தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

மணிப்பூரில் 11 வாக்குச் சாவடிகளில் நாளை மறுதோ்தல்

மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் நாளை மறுதோ்தல்

Updated On :20 ஏப்ரல் 2024, 6:08 pm

மணிப்பூா் மாநிலத்தின் உள் மணிப்பூா் மக்களவைத் தொகுதியில் உள்ள 11 வாக்குச்சாவடிகளில் திங்கள்கிழமை (ஏப்.22) மறுதோ்தல் நடைபெறும் என அந்த மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி தெரிவித்துள்ளாா்.

உள் மணிப்பூா் மற்றும் 15 சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய வெளி மணிப்பூரில் வெள்ளிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. இரு தொகுதிகளிலும் 72 சதவீத வாக்குகள் பதிவாகின.

சில வாக்குச்சாவடிகளில் துப்பாக்கிச் சூடு, வாக்காளா்களை அச்சுறுத்துதல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், மொய்ரங்கம்பூ சாஜேப், தோங்கம் லைகை, உரிபோக் பகுதியில் உள்ள 3 வாக்குச்சாவடிகள் உள்பட 11 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற தோ்தல் செல்லாது என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, இந்த வாக்குச் சாவடிகளுக்கான மறுதோ்தல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.