வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 8
1. பின்வரும் திட்டங்கள் மற்றும் கருத்துகளை அது தொடர்புடைய பெயர்களுடன் சரியாக பொருத்துக:
(a) ரயத்வாரி திட்ட அறிக்கை - 1. தந்தை பெரியார்
(b) பஞ்சமர் பள்ளிகளை
ஆதிதிராவிடர் பள்ளிகள் என
அழைப்பது
- 2. தாமஸ் மன்றோ
மற்றும் ப்ரான்சிஸ் எலிஸ்
(c) ஆணாதிக்க பேரினவாதத்தை
எதிர்த்த தலைவர் - 3. ஜான் ரால்ஸ்
(d) நீதிக் கோட்பாடு
- 4. அயோதிதாசர்
மற்றும் சிங்காரவேலர்
(a) (b) (c) (d)
(A) 2 4 3 1
(B) 2 3 1 4
(C) 2 1 4 3
(D) 2 4 1 3
2. கூற்று [A] :
பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது சமூக நீதியின் ஒரு மூலக்கல்லாகும். பணிபுரியும் பெண்கள் விடுதிகள், குழந்தைப் பராமரிப்பு மையங்கள் மற்றும் பெண்கள் தொடர்பான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற முயற்சிகள் பணித் தொகுதியில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
காரணம் [R] :
பொருளாதாரத்தில் பெண்கள் பங்கேற்பதற்கான தடைகளை நீக்கி, அரசாங்கம் மிகவும் உள்ளடக்கிய மற்றும் துடிப்பான தொழிலாளர்களை வளர்த்து வருகிறது.
(A) கூற்று [A] சரி; காரணம் [R] தவறு
(B) கூற்று [A] தவறு; காரணம் [R] சரி
(C) கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, மேலும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமாகும்
(D) கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, மேலும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமல்ல
3. இந்தியாவில் திறந்தவெளி மலம் கழிப்பதை ஒழிப்பதற்கும், 'ஸ்வச் பாரத் மிஷன்' மூலம் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள்
(A) வறுமை விகிதங்களைக் குறைத்தல்
(B) வேலைவாய்ப்புகளை மேம்படுத்துதல்
(C) பொது சுகாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் தூய்மைக் கலாச்சாரத்தை வளர்ப்பது
(D) போதுமான உள்கட்டமைப்பு இல்லாமை
4. புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை மூன்று வருடங்களுக்கு வழங்குவது என்று தொடங்கப்பட்டது நிதி சட்டம்?
(A) நிதிச் சட்டம், 2016
(B) செப்டம்பர் 25, 2014
(C) நவம்பர் 4, 2011
(D) நிதிச் சட்டம், 2014
5. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரம்
(A) காற்றாலை
(B) நிலக்கரி
(C) எண்ணெய் மற்றும் எரிவாயு
(D) அணுசக்தி
6. கூற்று (A]: இடப்பெயர்வு என்பது பிராந்தியங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு இடையே மக்கள் இடம்பெயர்தல் ஆகும்.
காரணம் [R]: இடப்பெயர்வு வெளிப்புறமாகவோ அல்லது சர்வதேசமாகவோ இருக்கலாம்.
(A) கூற்று [A] சரி ஆனால் காரணம் (R) தவறு
(B) கூற்று [A] தவறு மற்றும் காரணம் [R] சரி
(C) கூற்று [A] ம் மற்றும் காரணம் [R] ம் சரி
(D) கூற்று [A] ம் மற்றும் காரணம் [R] ம் தவறு
7. பின்வருவனவற்றில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
(1) கோயம்புத்தூர் - தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
(2) மதுரை - தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தலைநகரம்
(3) நாமக்கல் - தமிழகத்தின் நெற்களஞ்சியம்
(4) தஞ்சாவூர் - முட்டை நகரம்
(A) (1) மற்றும் (4)
(B) (1) மற்றும் (2)
(C) (2) மற்றும் (3)
(D) (3) மற்றும் (4)
8. பின்வருவனவற்றுள் எவை சரியாகப் பொருந்தியுள்ளன?
(1) குறிஞ்சி - கிளி
(2) முல்லை - காட்டுக் கோழி
(3) மருதம் - வானம்பாடி
(4) நெய்தல் - ஆந்தை
(5) பாலை - புறா
(A) (1), (2), (3), (4), (5)
(B) (2), (3), (4)
(C) (3), (4), (5)
(D) (1), (2), (5)
9. சரியான பொருத்தங்களை தேர்ந்தெடுக்கவும்.
(1) காவேரிப்பாக்கம் கல்வெட்டு - வரகுணா
(2) திருமுக்கூடல் கல்வெட்டு - வீரராஜேந்திரா
(3) திருவாலங்காடு செப்பேடு - முதலாம் ராஜேந்திரா
(4) உத்திரமேரூர் கல்வெட்டு - முதலாம் பராந்தகா
(A) (1) மற்றும் (2) சரி
(B) (3) மற்றும் (4) சரி
(C) (2) (3) மற்றும் (4) சரி
(D) (1) (2) மற்றும் (3)
10. பின்வரும் கூற்று மற்றும் காரணத்தைப் படித்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
கூற்று [A]:
1801ம் ஆண்டில், ஆங்கிலேயர்கள் ஓர் சக்திவாய்ந்த படையுடன் சிவகங்கையைத் தாக்கினர்.
காரணம் [R]:
1801 ஆண்டில் மருது சகோதரர் சின்ன மருது ஊமைதுரைக்கு அடைக்கலம் கொடுத்தார்.
(A) கூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
(B) கூற்று [A] தவறு ஆனால் காரணம் [R] சரி
(C) கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி மற்றும் காரணம் [R] என்பது கூற்று [A] இன் சரியான விளக்கம்
(D) கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி ஆனால் காரணம் [R] என்பது கூற்று [A] இன் சரியான விளக்கம் அல்ல
11. மதராஸ் மாகாணத்தில் ஒத்துழையாமை இயக்க எதிர்ப்பு சங்கத்தை தொடங்கிய கட்சியை அடையாளம் காண்க.
(A) சுதந்திரா கட்சி
(B) நீதிக்கட்சி
(C) கம்யூனிஸ்ட் கட்சி
(D) இந்திய தேசிய காங்கிரஸ்
12. 'உன்னதமான, தூய்மையான மனிதச் சிந்தனையின் தொகுதியே திருக்குறள்' என்னும் எம். ஏரியலின் கருத்தை அடியொற்றி திருக்குறளை 'தமிழர் வேதம்' எனக் குறிப்பிட்டவர்
(A) மகாத்மா காந்தியடிகள்
(B) அறிஞர் அண்ணா
(C) மு. வரதராசன்
(D) ஜி.யு. போப்
13. சரியான கூற்றினைக் கண்டறிக.
(1) திருக்குறளை இந்தியில் மொழிபெயர்த்தவர் - அப்பாதீட்சிதர்
(2) திருக்குறளை ஜெர்மனில் மொழிபெயர்த்தவர் - ஏரியல்
(3) திருக்குறள் 'அ'கரத்தில் தொடங்கி 'ன'கரத்தில் முடிகிறது
(4) நட்பியல் 13 அதிகாரங்களைக் கொண்டுள்ளது
(A) (1) மட்டும்
(B)1, 3 மட்டும்
(C) (1), (4) மட்டும்
(D) (2), (4) மட்டும்
14. சான்றாண்மையின் இலக்கணம் குறித்து வள்ளுவர் கூறுவனவற்றை நிரல்படுத்துக.
(1) நாணம்
(2) வாய்மை
(3) அன்பு
(4) ஒப்புரவு
(5) கண்ணோட்டம்
(A) (4), (3), (2), (5), (1)
(B) (5), (4), (3), (2), (1)
(C) (1), (2), (3), (4), (5)
(D) (3), (1), (4), (5), (2)
15. கூற்று [A] : "எல்லாப் பொருளும் இதன்பா லுள, இதன்பால் இல்லாத எப்பொருளு மில்லை"
காரணம் [R] : திருவள்ளுவரின் கருத்துகளில் பல அவர் காலத்தில் நிலவிய கொள்கைகளோடு ஒப்பிடும் போது புதுமையானவை, புரட்சிகரமானவை.
(A) [A] சரி, ஆனால் [R] தவறு
(B) [A] தவறு, ஆனால் [R] சரி
(C) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கமாகும்
(D) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது கூற்று [A] விற்கு சரியான விளக்கமல்ல
16. "இருப்பு முகம் செறித்த ஏந்தெழில் மருப்பின்" இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி
(A) உவமை அணி
(B) உருவக அணி
(C) தற்குறிப்பேற்ற அணி
(D) வேற்றுமை அணி
17. சரியான இணையைத் தேர்ந்தெடுக்க.
தமிழகத்தில் சங்ககால காசுகள் கிடைத்த இடங்கள்.
(1) தர்மபுரி - தொப்பூர்
(2) சேலம் - கன்னியன் குட்டை
(3) ஈரோடு - முக்கொம்பு
(4) திருச்சி - வெம்பாவூர்
(A) (1) மற்றும் (2) சரி
(B) (2) மற்றும் (3) சரி
(C) (3) மற்றும் (4) சரி
(D) (2) மற்றும் (4) சரி
18. கீழ்காண்பவற்றை சரியாக பொருத்துக.
(a) சார்ந்திருக்கும் குழந்தைகளுக்கு நிதியுதவி - 1. 18 மற்றும் 21 வயதுக்கு இடைப்பட்டவர்கள்
(b) ஆதரவற்ற மற்றும் அனாதை சிறுமிகளை
பராமரித்தல் - 2. ஆதரவற்ற,
கைவிடப்பட்ட மற்றும்
தனியான சிறுவர்களுக்கு வழங்குதல்
(c) வளர்ப்பு மற்றும் பராமரிப்பு
சேவைகள் திட்டம் -
3. 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள்
(d) சிறுவர்களுக்கான பராமரிப்பு இல்லம் - 4. 6 மற்றும் 16
வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள்
(a) (b) (c) (d)
(A) 2 3 1 4
(B) 4 2 3 1
(C) 3 4 2 1
(D) 2 4 1 3
19. 2024-2025 ஆம் ஆண்டைய தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையின் படி, அதன் உற்பத்தித்திறனைப் பொறுத்து பின்வருவனவற்றை ஏறுவரிசையில் வரிசைப்படுத்துங்கள்.
(1) நெல் உற்பத்தித்திறன்
(2) மக்காச்சோளம் உற்பத்தித்திறன்
(3) எண்ணெய் வித்துக்கள், நிலக்கடலை மற்றும் கரும்பு உற்பத்தித்திறன்
(A) (1) (2) (3)
(B) (3) (2) (1)
(C) (2) (1) (3)
(D) (3) (1) (2)
20. தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்தத் திட்டம் (TNHSRP) பற்றிய தவறான கூற்றினை கண்டறிக.
(i) இத்திட்டத்திற்கு உலக வங்கி ஆதரவு அளிக்கின்றது.
(ii) இந்த திட்டம் மத்திய மாநில அரசாங்கத்தால் 60:40 என்ற விகிதத்தில் பயன்பாட்டு நிதியுதவி வழங்கப்படுகிறது.
(iii) இந்த முடிவு அடிப்படையில் அமைந்த திட்டத்தினை தமிழ்நாட்டின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையால் செயல்படுத்தப்படுகிறது.
(iv) இந்த திட்டம் SDG 9 ஐ இலக்காக அடைவதை நோக்கமாக கொண்டுள்ளது.
(A) (i) மற்றும் (iii) மட்டும்
(B) (ii) மற்றும் (iii) மட்டும்
(C) (ii) மற்றும் (iv) மட்டும்
(D) (iii) மட்டும்
21. பின்வருவனவற்றில் தவறாக பொருத்தப்பட்டுள்ளவற்றை கண்டறிக.
(1) லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் நடைமுறைக்கு வந்த காலம் - ஜனவரி 16, 2014
(2) தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது - அக்டோபர் 10, 2004
(3) இந்தியத் தேர்தல் ஆணையம் - சட்டப்பிரிவு 324
(4) இந்திய தேசிய ஒருங்கிணைப்பு ஆணையம் - 1960
(A) (1) மற்றும் (3)
(B) (2) மற்றும் (4)
(C) (3) மற்றும் (4)
(D) (4) மற்றும் (1)
22. "சூர்ய கர் முஃப்ட் பிஜிலி யோஜனா” என்ற திட்டத்தின் நோக்கமானது
(A) வீட்டுக்கூரைகளில் சூரிய ஒளி மின்சாரம் நிறுவுவது
(B) ஏழைகளுக்கான வீடுகள் வழங்குவது
(C) வயது வந்தோருக்கான காப்பீடு வழங்குவது
(D) சிறிய தொழிற்சாலைகளுக்கு நிதி வழங்குவது
23. கூற்று [A] : குழுவின் 1793 ல் காரன்வாலிஸ் பிரபுவின் கிழக்கிந்திய வணிகக் ஆட்சியின் கீழ் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது.
காரணம் [R] : இம்முறையினால் ஜமீன்தார்கள் முழு நிலத்தின் உரிமையாளர்களாகத் தங்களை அறிவித்துக்கொண்டனர்.
(A) [A] சரி, [R] தவறு
(B) [A] தவறு, [R] சரி
(C) [A] மற்றும் [R] இரண்டும் தவறு
(D) [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R], [A] ன் சரியான விளக்கம்
24. கூற்று [A] : இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரியானது விரிவான, பல படிநிலைகளில் இலக்கு அடிப்படையில் ஒவ்வொரு மதிப்புக் கூட்டின் போது விதிக்கப்படுகிறது.
காரணம் [R] : இதன் நோக்கம் "ஒரே வரி, ஒரே சந்தை. ஒரே நாடு" ஆகும்.
(A) [A] சரி, ஆனால் [R] தவறு
(B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் ஆகும்
(C) [A] தவறு, [R] சரி
(D) [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல [A] என்பது சரி
25. கூற்று [A] : 1966 - 69 திட்டக் காலம் 'ஆண்டுத் திட்டம் அல்லது திட்ட விடுமுறைக் காலம்" என அழைக்கப்படுகிறது.
காரணம் [R] : ஏனெனில் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட இரண்டு பெரிய மோதல்கள்.
(A) [A] சரி , [R] தவறு
(B) [A] -யும் [R]-ம் சரி, ஆனால் [R], [A] விற்கான சரியான விளக்கமல்ல
(C) [A] -யும் [R]-ம் சரி, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கமாகும்
(D) [A] தவறு, [R] சரி
விடைகள்
1. (D) 2 4 1 3
2. (C) கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, மேலும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமாகும்
3. (C) பொது சுகாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் தூய்மைக் கலாச்சாரத்தை வளர்ப்பது
4. (A) நிதிச் சட்டம், 2016
5. (A) காற்றாலை
6. (C) கூற்று [A] ம் மற்றும் காரணம் [R] ம் சரி
7. (D) (3) மற்றும் (4)
8. (D) (1), (2), (5)
9. (C) (2) (3) மற்றும் (4) சரி
10. (C) கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி மற்றும் காரணம் [R] என்பது கூற்று [A] இன் சரியான விளக்கம்
11. (B) நீதிக்கட்சி
12. (A) மகாத்மா காந்தியடிகள்
13. (B)1, 3 மட்டும்
14. (D) (3), (1), (4), (5), (2)
15. (D) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது கூற்று [A] விற்கு சரியான விளக்கமல்ல
16. (A) உவமை அணி
17. (D) (2) மற்றும் (4) சரி
18. (C) 3 4 2 1
19. (A) (1) (2) (3)
20. (C) (ii) மற்றும் (iv) மட்டும்
21. (B) (2) மற்றும் (4)
22. (A) வீட்டுக்கூரைகளில் சூரிய ஒளி மின்சாரம் நிறுவுவது
23. (D) [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R], [A] ன் சரியான விளக்கம்
24. (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் ஆகும்
25. (C) [A] -யும் [R]-ம் சரி, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கமாகும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

