்மைத் துறைகளில் பயில்வோரும் விண்ணப்பிக்கலாம்.

விடுதி மற்றும் உணவு வசதிகளை கட்டணத்துடன் மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

பிப்ரவரி 2ஆம் தேதி முதல் மார்ச் 2ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாகவே விண்ணப்பிக்கலாம். மேலதிகத் தகவல்களை அறிந்துகொள்ள கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.