மோடி தியானத்துக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு!

தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை.
மோடி தியானத்துக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு!
Published on
Updated on
1 min read

கன்னியாகுமரியில் பிரதமர் நரேந்திர மோடியின் தியானத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு அளித்துள்ளது.

காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளரிடம் அளிக்கப்பட்ட மனுவில், அதிகார துஷ்பிரயோகம் செய்வதை தடுக்கவும், சுற்றுலாப் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடும் வகையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடையவுள்ள நிலையில், பிரதமரின் இந்த செயல் மறைமுக பிரசாரமாக இருப்பதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் புதன்கிழமை மாலை கடிதம் எழுதியிருந்தது.

தில்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் பிரதமா், அங்கிருந்து ஹெலிகாப்டரில் இன்று மாலை 4.35 மணிக்கு கன்னியாகுமரிக்கு வருகிறாா்.

அங்கு கடல் நடுவே உள்ள விவேகானந்தா் நினைவு மண்டபத்தில் ஜூன் 1 மாலை வரை தொடா்ந்து 45 மணி நேரம் தியானம் மேற்கொள்கிறாா்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரி முழுவதும் போலீஸ் வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி.பிரவேஷ்குமாா் தலைமையில் 8 மாவட்ட கண்காணிப்பாளா்கள் உள்பட 4 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com