பாஜகவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்: இபிஎஸ்
அதிமுகவின் ஆற்றல், தொண்டர் பலம் குறித்து பாஜகவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்றார் எடப்பாடி பழனிசாமி


அதிமுகவின் ஆற்றல் மற்றும் தொண்டர் பலம் குறித்து பாஜகவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலையொட்டி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள எடப்பாடி பழனிசாமி, மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் பாஜக களமிறங்கியுள்ளது. அதிமுக குறித்து பொய் பிரசாரம் செய்து வருகிறது.
அதிமுகவை பிளவுபடுத்த பாஜக எடுத்த பல்வேறு முயற்சிகளை முறியடித்து ஒன்றுபட்டு வலுவாக நிற்கிறோம்.
வன்முறை வெறியாட்டம், வடக்கே இருந்து ஏவும் விஷ அம்புகள் அனைத்தும் ஆளும் கட்சியின் அதிகார மமதை. இது போன்ற கோழைத்தனங்களை தாண்டிதானே எண்ணற்ற வெற்றிகளை நாம் பெற்று வருகிறோம்.
சில திடீர் தலைவர்களை பாஜக ஊக்குவிக்கிறது, அதன்மூலம் அதிமுகவை சீண்டுகிறது. அதிமுக ஆற்றல், தொண்டர் பலம் பற்றி பாஜகவு நாம் பாடம் கற்பிக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...