ஈரோட்டில் திமுக களமிறக்கும் 3 அமைச்சர்கள்: 2014 தோல்வியில் இருந்து மீட்டெடுப்பார்களா?

ஈரோட்டில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன் மற்றும் கயல்விழி களமிறங்கவுள்ளனர்.
ஈரோட்டில் திமுக களமிறக்கும் 3 அமைச்சர்கள்: 2014 தோல்வியில் இருந்து மீட்டெடுப்பார்களா?

ஈரோடு மக்களவைத் தொகுதியில் 2014-ஆம் ஆண்டு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை துடைத்தெறியும் முனைப்பில் திமுக நேரடியாக களமிறங்கியுள்ளது.

2009-இல் ஈரோடு மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்ட பிறகு இதுவரை 3 தேர்தல்கள் நடைபெற்றுள்ளது. 2009 தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் கணேஷமூர்த்தி, திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை தோற்கடித்தார்.

மும்முனைப் போட்டி நிகழ்ந்த 2014 தேர்தலில் அதிமுகவின் செல்வகுமாரா சின்னையன் வெற்றி பெற்றார். தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் கணேஷமூர்த்தி இரண்டாமிடம் பிடித்தார். நேரடியாக களமிறங்கிய திமுக வேட்பாளர் பவித்ரவள்ளிக்கு மூன்றாமிடம்.

கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட கணேஷமூர்த்தி மீண்டும் வெற்றி பெற்று எம்பி ஆனார்.

இந்த நிலையில், கொங்கு மண்டலத்தில் திமுகவின் பலத்தை காட்டும் விதமாக இந்த முறை ஈரோடு தொகுதியை மதிமுகவிடம் இருந்தும், கோவையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்தும் திமுக பெற்றுள்ளது.

ஈரோடுக்கு பதிலாக மதிமுகவுக்கு திருச்சியும், கோவைக்கு பதிலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு திண்டுக்கல்லும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டை பொறுத்தவரை திமுக வேட்பாளருக்கு உறுதுணையாக அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் களத்தில் இறங்கவுள்ளனர்.

ஈரோட்டில் திமுக களமிறக்கும் 3 அமைச்சர்கள்: 2014 தோல்வியில் இருந்து மீட்டெடுப்பார்களா?
திருவனந்தபுரம்: மோதும் மூன்று நட்சத்திர வேட்பாளர்கள்!

இதுகுறித்து திமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், “திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று ஈரோடு தொகுதியை திமுகவுக்கே கட்சித் தலைமை ஒதுக்கியுள்ளது. கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். எங்கள் வேட்பாளரின் வெற்றி ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தொகுதியில் யார் களமிறங்கினாலும் திமுகவின் வெற்றிக்கு பாதிப்பில்லை. ஏனெனில், ஈரோட்டில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் திமுகவின் கூட்டணி 4-இல் வென்றுள்ளது. அதில், 3 பேர் அமைச்சர்களாக உள்ளனர். இது எங்களின் பலம்.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரோடு மக்களவைத் தொகுதியின் கீழுள்ள மற்ற இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் குமாரபாளையத்தில் அதிமுகவும், மொடக்குறுச்சியில் பாஜகவும் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றது.

ஈரோட்டில் போட்டியிடுவதற்காக கட்சியின் இளைஞரணி துணைச் செயலாளர் கே.இ.பிரகாஷ், ஈரோடு தெற்கு இளைஞரணி அமைப்பாளர் ஜே.திருவாசகம் மற்றும் திமுக நெசவாளர் பிரிவு செயலாளர் சச்சிதானந்தம் ஆகியோரின் பெயர்களை அமைச்சரும், திமுக மூத்த தலைவருமான முத்துசாமி தலைமையிடம் பரிந்துரைத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com