வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 9

வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 9

முந்தைய ஆண்டு வினாக்கள் வினா - விடை வங்கி...
Published on
Q

1. கூற்று:

தமிழகத்தில் தமிழகத்தில் வாழ்ந்த மூவேந்தர்களின் பெருமை ஆட்சித் திறம் பற்றி ஒரு சில கருத்துக்களை மட்டுமே திருவள்ளுவர் தமது குறட்பாக்களில் தந்துள்ளார்.

காரணம் :

மன்னர்களின் ஆட்சித் திறம் பற்றிய கருத்துக்களைக் கூற வேண்டும் எனக் கருதினார்.

(A) கூற்று காரணம் இரண்டும் சரி

(B) காரணம் தவறு ஆனால் கூற்று சரி

(C) கூற்று காரணம் இரண்டும் தவறு

(D) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

Q

2. திருக்குறளில் அமைந்துள்ள துறவறவியல் அதிகாரத்தின் எண்ணைக் குறிப்பிடுக.

(A) 18

(B) 13

(C) 12

(D) 16

Q

3. "வள்ளுவரும் குறளும்" என்ற நூலின் ஆசிரியர்

(A) தமிழண்ணல்

(B) கி.ஆ.பெ. விசுவநாதம்

(C) ரா.பி. சேதுப்பிள்ளை

(D) திரு.வி. கலியாண சுந்தரனார்

Q

4. திருவள்ளுவர் உருவத்தினை முதன் முதலில் ஓவியமாக வரைந்தவர்

(A) வேங்கட கிருஷ்ணபண்டிதர்

(B) வேணுகோபால சர்மா

(C) சாமிநாத சர்மா

(D) வண்ணச்சரப தீட்சிதர்

Q

5. சரியான இணையை கண்டறிக.

(1) நியூ இந்தியா - பாரதியார்

(2) தேசபக்தன் - வ.வே. சுப்பிரமணியன்

(3) நவசக்தி - திரு.வி. கலியாணசுந்தரம்

(4) தி இந்து - G. சுப்பிரமணியம்

(A) (1) மற்றும் (2) சரி

(B) (2) மற்றும் (3) சரி

(C) (3) மற்றும் (4) சரி

(D) (1) மற்றும் (4) சரி

Q

6. பிரம்மஞான சபை பற்றிய சரியான வாக்கியங்களை தேர்வு செய்க.

(i) மேடம் பிளாவட்ஸ்கி மற்றும் கர்னல் H.S. ஆல்காட் ஆகியோரால் பிரம்மஞான சபை நியூயார்க்கில் தோற்றுவிக்கப்பட்டது.

(ii) 1888-ல் இந்தியாவில் அன்னிபெசன்ட் அம்மையார் இதில் இணைந்தார்.

(iii) இதன் தலைமையகம் சென்னை அடையாறில் உள்ளது.

(A) (i) மற்றும் (ii)

(B) (ii) மற்றும் (iii)

(C) (i) மற்றும் (iii)

(D) (iii) மட்டும்

Q

7. கூற்று [A] : 1925-இல் ஈ.வே.ரா பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.

காரணம் (R) : சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரபூர்வ செய்தித்தாள் நியூ இந்தியா ஆகும்.

(A) [A] சரி ஆனால் [R] தவறு

(B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] யினுடைய சரியான விளக்கம்

(C) [A] தவறு, [R] சரி

(D) [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] யினுடைய சரியான விளக்கமல்ல என்பது சரி

Q

8. கீழ்கண்ட கூற்றுகளை கருத்தில் கொண்டு தவறான விடையை கண்டறி.

(1) 1798 செப்டம்பர், 1 அன்று மேஜர் பானர்மேன் தன்னைக் கட்டபொம்மன் பாளையங்கோட்டையில் சந்திக்கும்படி இறுதி எச்சரிக்கை விடுவித்தார்.

(2) கட்டபொம்மனின் கோட்டை 500 அடி நீளத்திலும் 300 அடி அகலத்திலும் முழுவதும் மண்ணினால் கட்டப்பட்டிருந்தது.

(3) 1799 செப்டம்பர் 16 அன்று பானர்மேன் கட்டபொம்மனை கயத்தாறு என்னுமிடத்தில் பாளையக்காரர்கள் கூடியிருந்த அவையில் விசாரணை செய்தார்.

(4) 1799 ஜூன் 1 அன்று கட்டபொம்மன் 500 ஆட்களுடன் சிவகங்கை சென்றார்.

(A) (1) மட்டும் தவறு

(B) (2) மட்டும் தவறு

(C) (1) மற்றும் (3) மட்டும் தவறு

(D) (2) மற்றும் (4) மட்டும் தவறு

Q

9. சரியான வாக்கியங்களைத் தெரிவு செய்க.

(1) காங்கிரஸ் கட்சி, 1923ல் சென்னையில் நடந்த தேர்தலை புறக்கணித்தது.

(2) சுயராஜ்ய கட்சி 11 இடங்களில் வெற்றி பெற்றது.

(3) சென்னையில் நீதிகட்சி அமைச்சரவை அமைத்தது.

(4) காமராஜர் சென்னையில் ஒத்துழையாமை இயக்கத்தினை வழிநடத்தினார்.

(A) (1), (4) சரியானது

(B) (1), (2) சரியானது

(C) (1), (3) சரியானது

(D) (1), (2), (3) சரியானது

Q

10. கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:

(a) காரைக்கால் அம்மையார் - 1. திருவந்தாதி

(b) ஆண்டாள் - 2. கச்சிக்கலம்பகம்

(c) அரங்கநாத முதலியார் - 3. பாவைப்பாட்டு

(d) சேரமான் பெருமாள் நாயனார் - 4. மூத்ததிருப்பதிகங்கள்

(a) (b) (c) (d)

(A) 2 3 1 4

(B) 3 1 2 4

(C) 4 3 2 1

(D) 1 2 3 4

Q

11. கீழ்கண்ட சிவகளை அகழாய்வு வாக்கியத்தில் பொருத்தமான பதிலை தேர்ந்தெடுக்கவும்.

(i) சிவகளை அகழாய்வு தாமிரபரணி ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ளது.

(ii) சிவகளைப் பகுதியில் வாழ்ந்த தமிழ்ச் சமூகம் மிகப்பழமையானதாக கருதப்படுகிறது.

(iii) செம்பு மற்றும் தங்கத்திலான பொருள்கள் இங்கு கிடைக்கப்பெற்றது.

(A) (i) மட்டும் சரி

(B) (i) மற்றும் (iii) சரி

(C) (i) மற்றும் (ii) சரி

(D) (iii) மட்டும் சரி

Q

12. சரியான இணையைக் கண்டறிக :

(1) ஐந்துலக வகைப்பாடு - R.H. விட்டாக்கெர்

(2) ஆறுலக வகைப்பாடு - கார்ல் வெயிசி, ம.ப.

(3) நான்குலக வகைப்பாடு - கார்ல் லின்னேயஸ்

(4) மூன்றுலக வகைப்பாடு - எர்னெஸ்ட் ஹெக்கேல்

(A) (1) மட்டும் சரி

(B) (1), (2) மற்றும் (4) சரியானவை

(C) (1) மற்றும் (2) சரியானவை

(D) (1), (2) மற்றும் (3) சரியானவை

Q

13. கீழ்கண்டவற்றுள் எது தவறாக பொருந்தி உள்ளது?

(1) டிரான்ஸ் சைபீரியன் இருப்புப்பாதை - இது பால்டிக்

கடலையும், பசிபிக்

பெருங்கடலையும்

இணைக்கிறது

(2) டிரான்ஸ் காஸ்பியன் இருப்புப்பாதை - இது மத்திய

ஆசியாவையும் ஜப்பானையும்

இணைக்கிறது

(3) கனேடியன் பசிபிக் இருப்புப்பாதை - இது அட்லாண்டிக்

பெருங்கடலையும்,இந்திய

பெருங்கடலையும்

இணைக்கிறது

(4) டிரான்ஸ் கான்டினென்டல் இருப்புப்பாதை - இது பியூனஸ்

அயர்ஸ் நகரத்தையும்

வால்பரைஸோ

நகரத்தையும்

இணைக்கிறது

(A) (1) மட்டும்

(B). (2) மட்டும்

(C) (3) மட்டும்

(D) (4) மட்டும்

Q

14. இந்திய அரசமைப்பின் 42-ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது இந்தியாவின் பிரதமராக இருந்தவர் யார்?

(A) ஜவஹர்லால் நேரு

(B) வி.பி. சிங்

(C) இந்திராகாந்தி

(D) மொரார்ஜி தேசாய்

Q

15. கூற்று [A] : பல்லவர்கள், மரம், சுதை, உலோகம், செங்கல் போன்ற கட்டுமானப் பொருள்கள் இன்றிக் குடைவரைக் கோவில்களை உருவாக்கினர்.

காரணம் [R] : கருங்கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிச் சுண்ணம் சேர்க்காமல் கட்டப்படும் கட்டடங்களுக்குக் "கற்றளிகள்" என்று பெயர்.

(A) [A] சரி ஆனால் [R] தவறு

(B) [A] தவறு ஆனால் [R] சரி

(C) [A] மற்றும் [R] இரண்டும் சரி

(D) [A] மற்றும் [R] இரண்டும் தவறு

Q

16. தவறான இணையைக் கண்டுபிடி.

(1) தென்திராவிட மொழி - மலையாளம்

(2) கிழக்கு திராவிட மொழி - முண்டா

(3) நடுத்திராவிட மொழி - தெலுங்கு

(4) வடதிராவிட மொழி - குரூக்

(A) (1)

(B) (2)

(C) (3)

(D) (4)

Q

17. கூற்று [A] : இரவீந்தரநாத் தாகூர் தனது 'சர்' பட்டத்தைத் துறந்தார்.

காரணம் [R] : 13 ஏப்ரல் 1919 அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைப்பெற்றது.

(A) [A] சரி [R] தவறு

(B) [A] மற்றும் [R] சரி, [R] [A] யினுடைய சரியான விளக்கம்

(C) [A] தவறு [R] சரி

(D) [A] மற்றும் [R] சரி ஆனால் [R], [A] யினுடைய சரியான விளக்கமல்ல

Q

18. கூற்று [A] :

இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாடு 1885 டிசம்பர் 28 ஆம் தேதி பம்பாயில் கூடியது.

காரணம் [R]

: தமிழ்நாட்டு பகுதியிலிருந்து 21 பேர் கலந்து கொண்டனர்.

(A) கூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு

(B) கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி மற்றும் கூற்று [A] விற்கு காரணம் [R] சரியான விளக்கமாகும்

(C) கூற்று [A] தவறு காரணம் [R] சரி

(D) கூற்று [A] மற்றும் காரணம் [R] சரி ஆனால் காரணம் [R] கூற்று [A] விற்கு சரியான விளக்கமல்ல என்பது சரி

Q

19. சிந்து நாகரிகம் குறித்து பின்வரும் கூற்றுகளில் எவை உண்மையானவை?

(i) 1920களில் மார்டிமர் வீலர் ஹரப்பா பகுதிகளில் அகழாய்வுகள் நடத்தினார்.

(ii) மிக நீளமானதாகக் கருதப்படும் எழுத்துத்தொடர் 26 குறியீடுகளைக் கொண்டுள்ளது.

(iii) பிராகிருத கல்வெட்டுகளில் "மெலுகா" என்ற சொல் சிந்து பகுதியைக் குறிக்கிறது.

(iv) ஸ்டீட்டைட் கல்லில் அமைந்த "மதகுரு அரசன்" மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்டது.

(A) (i) மற்றும் (ii) மட்டும்

(B) (i) மற்றும் (iii) மட்டும்

(C) (ii) மற்றும் (iii) மட்டும்

(D) (ii) மற்றும் (iv) மட்டும்

Q

20. கருத்து [A] மற்றும் காரணம் [R] வினாவை கருதுக.

கருத்து [A] : குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்கிறார்.

காரணம் [R] : நீதிபதிகளை நியமனம் செய்யும் பொழுது சட்ட அமைச்சரையும் கலந்தாலோசிக்க வேண்டும்.

(A) [A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A] க்கான சரியான விளக்கம்

(B) [A] மற்றும் [R] இரண்டும் சரி ஆனால் [R] என்பது [A] யின் சரியான விளக்கம் இல்லை

(C) [A] சரி ஆனால் [R] தவறு

(D) [A] தவறு ஆனால் [R] சரி

Q

21. மாநிலங்களுக்கிடையேயான குழுக்களை காலவரிசைப்படி ஒழுங்குபடுத்தவும்.

(1) புன்ச்சி குழு

(2) இராஜமன்னார் குழு

(3) சர்க்காரியா குழு

(4) வெங்கட செல்லையா குழு

(A) (3), (4), (2), (1)

(B) (2), (1), (4), (3)

(C) (2), (4), (3), (1)

(D) (2), (3), (4), (1)

Q

22. சரியான இணையைத் தெரிவு செய்க

(1) உச்ச நீதிமன்ற நீதிபதி ஓய்வு வயது - 60

(2) இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் நிற்பதற்கான குறைந்தபட்ச வயது - 35

(3) மேலவை உறுப்பினராக குறைந்தபட்ச வயது - 30

(4) கீழவை உறுப்பினராக குறைந்தபட்ச வயது - 21

(A) (1) மற்றும் (3) சரியானவை

(B) (1) மற்றும் (2) சரியானவை

(C) (2) மற்றும் (3) சரியானவை

(D) (3) மற்றும் (4) சரியானவை

Q

23. பின்வரும் விருதுகளை காலவரிசைப்படி வரிசைப்படுத்துக.

1. பாரத ரத்னா

2. பத்ம விபுஷன்

3. பத்மஸ்ரீ

4. பத்ம பூஷன்

(A) 2, 3, 1, 4

(B) 1, 2, 4, 3

(C) 4, 3, 2, 1

(D) 3, 1, 4, 2

Q

24. கூற்று [A] : கோவிட்-19 பெருந்தொற்றால் பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் கற்றல் இடைவெளிகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாட்டில் "இல்லம் தேடிக் கல்வி” திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

காரணம் [R] :

இந்தத் திட்டத்தில், தன்னார்வலர்கள் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று மாற்றுவழிகள் கொண்ட கல்வியை வழங்குகிறார்கள்.

(A) [A] மற்றும் [R] இரண்டும் உண்மை, மற்றும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம்

(B) [A] மற்றும் [R] இரண்டும் உண்மை, ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கமில்லை

(C) [A] உண்மை ஆனால் [R] தவறானது

(D) [A] தவறானது ஆனால் [R] சரியானது

Q

25. இந்தியாவின் பணவீக்கம் அதிகமாக இருப்பதற்கான காரணம்

(A) அதிக தேவை

(B) டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறைவு

(C) குறைவான உற்பத்தி

(D) குறைவான பண அளிப்பு

விடைகள்

1. (D) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

2. (B) 13

3. (B) கி.ஆ.பெ. விசுவநாதம்

4. (B) வேணுகோபால சர்மா

5. (B) (2) மற்றும் (3) சரி

6. (C) (i) மற்றும் (iii)

7. (A) [A] சரி ஆனால் [R] தவறு

8. (C) (1) மற்றும் (3) மட்டும் தவறு

9. (D) (1), (2), (3) சரியானது

10. (C) 4 3 2 1

11. (C) (i) மற்றும் (ii) சரி

12. (B) (1), (2) மற்றும் (4) சரியானவை

13. (C) (3) மட்டும்

14. (C) இந்திராகாந்தி

15. (C) [A] மற்றும் [R] இரண்டும் சரி

16. (B) (2)

17. (B) [A] மற்றும் [R] சரி, [R] [A] யினுடைய சரியான விளக்கம்

18. (D) கூற்று [A] மற்றும் காரணம் [R] சரி ஆனால் காரணம் [R] கூற்று [A] விற்கு சரியான விளக்கமல்ல என்பது சரி

19. (D) (ii) மற்றும் (iv) மட்டும்

20. (C) [A] சரி ஆனால் [R] தவறு

21. (D) (2), (3), (4), (1)

22. (C) (2) மற்றும் (3) சரியானவை

23. (B) 1, 2, 4, 3

24. (A) [A] மற்றும் [R] இரண்டும் உண்மை, மற்றும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம்

25. (B) டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறைவு

வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 9
வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 8

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com