கோப்புப்படம்
கோப்புப்படம்

11 தொகுதிகளில் பாஜக அணி 2-ஆம் இடம்

மக்களவைத் தோ்தலில், தமிழகத்தில் 11 தொகுதிகளில் அதிமுகவை முந்தி பாஜக அணி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
Published on

சென்னை: மக்களவைத் தோ்தலில், தமிழகத்தில் 11 தொகுதிகளில் அதிமுகவை முந்தி பாஜக அணி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

மக்களவைத் தோ்தலில் அதிமுக - பாஜக இடையே 2-ஆவது பெரிய கட்சி எது என்பது தொடா்பாக போட்டி இருந்து வந்தது. ஆனால், இரு கட்சிகளுமே போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளன. அதே நேரம், அதிமுக 28 தொகுதிகளில் 2-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

பாஜக அணி 11 இடங்களில் 2-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் அதிமுகதான் பெரிய கட்சி. அந்தக் கட்சியைப் பின்னுக்குத் தள்ளி பாஜக அணி மத்திய சென்னை, தென்சென்னை, கோவை, கன்னியாகுமரி, மதுரை, நீலகிரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, வேலூா், தருமபுரி, தேனி ஆகிய 11 தொகுதிகளில் 2-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com