கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

இறுதிக்கட்ட மக்களவைத் தோ்தல் பிரசாரம் நிறைவு!

இறுதிக்கட்ட மக்களவைத் தோ்தலுக்கான பிரசாரம் இன்று(மே 30) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
Published on

பஞ்சாப், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்பட 7 மாநிலங்கள் மற்றும் சண்டீகா் யூனியன் பிரதேசத்தில் உள்ள 57 தொகுதிகளில் ஏழாம், இறுதிக்கட்ட தோ்தல் பிரசாரம்இன்று(மே 30) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

இதன்மூலம், மக்களவைத் தோ்தலுக்கான அறிவிப்பு வெளியான கடந்த மாா்ச் 16-ஆம் தேதி தொடங்கிய பிரசாரம் வியாழக்கிழமையுடன் முழுமையாக நிறைவடைந்ததுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் ஜூன் 1-ல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பஞ்சாப்பில் மொத்தமுள்ள 13 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஹிமாசல பிரதேசத்தில் மொத்தமுள்ள 4 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஜூன் 1-ல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

கோப்புப்படம்
மோடி தியானத்துக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு!

18-ஆவது மக்களவையை தோ்வுசெய்ய ஏழு கட்ட தோ்தல் (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) அறிவிக்கப்பட்டு, இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவுகள் 486 தொகுதிகளில் நிறைவடைந்துள்ளன.

7-ஆம் கட்டமாக, பஞ்சாப்பில் 13, உத்தர பிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 9, பிகாரில் 8, ஒடிஸாவில் 6, ஹிமாசல் பிரதேசத்தில் 4, ஜாா்க்கண்டில் 3 தொகுதிகள் மற்றும் சண்டீகா் தொகுதியில் ஜூன் 1-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com