வெளிநாட்டில் கல்வி! மருத்துவச் செலவு, காப்பீடு முறை குறித்து அறிவது அவசியம்!

வெளிநாட்டில் கல்வி பயில செல்லும்போது மருத்துவச் செலவு, காப்பீடு முறை குறித்து அறிவது அவசியம்!
காப்பீடு எடுப்பதன் அவசியம்
காப்பீடு எடுப்பதன் அவசியம்
Updated on
1 min read

வெளிநாட்டில் கல்வி பயிலச் செல்லும் மாணவர்களும் பெற்றோர்களும் கணக்கிடுவது கல்விக் கட்டணம், தங்குமிட வசதி, உணவு மற்றும் அடிப்படைச் செலவுகள்தான்.

ஆனால், சில கருத்தில் கொள்ள வேண்டிய, பெரும்பாலும் அறியப்படாத பல செலவுகள் இதில் உள்ளடங்கியிருக்கும். அதில் முதன்மையானது மருத்துவச் செலவு அல்லது காப்பீட்டுச் செலவு. சில நாடுகளில் மாணவர்கள் காப்பீடு பெற்று மருத்துவ வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த காப்பீட்டுத் தொகை ரு.30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.

மருத்துவ அவசரநிலை வெளிநாட்டில் நம்மை எதிர்பாராத விதமாக ஆபத்துக்குள்ளாக்கலாம். அது சில வேளைகளில் நமது பயணத் திட்டங்களைத் தடம் புரளச் செய்யலாம், மேலும் வெளிநாட்டில் மருத்துவச் செலவுகள் அதிக கட்டணம் கொண்டதாக இருக்கலாம் அல்லது காப்பீடு இல்லாதவர்களுக்கு மருத்துவ சிகிச்சையே இல்லை எனும் நிலையிலும் இருக்கலாம்.

அதாவது, ஆஸ்திரேலியாவில் மருத்துவக் காப்பீடுக்கான ஆண்டு சந்தா ரூ.30 முதல் தொடங்குகிறது. இதுவே ஜெர்மனி என்றால் தனி நபர் ஒருவருக்கு மாதந்தோறும் ரூ.8,000 ஆகக் கூட இருக்கிறது. இதுபோல நாட்டுக்கு நாடு இது வேறுபடுகிறது.

ஒருவர் கல்வி பயில செல்லவிருக்கும் நாட்டின் மருத்துவ சிகிச்சை குறித்து அனைத்துத் தகவல்களையும் திரட்டிய பிறகே முடிவு செய்ய வேண்டும். இல்லை நமக்கெதுவும் நடக்காது என்று நினைக்கவே கூடாது. வெளிநாட்டுக் கல்வியில் முன்னெச்சரிக்கைகள்தான் அவசியம்.

அதுபோல, கல்விப் பொருள்களை வாங்குவதற்கான செலவுகள், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல போக்குவரத்து செலவு. சில இடங்களில் வைப்புத் தொகைகள் வசூலிக்கப்படும் இதுபோன்ற அவசர நிதியையும் ஓராண்டின் கல்விச் செலவுக் கணக்கில் சேர்த்துக் கொள்வது நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com