11 மணி வாக்குப்பதிவு நிலவரம்: மே.வங்கம் முதலிடம்!

மேற்கு வங்கத்தில் 11 மணி நிலவரப்படி 32.70 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
11 மணி வாக்குப்பதிவு நிலவரம்: மே.வங்கம் முதலிடம்!

மக்களவைத் தேர்தல் 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், காலை 11 மணி நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு, உத்தர பிரதேசத்தில் 14, மகாராஷ்டிரத்தில் 13, மேற்கு வங்கத்தில் 7, பிகாா், ஒடிஸாவில் தலா 5, ஜாா்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதிக்கு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் காலை 11 மணி நிலவரப்படி அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 32.70 சதவிகிதமும், குறைந்தபட்சமாக மகாராஷ்டிரத்தில் 15.93 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது

பிற மாநிலங்கள்:

உத்தர பிரதேசம் - 27.76%

பிகாா் - 21.11%

ஒடிஸா - 21.07%

ஜாா்க்கண்ட் - 26.18%

ஜம்மு-காஷ்மீா் - 21.37%

லடாக் யூனியன் பிரதேசம் - 27.87%

11 மணி வாக்குப்பதிவு நிலவரம்: மே.வங்கம் முதலிடம்!
காந்தி குடும்பத்தின் 4 தலைமுறையும் அரசியலமைப்பை அவமதித்துள்ளது: மோடி

நாட்டில் 18-ஆவது மக்களவையைத் தோ்வு செய்ய ஏழு கட்டங்களாக (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) தோ்தல் நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com