மகாராஷ்டிரத்தில் 4 தொகுதிகளைப் பறிக்கும் முனைப்பில் பாஜக: என்ன செய்யப்போகிறது சிவ சேனை?

மகாராஷ்டிரத்தில் 4 தொகுதிகளைப் பறிக்கும் முனைப்பில் பாஜக உள்ளது. இதற்கு சிவ சேனை என்ன செய்யப்போகிறது என்ற எதிபார்ப்பு எழுந்துள்ளது.
மும்பையில் புதிய மெட்ரோ வழித்தடத்தை வியாழக்கிழமை தொடக்கி வைத்து பயணம் மேற்கொண்ட பிரதமா் நரேந்திர மோடி. உடன் மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலவா் தேவேந்திர ஃபட்னவீஸ்.
மும்பையில் புதிய மெட்ரோ வழித்தடத்தை வியாழக்கிழமை தொடக்கி வைத்து பயணம் மேற்கொண்ட பிரதமா் நரேந்திர மோடி. உடன் மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலவா் தேவேந்திர ஃபட்னவீஸ்.

மும்பை: மகாராஷ்டிரத்தில், முக்கியமான நான்கு மக்களவைத் தொகுதிகள் தங்களுக்குத்தான் வேண்டும் என பாஜக - ஷிண்டே தலைமையிலான சிவ சேனை கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதனால், மகாராஷ்டிரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு செய்யப்படுவதிலும், வேட்பாளர்களை அறிவிப்பதிலும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில், கல்யாண், தானே, நாசிக், சிந்துதுர்க்-ரத்னகிரி ஆகிய நான்கு தொகுதிகளையும் பாஜக கேட்கிறது. ஆனால், இந்த தொகுதிகள் அனைத்தும் சிவசேனையின் கோட்டையாக இருப்பவை. இந்த நான்கு தொகுதிகளிலும் 2014, 2019ஆம் ஆண்டுகளில் சிவ சேனை போட்டியிட்டு நான்கிலும் வெற்றி பெற்றுள்ளது.

மும்பையில் புதிய மெட்ரோ வழித்தடத்தை வியாழக்கிழமை தொடக்கி வைத்து பயணம் மேற்கொண்ட பிரதமா் நரேந்திர மோடி. உடன் மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலவா் தேவேந்திர ஃபட்னவீஸ்.
ரயில் நிலையங்களில் யு.பி.ஐ. மூலம் பயணச்சீட்டு பெறலாம்

ஆனால், இந்த முறை, நான்கு தொகுதிகளிலும் எடுக்கப்பட்ட உள்தொகுதி ஆய்வில், சிவசேனாவுக்கு எதிர்மறையான தரவுகள் வந்திருப்பதாகக் கூறி, ஷிண்டேவை நான்கு தொகுதிகளை விட்டுக்கொடுக்குமாறு பாஜக கேட்டுக் கொண்டுள்ளது. இருப்பினும், மக்களவைத் தொகுதிகளில் ஒன்றான கல்யாண் தொகுதியை, மக்களவை எம்.பி.யாக உள்ள ஷிண்டே மகன் டாக்டர் ஸ்ரீகாந்த் ஷிண்டே வைத்திருப்பதால் பாஜகவின் இந்த கோரிக்கையை ஏற்க ஷிண்டே மறுத்துவிட்டார்,” என சிவ சேனை தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

ஒரு வேளை, பாஜகவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், அது சிவசேனை தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் தவறான தகவலை சொன்னதுபோல ஆகிவிடும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இதுவரை சிவ சேனை தனது எட்டு வேட்பாளர்களை அறிவித்துள்ளது, ஆனால் ஷிண்டே தனது சொந்த மகன் டாக்டர் ஸ்ரீகாந்த், கல்யாண் தொகுதியில் போட்டியிடுவார் என்று இன்னும் அறிவிக்கவில்லை.

இந்த நிலையில்தான், ஷிண்டே தனது சொந்த மகனுக்கே சாதகமாக நடந்துகொள்ள முடியாவிட்டால், அவரது கட்சித் தொண்டர்களுக்கும் மற்ற தலைவர்களுக்கும் எப்படி விரும்பிய தொகுதிகளைப் பெற்றுத் தருவார்? இது ஷிண்டே தரப்புக்கு மட்டுமல்ல, பாஜகவுக்கும் பாதகமாகவே அமையும், ஏனெனில் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் சிவசேனை முழு பலத்துடன் பிரசாரம் செய்யாது என்று சிவ சேனை தரப்பில் கூறப்படுகிறது.

மும்பையில் புதிய மெட்ரோ வழித்தடத்தை வியாழக்கிழமை தொடக்கி வைத்து பயணம் மேற்கொண்ட பிரதமா் நரேந்திர மோடி. உடன் மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலவா் தேவேந்திர ஃபட்னவீஸ்.
வறண்ட மேட்டூர் அணை!

பாஜக எங்களுக்கு பெரிய அல்லது மூத்த சகோதரர் போன்றது என்பதை நாங்கள் புரிந்து இருக்கிறோம், ஆனால் அது கூட்டணியில் உள்ளவர்களை புறக்கணிக்கும் அளவுக்கு பெரிய முதலாளியாக இருக்கக்கூடாது" என்று மற்றொரு சிவ சேனை தலைவர் கூறுகிறார்.

சிவ சேனை (உத்தவ் பிரிவு) தலைவர் சுஷ்மா அந்தாரே கூறுகையில், சில அடிப்படையற்ற ஆய்வு முடிவுகளைக் காட்டி, சிவ சேனையிடமிருருந்து பாஜக சில தொகுதிகளைப் பறிக்க நினைக்கிறது என்கிறார்.

பாஜகவை சமாளிப்பதும், பேச்சுவார்த்தை நடத்துவதும் எளிதல்ல என்பதை முதல்வர் உணர்ந்திருக்க வேண்டும். பாஜக ஆதிகக்க கட்சி, அது எப்போதும் கூட்டணிக் கட்சிகளின் நலன்களைப் பற்றி எண்ணாது. உத்தவ் தாக்கரே பாஜகவை முறையாகக் கையாண்டார், ஆனால் ஷிண்டே தோல்வியடைந்துவிட்டார்” என்று சிவ சேனை (உத்தவ் பிரிவு) எம்எல்ஏவும் மாநிலங்களவையின் எதிர்க்கட்சி மேலவைத் தலைவருமான ராவ்சாகேப் தனவே கூறினார்.

மறுபக்கம், முன்னாள் அமைச்சர் கணேஷ் நாயக்கின் மகன் சஞ்சீவ் நாயக்கை தாணே மக்களவை தொகுதியிலும், அமைச்சர் ரவீந்திர சவானை கல்யாண் தொகுதியிலும், மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை சிந்துதுர்க்-ரத்னகிரி மக்களவையிலும் போட்டியிடவைக்க பாஜக விரும்புகிறது.

இந்த இழுபறி இதுவரை தீர்வு காணப்படாத நிலையில், இது குறித்து முன்கூட்டியே அறிவிக்கும் வகையில், பாரம்பரியமாக சிவ சேனை போட்டியிடும் இந்த தொகுதிகளில் எல்லாம் பாஜகதான் போட்டியிடப்போகிறது என்பதை சம்பாஜி நகரில் அமித் ஷா அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷிண்டே பிரிவிலும் பூசலா?

ஒருபக்கம் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாஜக மற்றும் சிவ சேனை (ஷிண்டே பிரிவு) இடையே ஏற்பட்ட மோதலால், ஷிண்டே பிரிவில் உள்ளவர்கள் தலைவர் மீது அதிருப்தியில் உள்ளனர். ஒருவேளை, பாஜகவின் கோரிக்கையை ஷிண்டே ஏற்றுக்கொண்டால், அது சிவ சேனை தொண்டர்களுக்கு தவறான செய்தியை அனுப்பும் என்று மட்டும் உறுதியாக எச்சரித்துவிட்டனர் ஷிண்டேவுக்கு. இனி என்ன செய்யப்போகிறார் ஷிண்டே என்பதைத்தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com