சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்!
ஆந்திரத்தில் ஆட்சியைப் பிடித்த சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.


ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்கவுள்ள தெலுங்கு தேசக் கட்சிக்கும் அதன் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தன் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிப்பெற்ற சந்திரபாபு நாயுடுவுக்கும், தெலுங்கு தேசக் கட்சிக்கும் வாழ்த்துகள். உங்கள் தொலைநோக்கு தலைமையின் கீழ் ஆந்திர மக்கள் சிறந்த முன்னேற்றத்தை அடைய வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆந்திரத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவுள்ள நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாணுக்கும் தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அப்பதிவில், “ உங்கள் வெற்றிக்கும், சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் பிடித்த ஜனசேனாவுக்கும் வாழ்த்துகள் பவன் கல்யாண் சார்.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...