அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எத்தனை ‘டெம்போ’ பணம் வாங்கினீர்கள்? ராகுல்

அதானி, அம்பானியிடம் இருந்து காங்கிரஸ் டெம்போக்களில் பணம் பெற்றதாக எழுப்பிய குற்றச்சாட்டில் எப்போது விசாரணை தொடங்குவீர்கள்? என்று ராகுல் கேள்வி.
அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எத்தனை ‘டெம்போ’ பணம் வாங்கினீர்கள்? ராகுல்

நாட்டின் 7 விமான நிலையங்களை அதானிக்கு குத்தகைக்கு வழங்க எத்தனை டெம்போக்களில் ஊழல் பணத்தை வாங்கினீர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பிரசார கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று காலை லக்னெள விமான நிலையத்துக்கு வருகை தந்தார்.

அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எத்தனை ‘டெம்போ’ பணம் வாங்கினீர்கள்? ராகுல்
ரேபரேலியில் உள்ளூர்க் கடையில் தாடியை 'டிரிம்' செய்துகொண்ட ராகுல் காந்தி!

அப்போது லக்னெள விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட சிறு காணொளியை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், நாட்டு மக்களின் சொத்தான லக்னெள, மும்பை, மங்களூரு, அகமதாபாத், ஜெய்ப்பூர், திருவனந்தபுரம், குவாஹாட்டி உள்ளிட்ட 7 விமான நிலையங்களை உங்களின் ‘டெம்போ’ நண்பருக்கு 50 ஆண்டுகள் குத்தகைக்குவிட எவ்வளவு ஊழல் பணத்தை வாங்குனீர்கள் என்று ராகுல் காந்தி மோடிக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.

இதுகுறித்து மக்கள் மத்தியில் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

விமான நிலையத்தில் இருந்த அதானி பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனத்தின் விளம்பரப் பதாகைகளையும் சுட்டிக் காட்டி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மேலும், அதானி, அம்பானி குறித்து பேசாமல் இருக்க காங்கிரஸ் டெம்போக்களில் பணம் பெற்றதாக மோடி எழுப்பிய குற்றச்சாட்டை குறிப்பிட்டு, “அமலாக்கத்துறை, சிபிஐ-யில் விசாரணையை எப்போது தொடங்க போகிறீர்கள்? சீக்கிரம் விசாரணையை ஆரம்பியுங்கள்.” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

முன்னதாக ரேபரேலியில் உள்ளுர் சலூன் கடையில் ராகுல் காந்தி அவரது தாடியை டிரிம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com