குஜராத் வேட்பாளர் தேர்வில் குளறுபடியா? மோடிக்காக வாக்களிக்கச் சொல்லும் பாஜக

குஜராத் வேட்பாளர் தேர்வில் குளறுபடியா என்றாலும் மோடிக்காக வாக்களியுங்கள் என பாஜக பிரசாரம் செய்கிறது.
குஜராத் வேட்பாளர் தேர்வில் குளறுபடியா? மோடிக்காக வாக்களிக்கச் சொல்லும் பாஜக

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதில், பல்வேறு விமர்சனங்களை சந்தித்த போதிலும், 26 தொகுதிகளிலும் அறிவிக்கப்பட்ட பாஜக வேட்பாளர்கள் யாரும் மாற்றப்பட மாட்டார்கள் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

அது மட்டுமல்ல, குஜராத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் மீது மக்களுக்கு ஏதேனும் காழ்ப்பு அல்லது அதிருப்தி இருந்தால் கூட, அவை அனைத்தையும் புறந்தள்ளிவைத்துவிட்டு, அனைவரும், பிரதமர் நரேந்திர மோடிக்காக பாஜகவுக்க வாக்களியுங்கள் என்று சூரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய குஜராத் பாஜக தலைவர் சி.ஆர். பட்டீல் தெரிவித்துள்ளார்.

குஜராத் வேட்பாளர் தேர்வில் குளறுபடியா? மோடிக்காக வாக்களிக்கச் சொல்லும் பாஜக
மகாராஷ்டிரத்தில் 4 தொகுதிகளைப் பறிக்கும் முனைப்பில் பாஜக: என்ன செய்யப்போகிறது சிவ சேனை?

ராஜ்கோட்டில் புருஷோத்தம் ரூபாலா, சபர்கந்தாவில் ஷோபனா பரையா மற்றும் வல்சாத்தில் இருந்து தவல் படேல் என சில வேட்பாளர்கள் மீது விமர்சனங்கள் இருந்தபோதிலும், குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளிலும் கட்சி வேட்பாளர்கள் மாற்றப்பட மாட்டார்கள் என்று பாஜக தலைமை கூறிவிட்டது.

பாஜகவின் வேட்பாளர் யாராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு உங்களது ஒரு வாக்கினை அளித்துவிடுங்கள், உங்கள் ஓட்டுகளை மட்டுமல்ல, உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்களையும் வாக்களிக்கச் சொல்லுங்கள். ஒருவேளை, உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது, அந்த வேட்பாளர் சரியில்லை என்று உங்களிடம் சொன்னால், அவர்களிடம் சொல்லுங்கள், பிரதமர் நரேந்திர மோடிக்காக பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்ட என்று. ஒருவேளை, எந்தவொரு வேட்பாளரும் சரியாக வேலை செய்யாவிட்டால், உடனடியாக என்னிடம் சொல்லுங்கள். நான் பிரதமர் மோடியிடம் சொல்கிறேன் என்று பேசியுள்ளார்.

ராஜ்கோட் தொகுதியில் போட்டியிடும் புருஷோத்தம் ரூபாலா, சத்திரிய சமுதாய மக்களுக்கு எதிரான தனது கருத்துகளால் சர்ச்சையை ஏற்படுத்தியவர். எனவே, இவரை மாற்றும்படி சத்திரிய மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனால், இதற்கு பதிலளித்திருக்கும் பட்டீல், சத்திரிய சமுதாய மக்கள் ராஜ்கோட் வேட்பாளர் புருஷோத்தம் ருபாலாவை பெரிய இதயம் கொண்டு மன்னிக்க வேண்டும். அவர் மூன்று முறை மன்னிப்புக்கோரி விட்டார். வேறு வேட்பாளரை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் கூறுகையில், தற்போதைக்கு எந்த வேட்பாளரையும் மாற்ற முடியாது. ஒரு வேளை இந்த நிலையில் மாற்றினால், குஜராத்தில் பாஜக பலமாக இல்லை என்பதை மக்களுக்குத் தெரிவிக்கும் சமிக்ஞையாக மாறிவிடும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாஜக தொண்டர்களின் எதிர்ப்பு காரணமாக வதோதரா மற்றும் சபர்கந்தா தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்திருந்தனர்.

வேட்பாளருக்காக இல்லை, மோடிக்காக வாக்களியுங்கள்

குஜராத் பாஜக தலைவர் சி.ஆர். பட்டீல், கட்சியினருக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார், அதில், வேட்பாளர் மீது எந்த அதிருப்தி இருந்தாலும், பிரதமர் மோடிக்காக பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்பதே அது.

மக்கள் வேட்பாளருக்காக வாக்களிப்பார்களா, பிரதமர் மோடிக்காக வாக்களிப்பார்களா என்பதை தேர்தல் முடிவுகள்தான் சொல்லும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com