நிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!இன்னும் ஒரு வாரத்துக்குள் அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வரும்: டிரம்ப்மேக்கேதாட்டு அணை: விரைந்து அனுமதி வழங்க பிரதமரிடம் சிவகுமார் கோரிக்கைமேட்டூர் அணையைத் திறக்கக்கோரி தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்நீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
/

சிபிஎஸ்இ தளத்தின் குறைகளை சுட்டிக்காட்டிய +2 மாணவருக்கு ஐஐடி-கான்பூரில் வேலை!

சிபிஎஸ்இ இணையதள குறைகளை சுட்டிக்காட்டிய +2 மாணவருக்கு ஐஐடி-கான்பூரில் வேலை வழங்கப்பட்டுள்ளது

News image

சிபிஎஸ்இ

Updated On :12 ஜூன் 2026, 11:22 am IST

பனிரெண்டாம் வகுப்பில் மதிப்பெண்கள் குறைந்ததால் மன உளைச்சல் ஏற்பட்ட மாணவர்களுக்கு இடையே, இந்த சிபிஎஸ்இ இணையதளத்தில் இருந்த குறைபாடுகளை சுட்டிக்காட்டியிருந்த நிசர்கா அதிகாரிக்கு ஐஐடி-கான்பூரில் வேலை வழங்கப்பட்டிருக்கிறது.

மிகவும் புத்திசாலியான பிளஸ் 2 மாணவர் நிசர்கா அதிகாரி, இந்த ஆண்டுதான் பள்ளிப்படிப்பை முடித்திருந்த போதிலும், ஐஐடி-கான்பூர் கல்வி நிலையத்தில ஓபன்-சோர்ஸ் இன்டெலிஜென்ஸ் (ஓஎஸ்ஐஎன்டி) மற்றும் சைபர் பாதுகாப்பு புத்தாக்க குழுவிலும் வேலை வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சிபிஎஸ்இ நிர்வாகம், கணினி திரையில் விடைத்தாள் திருத்தும் முறையை அறிமுகப்படுத்தியிருந்தது. இது குறித்து முன்கூட்டியே பல தரவுகளை ஆராய்ந்து, சிபிஎஸ்இ இணையதளத்தில் இருந்த குறைகளை நிசர்கா அதிகாரி சுட்டிக்காட்டியிருந்தார்.

அதாவது, சிபிஎஸ்இ இணையதளத்தை மிக எளிதாக ஹேக் செய்யலாம், பல குறைபாடுகள் இருக்கின்றன, ஓடிபி வழங்குவதை எளிதாக ஹேக் செய்து தகவல்களை திருடலாம் என பல விஷயங்கள் குறித்து மின்னஞ்சல் வாயிலாக முறையிட்டிருந்தார்.

இதன் மூலம், சிபிஎஸ்இ தளத்தின் பாதுகாப்புத் தன்மை பற்றி கேள்வி எழுந்தது. இதற்கிடையே, தேர்வு முடிவுகளின்போது, சிபிஎஸ்இ இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டு, மாணவர்கள் பெரும் துயரம் அடைந்தனர்.

அப்போது, ஐஐடி-சென்னை, ஐஐடி-கான்பூர் ஆகியவை, சிபிஎஸ்இ இணையதள மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டன. ஐஐடி-கான்பூர் இயக்குநர், மாணவர நிசர்கா அதிகாரியை தொடர்புகொண்டு, இணையதளம் குறித்து பல தகவல்களைக் கேட்டறிந்தார்.

இதையடுத்து, அவருக்கு, தங்கள் கல்வி நிலையத்திலேயே பணி வாய்ப்பு வழங்கப்படும் அவர் முடிவெடுத்து, அவருக்கேற்ற துறையில் பணி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நிசர்கா அதிகாரி மேற்கொண்டு கல்வி பயின்றுகொண்டே, இந்தப் பணியை மேற்கொள்வாரா? அவருக்கு வழங்கப்படும் ஊதியம் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Summary

+2 student who pointed out flaws in the CBSE website lands a job at IIT-Kanpur!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.